திங்கள், 10 செப்டம்பர், 2012

ஒரு டமால் டுமீல் படலம்!!

வணக்கம் நண்பர் கூட்டங்களே!
முதலில் நம் நண்பர் திரு.சௌந்தர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
நிகழும் மேற்கு அதிரடியில் மாதம் ஒரு வாசகர் பக்கத்தில் இடம் பெற்ற பெருமை அவரையே சாரும்!

வைல்ட் வெஸ்ட் ஸ்பெஷல்!!! மிக அட்டகாசமாக வெறும் ரூபாய் நூறில் அதிரடியாக வெளியாகி பட்டையை கிளப்பி கொண்டுள்ள புதிய புத்தகம். வெளியீடு முத்து காமிக்ஸ். கண்டிப்பா உங்க பிரதியை தவற விடாதீர்கள் நண்பர்களே. 
அட்டை இப்படிதான் அதி அற்புதமாக பாலையின் சோகத்தை மனதில் பதிய வைப்பது போல இருக்கு! அமெரிக்க நாட்டின் அதிரடியான துவக்க பக்கங்களை வரலாறு என்றுமே மறவாது. சிவப்பு இந்தியர்களின் வளமை மிக்க தேசத்தை சொந்தம் கொண்டாட அமெரிக்கோ வெஸ்புகி வழியமைத்து கொடுத்தார். கொலம்பஸ் முதலில் கண்டு பிடித்தாலும் அதனை முறையாக உலகுக்கு இது இந்தியா அல்ல-வேறு நாடு என்று அறிவித்ததால் அமெரிக்கோ "அமெரிக்கா" நாட்டின் பெயரில் இடம் பிடித்தார். ஆரம்ப களத்தில் பல்வேறு நாடுகளின் மக்களும் வந்து சொந்தம் கொண்டாட, அதனால் சிவப்பிந்தியர்கள் திண்டாட, நாமெல்லாம் இன்று படித்து மகிழும் அத்தனை அதகளமும் அரங்கேற, அதில் ஒரு பங்காக இன்று நம் முன்னால் மரண நகரம் மிசெளரி::
நம்ம டைகர் பற்றி அறிமுகம் தேவையா? இருந்தாலும் நம்ம திசையில் ஒருக்கா யாரவது ஒதுங்கினா அவங்களுக்கு புரிய வைக்க ஒரு கதை. மத்த நண்பர்கள் தாவிடுங்க. இவர் நம்மில் ஒருவன். சாதாரண மனிதன். மிக மட்டமான நிலை வரை கீழ இறங்கி அடிப்பார். மேல ஏறியும் அதிரடிப்பார். சும்மா இல்ல அந்த கால அமெரிக்க பிரசிடென்ட் வரை இவரது நட்பு உண்டு. நட்புக்கு உயிரையும் கொடுப்பார். கதையின் நாயகனாக வாழ்வார். படிக்கும் வாசகர்கள் தாங்களே டைகர் ஆக உணர வைப்பார். நல்ல ஒரு நாயகர். நம்ம முத்து காமிக்ஸ் தங்க கல்லறை மூலம் அறிமுகம் ஆகி வாசக நெஞ்சங்களில் வாழ்கிறார். அட்டகாசமான கௌ பாய்! 
கதை நாயகன் புதியவர். கதை சொல்லும் விதம் சோகத்தை வரவழைக்கும். அந்த காலகட்ட வாழ்வை பதிவாக்கி உள்ளனர். நாயகர் நம்ம பதினாறாவது ஆண்டு மலரில் இடம் பெற்ற பெயரில்லா (அல்லது முக்கியதுவம் அற்ற) நாயகர் போன்று இருக்கிறார். வெஸ்டர்ன் என்ற பெயரில் வெளி நாட்டில் வெளியான கதை தொடரில் இடம் பிடித்த கதை வரிசை. 

இது போன்ற அதிரடிகளுக்கும் பஞ்சம் இல்லை நண்பர்களே 


 அதிரடிகளுக்கு எல்லாம் அரசனின் அறிக்கை கீழே::




யூனியன் பசுபிக் மற்றும் சென்ட்ரல் பசுபிக் கம்பெனிகளின் அடிதடியில் நடுவே டைகர் புகுந்து புறப்படுகிறார். இரும்புக்கை பொருத்தி இருக்கும் கயவன் செவ்விந்திய கூட்டங்களை யூனியன் பசுபிக் கம்பனிக்கு எதிராக திசை திருப்பி விட அடிதடி ஆரம்பம். டைகர் தலையீட்டை முறியடிக்க முயலும் இரும்புக்கை அரக்கனின் அதிரடி அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது இந்த கதையில். எனவே மறக்காமல் வாங்கி விடுங்க. இதன் ஆரம்ப பாகங்களை நம்ம விஜயன் சாரிடம் கலாட்டா பண்ணி பதிப்பிட வைத்து விடலாம் நண்பர்களே. 

லார்கோ வரார்! பராக்! பராக்!


வாழ்த்துக்கள் மகேந்திரன்! 








  அனைத்து ஸ்கான்களுக்கும் நன்றி சௌந்தர் அவர்களையே சாரும்! அவரது பதிவு http://tamilcomics-soundarss.blogspot.in/ அங்கே காத்திருக்கிறது!
மறக்காம வாங்கிடுங்க நண்பர்களே டுமீல்! டுமீல்! 

14 கருத்துகள்:

  1. "ஒரு டமால் டுமீல் படலம்!!"
    ஒரு டமால் டுமீல் பதிவு! :)

    பதிலளிநீக்கு
  2. // ஆரம்ப களத்தில் பல்வேறு நாடுகளின் மக்களும் வந்து சொந்தம் கொண்டாட, அதனால் சிவப்பிந்தியர்கள் திண்டாட, நாமெல்லாம் இன்று படித்து மகிழும் அத்தனை அதகளமும் அரங்கேற, அதில் ஒரு பங்காக //

    நண்பா ... கவிஞர்கள் உங்களிடம் பாடம் படிக்க வரணும் போல இருக்கே ...


    எப்படி இப்படி எல்லாம் ? சூப்பர் :)

    பதிலளிநீக்கு
  3. //இதன் ஆரம்ப பாகங்களை நம்ம விஜயன் சாரிடம் கலாட்டா பண்ணி பதிப்பிட வைத்து விடலாம் நண்பர்களே.//


    ஹ ஹ ஹ.
    கண்டிப்பாக ரகளையில் நானும் பங்குகொள்வேன்.
    கேட்கறது கேகறோம் கலரிலேயே கேட்டு விடுவோம்

    பதிலளிநீக்கு
  4. நல்வரவு கார்த்திக் அவர்களே!
    நன்றி! நிறைய பதிவிடுங்க ஜி!

    பதிலளிநீக்கு
  5. நல்வரவு நாகா! சும்மா முயன்று பார்த்தேன்!

    பதிலளிநீக்கு
  6. நன்றி திரு க்ரிஷ் அவர்களே! தங்கள் அன்பான ரகளை கண்டிப்பா நம்ம ஆசிரியரை இன்னும் இன்னும் அதிகமாக செயல்பட வைக்கும்.

    பதிலளிநீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. வழக்கம் போல் நல்ல பதிவு நண்பரே.

    உங்கள் புதிய அவதார் கையில் துப்பாக்கியுடன் உங்களுக்கு பொருத்தமாகவே உள்ளது நண்பரே.

    உங்கள் வலைப்பூவில் "FOLLOWER" எங்கே நண்பரே என்னால் கண்டறிய முடியவில்லை (அதனால் உங்களை தொடர இயலவில்லை).

    வாழ்த்துக்களுக்கு நன்றி. இந்தப் பதிவிலும், இதற்குமுன் லக்கி லூக் பற்றிய பதிவிலும் என்னை நினைவு கூர்ந்ததற்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  9. வருகைக்கு மிக்க நன்றி நண்பரே நிறைய பழைய கதைகளை குறித்து எழுதுங்கள். என்றும் அதே அன்புடன் ஜானி

    பதிலளிநீக்கு
  10. how i insert follower?? Can anybody help me? friends? i am a new blogger and old comics lover. i just come to online for sharing my habit with other friends like u!!!! அட வெக்கப்படாம உதவுங்கப்பா!

    பதிலளிநீக்கு
  11. நண்பா

    அடுத்த முறை நீங்கள் வரும்பொழுது நியாபகப்படுத்துங்கள். உங்களுக்கு ஏற்ப்படுத்த நான் சொல்லி தருகிறேன்.

    நமக்கு ப்ளாக் இல்லேனாலும் ப்ளாக் பத்தி கொஞ்சம் கொஞ்சம் தெரியும் :)

    எனக்கு தெரிந்தவற்றை உங்களுக்கு சொல்லி தருகிறேன்.

    பதிலளிநீக்கு
  12. //அடுத்த முறை நீங்கள் வரும்பொழுது நியாபகப்படுத்துங்கள். உங்களுக்கு FOLLOWERS ஏற்ப்படுத்த நான் சொல்லி தருகிறேன்.//

    பதிலளிநீக்கு
  13. நன்றி நண்பா ஒரு வழியாக செய்து விட்டேன். பார்த்து விட்டு சரிதானா என சொல்லுங்கள்!

    பதிலளிநீக்கு

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...