Posts

Showing posts from March, 2015

இந்திய தண்டனை சட்டம் - குறிப்புகள் பகுதி இரண்டு!

Image
அன்பு நண்பர்களே! உதவி ஆய்வாளர் தேர்வுக்குத் தயாராகும் நண்பர்களுக்கு உதவும் விதமாக குறிப்புகள் சிறிது நம்ம வலைப்பூவிலும் கொடுத்தால் உதவிடுமே என்கிற எண்ணத்தில் சிறு குறிப்புகளாக, நினைவை புதுப்பித்துக் கொள்ளும் வகையில் கொடுத்துள்ளேன். ஒரு சின்ன  ஆலோசனை. நீங்க விளக்கமான இந்திய தண்டனை சட்டத்தினை வாசித்த பின் இதனை வாசித்தால் விளக்கமாகப் புரியும்.  தேர்வில் வென்று வாழ்வில் வளம் பெற என் வாழ்த்துக்கள் அத்தியாயம் -௨ இன் தொடர்ச்சி 26 - நம்பத்தகுந்த காரணம் 27 – மனைவி, எழுத்தர், வேலையாட்களிடம் உள்ள சொத்து 28 – கள்ளத் தயாரிப்பு 29 – பத்திரம் – ஆவணம் 29 A – மின்னணுப் பதிவுரு 30 – மதிப்பாவணம் 31 – உயில் 32 – செய்கைகளைக் குறிக்கின்ற சொல் சட்டத்திற்கு மாறாக விடுகைகளை உள்ளடக்கும். 33 – செய்கை அல்லது விடுகை 34 – பொதுவான உட்கருத்தை மேல்நடத்தும் வகையில் பல்வேறு ஆட்களால் செய்யப்பட்ட செய்கை 35 – அத்தகைய செய்கை குற்றமுறு அறிவுடன் அல்லது உட்கருத்துடன் செய்யப்படுகின்ற காரணத்தால் அது குற்ற செய்கையாக இருக்கும்போது 36 – பகுதி செய்கையாலும் பகுதி விடுகையாலும் உண்டாக்கப்பட்ட விளைவு 37 – பல்வேறு செய்கைகளில் ஒன…

இந்திய தண்டனை சட்டம் 1860 (Indian Penal Code - Important Sections from 01-25)

இந்திய தண்டனை சட்டம் 1860 (Indian Penal Code - Important Sections from 01-25) அத்தியாயம் – I அறிமுகம் முன்னுரை: இந்திய தண்டனை சட்டம் இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் லார்டு மெக்காலே மற்றும் ஆணையர்கள் மாக்ளியாட், ஆண்டர்சன், மில்லட் ஆகியோரால் 06.10.1860 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு  01.01.1862 ஆம் ஆண்டு முதல் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது. இதில் மொத்தம்  511 பிரிவுகள் அடங்கியுள்ளன. பிரிவு – 01 பெயரும், எல்லையும் இந்திய தண்டனை சட்டம் ஜம்மு காஷ்மீர் மாநிலங்கள் தவிர இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். பிரிவு – 02 இந்திய எல்லைக்குள் புரியும் குற்றங்களுக்குத் தண்டனைகள் இந்த சட்டப்பிரிவுகளில் கூறப்பட்டுள்ளபடி இந்தியாவில் குற்றம் புரிகின்ற குற்றவாளிகள் ஒவ்வொருவரும் தாங்கள் புரியும் குற்றத்திற்கு ஏற்ப தண்டனை பெறுவார்கள் மற்றும் சட்டப்படி செய்ய வேண்டியவற்றை செய்யாமல் விடுபவர்களும் இச்சட்டத்தின் கீழ் தண்டிக்கப் பெறுவார்கள். பிரிவு – 03 வெளிநாடுகளில் செய்யப்படும் குற்றங்களுக்குத் தண்டனைகள் இந்தயாவில் உருவாக்கப்பட்ட சட்டங்களுக்கு உள்ளடங்கிய இந்திய குடிமகன் ஒருவர் இந்தியாவிற்கு வெளியே இச்சட்டத்தில்…