Posts

Showing posts from September, 2012

கதைக்கோர் கிழவி!

Image
அன்புள்ளம் கொண்ட நண்பர்களே!

இனிய வணக்கம்!
       நாம எல்லோருமே பாட்டி கதைகளை கேட்டுதான் வளர்ந்திருப்போம்! நம்ம பாட்டி சொல்லும் கதையில் பாட்டி வடை சுட, காக்கா கொத்தி கொண்டு போகும். அதை, நரி தந்திரமாக கவர்ந்து செல்லும்.
       ஏழு கடல்கள், ஏழு மலைகள், ஏழு ஆறுகள் கடந்து ஒரு ராஜ குமாரி நமக்காக காத்து கொண்டு இருப்பாள். பல தடைகளை உடைத்து கொண்டு போய் பேய்களுடனும், அரக்கர்களுடனும் மல்யுத்தம் புரிந்து மீட்டுக் கொண்டு வருவோம். குழந்தையாக மாறி அவற்றை தரிசித்தால், நாம அந்த கதா பாத்திரமாகவே மாறி விடுவோம். அந்த மன நிலைக்கு நம்மைக் கொண்டு போகும் கதைகள் என்றுமே தகுந்த வரவேற்பு பெறும். வரப் போகிற

                                                  "சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்"


விலை வெறும் நூறு ரூபாய் மட்டுமே மக்கா!
இந்த புத்தகத்தை அதை போன்ற லாஜிக் பார்க்காத மனத்துடன் படித்து, ரசித்து, ருசித்து, அனுபவித்து மகிழுங்கள் ! நண்பர்களே!!

       இது தவிர அறிவுரை சொல்லும் கதைகள் இங்கு நிறைய உண்டு! அவை நமது வாழ்வின் அடிப்படையாக அமைந்து நம்மை நல்வழியில் நடத்திச்  செல்லும்.முக்கியமாக "அவ்வை பாட்டி&qu…

இதுதான் சிவப்பிந்திய எழுச்சி!

Image
அன்புக்கு மட்டுமே அடி பணியும் நண்பர் கூட்டங்களே!
எதற்கும் அஞ்சா, அடி பணியா ஒரு வீரனின் கதை என்று தலைப்பில் இருந்தாலும் இதில் இரண்டு வீரர்களின் லட்சிய பயணங்கள் காட்டபட்ட்டுள்ளன.  இந்த கதை இடம் பெற்றது முத்து காமிக்ஸில். நெஞ்சில் வீரமும், மண்ணின் மானமும் சுமந்து வாழ்ந்த மக்களின் உரிமைகள் பறிக்கப்படும்போது அதை எதிர்த்து சீறி எழுவது வீரர்களின் அடிப்படை குணம். அப்படி எழும் தனி மனிதனின் கதை மட்டும் அல்ல இது ஒரு சமூகத்தின் போர்க்குரல் இது "எவர்க்கும் அடிபணியோம்" என்பதை உரக்க கூவி சொல்லும் வெற்றி கதை இது.   
முதலில் ஒரு அடிமை செவ்விந்திய வீரன்:     பாசமிகு குடும்பத்தினை, அன்பான சமூகத்தின் அரவணைப்பை, ராணுவ வீரர்களின் அடக்கு முறையில் இழந்து விட்டு வாழ்வை தொலைத்து விட்டு விட்டேத்தியாக வாழ்ந்து கொண்டிருந்தவன் "சாது மிரண்டால் காடு கொள்ளாது" என்ற கதையாக யுத்த இசையை ஒரு சாதகன் வாசித்ததை கேட்டு பழைய நினைவுகளால் கிளறப்பட்டு பொங்கி எழுகிறான். தன்னை வெறும் குடிகாரனாக நினைக்கும் வெள்ளையர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கும் நோக்கில் மீண்டும் அடிமை வாழ்வை மேற்கொள்ள மாட்டேன் என்று தன் இயற்கை …

ஒரு டமால் டுமீல் படலம்!!

Image
வணக்கம் நண்பர் கூட்டங்களே!
முதலில் நம் நண்பர் திரு.சௌந்தர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
நிகழும் மேற்கு அதிரடியில் மாதம் ஒரு வாசகர் பக்கத்தில் இடம் பெற்ற பெருமை அவரையே சாரும்!

வைல்ட் வெஸ்ட் ஸ்பெஷல்!!! மிக அட்டகாசமாக வெறும் ரூபாய் நூறில் அதிரடியாக வெளியாகி பட்டையை கிளப்பி கொண்டுள்ள புதிய புத்தகம். வெளியீடு முத்து காமிக்ஸ். கண்டிப்பா உங்க பிரதியை தவற விடாதீர்கள் நண்பர்களே.  அட்டை இப்படிதான் அதி அற்புதமாக பாலையின் சோகத்தை மனதில் பதிய வைப்பது போல இருக்கு! அமெரிக்க நாட்டின் அதிரடியான துவக்க பக்கங்களை வரலாறு என்றுமே மறவாது. சிவப்பு இந்தியர்களின் வளமை மிக்க தேசத்தை சொந்தம் கொண்டாட அமெரிக்கோ வெஸ்புகி வழியமைத்து கொடுத்தார். கொலம்பஸ் முதலில் கண்டு பிடித்தாலும் அதனை முறையாக உலகுக்கு இது இந்தியா அல்ல-வேறு நாடு என்று அறிவித்ததால் அமெரிக்கோ "அமெரிக்கா" நாட்டின் பெயரில் இடம் பிடித்தார். ஆரம்ப களத்தில் பல்வேறு நாடுகளின் மக்களும் வந்து சொந்தம் கொண்டாட, அதனால் சிவப்பிந்தியர்கள் திண்டாட, நாமெல்லாம் இன்று படித்து மகிழும் அத்தனை அதகளமும் அரங்கேற, அதில் ஒரு பங்காக இன்று நம் முன்னால் மரண நகரம் மிசெள…

அதிரடியின் திசை மேற்கு!

Image
அன்புள்ளம் கொண்ட அரிய நண்பர்களே! அனைவருக்கும் வணக்கங்கள் ! மரண நகரம் மிசெளரி-எமனின் திசை மேற்கு ஆகிய மேற்கு உலக அதிரடி பக்கங்களை இன்னும் சில நாட்களில் ருசிக்க உள்ள நாம், ஒரு நினைவு கூறும் முயற்சியாக கணவாய் கதைகள் என்ற பெயரில் முத்து காமிக்ஸில் வந்த கதை வரிசையின் முதல் பாகம் உங்கள் பார்வைக்கு, மற்ற பாகங்கள் குறித்த அறிவிப்பு வைல்ட் வெஸ்ட் ஸ்பெஷல் புத்தகத்தில் வரலாம் என்று ஆர்வமாக எதிர்பார்த்து இருக்கிறேன். இந்த நூல் ஹாரர் ஸ்பெஷல் புத்தகத்தின் பின் இணைப்பாக வெளியானதாகும். 
இயந்திரப் படையும்!!! இரும்புக்கை மாயாவியும்!!

Image
வணக்கம் காமிக்ஸ் உலக கலக்கல் மன்னர்களே! ரசிகர்களே! அதி தீவிரமாக காமிக்ஸ்முயற்சிகளை தமிழில் ஆதரித்து வரும் மக்களே! தங்கள் வருகைக்கு என் நன்றிகள் மற்றும் வணக்கங்கள்!           இந்த முறை நமது அற்புதமான ஆற்றல் படைத்த இரும்புக்கை மாயாவியை பற்றிய பதிவோடு வந்து இருக்கிறேன்! மாயாவி என்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்பார்கள் நமது தமிழக காமிக்ஸ் ரசிகர்கள் ! அப்படிப்பட்ட மாயாவியாரின் ஒரு கதை இயந்திர படை. இந்த கதை வந்து பல ஆண்டுகள் கழிந்த நிலையில் சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் மூலமாக இக்கதையின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. ஆகவே இந்த பதிவு மிகவும் பயன் நிறைந்த பதிவாக இருக்கும் என்று கருதுகிறேன்!
மாயாவி யார்?
       திருவாளர் லூயிஸ் க்ராண்டால் என்கிற ஒரு விஞ்ஞானக் கூட உதவியாளர்தான், தற்போதும் வெறித்தனமாக என்னால் மற்றும் என் காமிக்ஸ் நண்பர் படைகளால் பெருமையாக நேசிக்கப்படும் மாயாவி அவருக்கு ஒரு விஞ்ஞான கூடத்தில் நடைபெற்ற விபத்தில் கை ஒன்று துண்டாகி போகிறது. கை துண்டான நிலையில் அவருக்கு விபத்தில் சிக்கியதால் கிடைத்த அரிய பரிசே மாயமாக மறையும் தன்மை.  அவரது தலைமை விஞ்ஞானி திரு பாரிங்…