வெள்ளி, 1 டிசம்பர், 2017

001-வேத வியாசர்..மகாபாரதக் கதை வரிசை

ப்ரியமுள்ள நட்பூக்களே.. வணக்கம். 
இந்த முறை துவக்கம் பெறும் இந்த சித்திரக்கதை வரிசை மகாபாரதத்தின் ஒவ்வொரு தருணத்தையும் நினைவு கூறத்தக்கதாக சித்திரங்கள் வழி புராணக் கதையை ரசிகர்களுக்குக் கொண்டு சேர்க்கும் விதத்தில் அமர் சித்ர கதா புத்தக பதிப்பகத்தாரால் சிறப்பான வண்ணத்திலும் தரமான காகிதத்திலும் ஆங்கிலத்தில்  கொண்டு வரப்பட்டுள்ளது.. அனைவரும் வாங்கி வாசித்து மகிழ கேட்டுக் கொள்கிறேன். 

இது பழைய புத்தகங்களின் தொகுப்பு.. 

அமர்சித்ர கதைகளின் ஒரிஜினல் தமிழ் உரிமை உள்ளவர்கள் கேட்டுக் கொள்ளும்பட்சத்தில் பதிவினை நீக்கி விட உத்தேசம்.. அடுத்தடுத்து இதன் பாகங்களை வேலைக்கிடையில் கிடைக்கும் ஓய்வுப் பொழுதுகளில் சீரமைத்து பதிவிட எண்ணியுள்ளேன்.  சிறு வயதில் மகாபாரதத்தையும் ராமாயணத்தையும் புகட்டி வளர்த்த தலைமுறையில் வளர்ந்த அதிர்ஷ்டசாலிகளுள் எனக்கும் ஒரு வாய்ப்பு அமைந்தது இறைவன் கொடுத்த வரம். எனது பாட்டியார் மகாபாரதக் கதைகளையும், இராமாயணக் கதைகளையும் சிறு வயதில் அவர் இது காக்கா முட்டை, இது மைனா முட்டை, இது கொக்கு முட்டை, இது குருவி முட்டை என்கிற ரீதியில் ஊட்டி விடும் சோற்று உருண்டைகளுக்கு இடையே கதைகதையாக சொல்லிக் கொடுத்து வந்ததே சித்திரக் கதைகளாக நண்பர் திரு.ஸ்ரீராம் லக்ஷ்மணன் மூலம் ஸ்கானுக்கு கிடைத்தபோது அளவற்ற மகிழ்ச்சியைப் பெற்றேன். இந்தக் கதைக்கு எடிட்டிங் தொழில் நுட்ப உதவியும் ஆலோசனையும் கொடுத்து உதவிய திரு.சொக்கலிங்கம் பன்னீர்செல்வம் அவர்களையும் இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவு கொள்கிறேன். 
இனி கதை....






ஒரு சிறிய வண்ண முயற்சி.....




























சிறிய அளவில் ஒரு வண்ண முயற்சி...
இந்த பேனல் இதே கதையின் ஒரு பேனல்தான். எங்கே என்று கண்டு பிடியுங்கள். அப்படியே உங்கள் இல்ல குட்டீஸ்களுக்கு இந்தக் கதையை அறிமுகம் செய்து வையுங்கள். ஆங்கிலம் அறிந்த தலைமுறைகள் உருவாகி வரும் இவ்வேளையில் அவர்களுக்கு நேரடியாக ஆங்கில அமர்சித்ர கதையை வாங்கிக் கொடுத்து நமது இதிகாசங்களையும் புராணங்களையும் கற்றுக் கொடுப்பது நமது கடமை என்பதை உணர்ந்து செயல்படுங்கள். தர்மரின் வாழ்க்கை...ராமரின் வாழ்க்கை, ஆஞ்சநேயரின் பக்தி, சகுனியின் சதி, கவுரவர்களின் அராஜகம் என்று அத்தனையும் இளைய தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் கடமை நமக்குண்டு. நம் சந்ததியர் ஆண்ட்ராய்ட் வாழ்க்கைக்குள் மூழ்கி விடாமல் நமது பாரம்பரியமான கதைகளையும் கலாச்சாரங்களையும் காப்பது நமது கடமை. அதனை நாங்கள் தொடர்கிறோம். நீங்கள் உங்கள் பங்களிப்பையும் ஆற்றுங்கள்...   


இந்த வண்ணங்களில் மேலிருந்து இரண்டாவதாக உள்ள பச்சை வண்ணம் கண்ணுக்குக் குளுமையாகவும் படிக்க சுலபமாகவும் இருப்பதாக எனது அம்மா திருமதி.விஜயா சின்னப்பன் அவர்கள் கருதுகிறார். ஆகவே இம்முறை புத்தகத்தின் ஒரிஜினல் நிறத்தை உபயோகித்துள்ளேன். அடுத்த கதையில் இருந்து புது நிறத்தில்  தொடர்வதாக உள்ளேன்.

இந்த மகாபாரதக் கதையை தரவிறக்கம் செய்து வாசிக்க
ஏதுவாக பிடிஎப் பார்மட்டில்..
https://www.mediafire.com/file/rgks1wk1tahw4mw/001-Vedha%20Viyasar.pdf

இந்தக் கதையின் அட்டை வைத்திருக்கும் நண்பர்கள் எனக்கு jscjohny@gmail.com
jscjohny@facebook.com
அனுப்பி உதவலாம்.. நன்றி.

என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி..

2 கருத்துகள்:

Enter The Phantom_FREW First Issue வேதாளர் முதல் FREW இதழ்_கதைச்சுருக்கம்

 வணக்கங்கள் வாசக தோழமை உள்ளங்களே!                  இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது வேதாளர் சித்திரக்கதைகளின் உலகப் புகழ் பெற்ற FREW பதிப்ப...