வணக்கங்கள் பிரியமானவர்களே...
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன்...ஜானி சின்னப்பன்..
நமது ஹாபியான சித்திரக்கதை வாசிப்பு என்பது விசித்திரமானதொன்றாகும். இன்றுவரை இதன் நீள அகலங்களில் நீந்தித் திளைத்துத் திரியும் சுறாக்கள் ஏராளம். அவற்றுக்குத்தான் தெரியும் கடலைத் துளைத்து நீரைக் கிழித்து எம்பிக் குதித்து கடலை ஆள்வது எத்தனை இன்பமானது என்று... ஆனால் காலை வைத்தே பார்க்க அஞ்சி தொலைவில் நின்று கடலா? அதோ நீண்டு கிடக்கிறது பார்..அலை இழுத்துக் கொண்டு போய்டும்...தூர வந்துடு செல்லம்...என்று பல வாசகர்களை இந்தப் பக்கமே திரும்பிப் பார்க்கவிடாமல் வார்த்தைகளால் குத்திப் பார்க்கும் நபர்களுக்குத் தெரியாது அந்தக் கடல் எத்தனை கொண்டாட்டமானதொரு இடம் என்பதும் கடலில் காதலோடு நீந்தித் திரிவதில் உள்ள இன்பமும்....
நிற்க...
இது உயிரைத்தேடி...பகுதி இரண்டு...22.01.1988 ஒரு வெள்ளிக்கிழமையன்று தினமலர் நாளிதழால் வெளியிடப்பட்ட சிறுவர் மலர் இலவச இணைப்பில் காணக்கிடைத்த அற்புதமான தொடர்தான் இந்த உயிரைத் தேடி... சிறுவன் பிங்கி ஒரு அபூர்வமான இரத்தப்பிரிவை சேர்ந்தவன். அவனுடைய உற்றார், உறவினர், பெற்றோர், சுற்றம் அனைத்தும் ஏதோவொரு இனம்புரியாத நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விடுகின்றனர். அப்படிப்பட்டதொரு துன்பியல் சூழலில் குட்டிப் பையன் பிங்கி வேறெங்காவது சக ஜீவன்கள் தென்படுகின்றனவா என்று தேடிப் புறப்படுகிறான். அவனது பயணத்தில் அவன் சந்திக்கும் உயிர்கள்...அவைதான் இந்தத் தொடரை ஒவ்வொரு வாரமும் நாம் தேடித்தேடி மாய்ந்து மாய்ந்து வாசிக்க மிகவும் ஆர்வத்தைத் தூண்டி விட்ட காரணிகள்.
இந்தக் கதையின் ஒவ்வொரு அத்தியாயமும் உங்களை வெவ்வேறு தளங்களுக்கு அழைத்துச் செல்லும். கைகாட்டியாக நாங்கள் காமிக்ஸ் வாசகர்கள் அனைவரும் இங்கே கரம்கோர்த்து நிற்கிறோம்... வாசித்துத் தெளிவடையுங்கள். நாங்கள் வெறும் காமிஸ் வாசகர்களா, இல்லை அற்புதமான கற்பனைக்கெட்டாத ஒரு பயணத்தில் உங்களை விடப் பல மைல்கள் முந்திச் செல்லும் விண்கலத்தில் பயணிக்கும் பயணிகளா என்பதை நீங்களே வாசித்து முடிவெடுங்கள்... சித்திரக்கதைகள் சிறார்களுக்கானவைகள் மட்டுமல்ல அவை எதிர்காலத்தை நிகழ்காலத்தில் வாழ்ந்து பார்க்கும் ஒரு முயற்சி...
ஒத்துழைத்த அத்தனை நண்பர்களையும் நினைவுகூறும் சிறு முயற்சி இது...
தொடர்புடைய தளங்கள்...
http://muthufanblog.blogspot.in
http://muthufanblog.blogspot.in
Testing dot
பதிலளிநீக்குPrompting robot or not how disable செய்றதுப்பா நண்பர்காள் அடியேன் உஷலகுஷலாம்பிகே பக்தன் சான் ஜைமன்
பதிலளிநீக்குசத்தியமா நான் ரோபோ இல்லீங்கோ. யாருங்கோ கேக்குறது? நான் நானேதாங்க. மாயாவியார் கடுப்பானமாதிரி நானுமே கடுப்பாவுறேன். இது கூகிள்காரங்க காதுல உயுதா??
பதிலளிநீக்குஇப்போதைக்கு கமெண்ட் பகுதில ரோபோ கேட்டா பொசக்குன்னு ஒரு அழுத்திட்டு உள்ளே போய் கமெண்ட் போட்டுடுங்க கண்ணுகளா. திருத்திட முயற்சி பண்றேன்.
பதிலளிநீக்குJSC ஜானியை தேடி...
பதிலளிநீக்குஹேய்....நான் பாஸாயிட்டேன்...!!!!!!!!!
நீக்குமீ த பஸ்ட்டு........ :)))))))))
ஜான் நல்லா இருக்கு...கமெண்ட்ஸ் டக்குன்னு போகுது.! சூப்பர்..!! எதையும் மாத்தவேண்டாம்.!!!
நீக்குஷப்பாடி....
நீக்குஆஹா ஆமாம். இந்தக் குறையைத் தீர்த்து வைக்க உதவிய மாயாவியாருக்கு நண்பர்கள் சார்பிலும் என் சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குஅடுத்த பகுதி 03 வந்தாச்சா..!?!?
பதிலளிநீக்குஎப்பபெப்ப வரும் ??? ஏதும் செட்டியூல் இருந்தா சொல்லுங்களேன் போலீகார்.!
நேரமிருக்ககும்போதெல்லாம் தடக்குன்னு கியரை மாத்திப்புடுவோம். எப்போ வேணும்னாலும் அடுத்தது குதிக்கும்.
நீக்கு