Tuesday, 30 January 2018

ஆஞ்சநேயர் செய்த வேடிக்கை..கதை மலர்.
அனுமன் செய்த வேடிக்கையும் அறிவுரையும் கடமையையும் ஒழுக்கத்தையும் உணர்ந்து நடப்பதினால் வரும் ஆசீரையும் சிறப்பாக உணர்த்தும் கதை இது.  

உயிரைத் தேடி...007


வணக்கம் நண்பர்களே... கொடிய நோய் ஒன்று உலகைத்தாக்கியதால் மனித குலமே அழிந்தது. அபூர்வ இரத்த வகையைச் சேர்ந்த மிகச் சிலரே தப்பிப் பிழைத்தனர். அவர்களில் ஒருவனான நம் ஹீரோ மார்க் டேவிஸ் என்கிற பிங்கியின் தேடல் முழுவதும் தன்னைப் போன்ற மனித உயிர்கள் எங்காவது இருக்காதா என்கிற ஏக்கம் நிறைந்த தேடல். அவனது வழியில்தான் எத்தனை எத்தனை சோதனைகளைத் தாண்டி வர நேர்கிறது என்பதனை அதிர அதிரத் தொடுத்து மாலையாக்கியிருக்கிறார்கள். ஈகிள் நிறுவனத்தின் இந்த சூப்பர் ஹிட் கதையினை நமக்கு தின மலர் சிறுவர் மலரில் பரிசாக அளித்து மகிழ வைத்திருக்கிறது.
எனது பாட்டனார் திரு.அமிர்தன் அவர்களுக்கு இந்தக் கதைத்தொடர் சமர்ப்பணம்.. அன்னாரது நினைவு தினம் நாளை.. அவரது நினைவுகளுடன்...

அது ஒரு மகிழுந்து.. அதன் பின் பகுதி வைப்பிடத்தில் ஒரு அட்டைப் பெட்டி.. அது முழுக்க முழுக்க சித்திரக்கதைகள். அனைத்தும் ஸ்கான் செய்து கொள்ளுங்கள் என்கிற அன்புக்கட்டளையுடன் மொத்த புத்தகத்தையும் வாரிக் கொடுத்து அனுப்பினார் தன் பெற்றோரிடம் நண்பர் ஒருவர். ஆம் நண்பர்களே.. அவரது பெற்றோர்களே கொண்டு வந்து சென்னையில் கொடுத்து விட்டு சென்றார்கள். அந்தப் புத்தகங்கள் அனைத்தும் ஸ்கான் செய்யப்பட்டும் இது நாள் வரை ஒரு முறை கூட அந்த ஸ்கான்கள் என்னாயிற்று என்று அவர் கேட்டதில்லை. புத்தகங்களைக் கொடுத்து அனுப்பிவிட்டு போனில் சரியாக இருக்கிறதா பாருங்கள் என்றபோது அதெல்லாம் தேவையில்லை ஜி. நான் கொடுத்து அனுப்பியபோதே கூட இருந்தவற்றை அள்ளிப் போட்டுத்தான் அனுப்பினேன் என்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அவரது புத்தகங்களில் சில இரட்டை இதழ்கள் (டபுள்ஸ்) கூட இருந்தன என்பதுதான் ஹைலைட்ஸ். அவர் எங்களுக்கு செல்லமாக விக்கி.
நட்பு வட்டத்தில் இணைய...


மீட்பின் வரலாறு புண்ணியவான்களும் புண்ணியவதிகளும்...பாகம் -3 யூதித்

வணக்கம் நண்பர்களே..இது மீட்பின் வரலாறு மூன்றாம் பாகம். யூதித் என்கிற தீரமிகு பெண்ணின் வரலாறு இந்தக் கதை மூலம் அறியக் கிடைக்கிறது. விவிலியம் கூறும் நல்மாந்தர்கள் வரிசையில் இந்த யூதித் சிறப்பான வீரமிகு பெண்ணாகக் குறிப்பிடப்பட்டு இருக்கிறார். அவரது வரலாற்றை அறிய கதைக்குள் புகலாமா? 


Monday, 29 January 2018

உயிரைத் தேடி...006நண்பர் மாயாவி சிவாவைத் தொடர முகநூல் பக்கம்...

தொடரைத் தொடர்பவர்களுக்கு போனஸ் பக்கம்..ராமு சோமு.. 
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி சின்னப்பன்.. 

Friday, 26 January 2018

உயிரைத் தேடி...005

Image result for republic day images
வணக்கங்கள் தோழமை உள்ளங்களே..
அடுத்தடுத்து தொடரினைத் தொடர்வது என்பது சவாலான காரியம்தான். அந்த சவால் எனக்கும் பிடித்தமான ஒன்றுதான். ஆனால் சரியான இடைவேளையில் ஒரு தொடரைக் கொண்டு வர நேரமும், காலமும், மனமும், உடலும், ஆன்மாவும் ஒத்துழைப்பு கொடுத்தால்தான் சாத்தியமாகிறது. உங்கள் அனைவருக்கும் என் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். ஜெய் ஹிந்த்!

தன்னந்தனியாக வேறொரு மானிடப்பிறவி கண்ணில் தென்படாதா என்கிற ஏக்கத்துடன் தேடி அலைந்து கொண்டிருப்பவனுக்கு முன்னால் ஒரு விமானம் தரையில் மோதி சிதறுகிறது.. அதில் வந்த சிறுவனும் உடனே மரணமடைகிறான்..எப்பேர்ப்பட்ட ஏமாற்றம், இழப்பு, வேதனை சிறுவன் பிங்கியை (மார்க் டேவிஸ்) ஆட்கொண்டிருக்கும்? அதனை அந்த காலத்தில் வாசிக்க நேர்ந்திருக்கும் என்னைப் போன்றவர்கள் எத்தனை பதறிப் போய் இருப்போம்? இந்தப் பகுதி என் மனதில் ஏற்படுத்திய பாதிப்பு இன்றுவரை பசுமரத்திற் பதிந்த ஆணியாய்....

அடுத்தடுத்த பேனல்களில் திகிலைக் கூட்டுவதும் திகைக்க செய்வதும்தான் இந்தக் கதையின் போக்கு.... ஒற்றைக் கதையில் தங்கள் கதை, சித்திர ஆளுமையால் ராஜாங்கம் நிகழ்த்திக் காண்பித்துள்ளனர் டி.ஹார்ட்டனும், ஓவியர் ஓர்டிசும்.. ஈகிளின் கம்பீரமான தொடர்களில் ஒரு இறகு இது...
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி சின்னப்பன்...  

Thursday, 4 January 2018

உயிரைத்தேடி..004


சித்திரங்கள் பேசிடும் தருணம்தனில் 
மொழிகளுக்கு அங்கே
பிரிவேது? பேதம்தான் ஏது?
இந்தப் பக்கத்தை நண்பர்கள் தேடலில் கிடைத்தால் எனக்கு அனுப்பி வையுங்களேன்.. jscjohny@gmail.com
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி 


மகாபாரதம் முழுவதும் காமிக்ஸ் வடிவில்:

நண்பர் ஸ்ரீராம் லெட்சுமணனின் உதவியோடு திரு.இரா.தி.முருகன் அவர்களது புத்தகங்களைப் பெற்று ஸ்கேனித்து ஆவணப்படுத்தியுள்ள மகாபாரதம் முழு வடிவத்...