Tuesday, 4 September 2012

இயந்திரப் படையும்!!! இரும்புக்கை மாயாவியும்!!

வணக்கம் காமிக்ஸ் உலக கலக்கல் மன்னர்களே! ரசிகர்களே! அதி தீவிரமாக காமிக்ஸ்முயற்சிகளை தமிழில் ஆதரித்து வரும் மக்களே! தங்கள் வருகைக்கு என் நன்றிகள் மற்றும் வணக்கங்கள்!
          இந்த முறை நமது அற்புதமான ஆற்றல் படைத்த இரும்புக்கை மாயாவியை பற்றிய பதிவோடு வந்து இருக்கிறேன்! மாயாவி என்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்பார்கள் நமது தமிழக காமிக்ஸ் ரசிகர்கள் ! அப்படிப்பட்ட மாயாவியாரின் ஒரு கதை இயந்திர படை. இந்த கதை வந்து பல ஆண்டுகள் கழிந்த நிலையில் சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் மூலமாக இக்கதையின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. ஆகவே இந்த பதிவு மிகவும் பயன் நிறைந்த பதிவாக இருக்கும் என்று கருதுகிறேன்!
          

மாயாவி யார்?

       திருவாளர் லூயிஸ் க்ராண்டால் என்கிற ஒரு விஞ்ஞானக் கூட உதவியாளர்தான், தற்போதும் வெறித்தனமாக என்னால் மற்றும் என் காமிக்ஸ் நண்பர் படைகளால் பெருமையாக நேசிக்கப்படும் மாயாவி அவருக்கு ஒரு விஞ்ஞான கூடத்தில் நடைபெற்ற விபத்தில் கை ஒன்று துண்டாகி போகிறது. கை துண்டான நிலையில் அவருக்கு விபத்தில் சிக்கியதால் கிடைத்த அரிய பரிசே மாயமாக மறையும் தன்மை.  அவரது தலைமை விஞ்ஞானி திரு பாரிங்க்டன். அவரது வலது கை மணிக்கட்டு வரை வெட்டப்பட்டு விட அதற்கு பதிலாக பொருத்தபடுவதுதான் இரும்புக்கை!

                    இரும்புக்கை பல விஷேச அம்சங்கள் நிறைந்தது. அவற்றினை கதையை படிக்கும்போதே நன்றாக கண்டு களிக்க முடியும். 
இதோ கதையின் முன் அட்டை : 

 
நன்றிகள் கிங் விஸ்வா அவர்களுக்கு உரித்தாகுக! 
 கதை என்னன்னா நம்ம மாயாவியின் நிழல் படை தலைவர் நீலோன் உறை நிலையில் இருக்கிறார். அவரை காப்பாற்ற வழி அறியாது விஞ்ஞானிகள் திகைத்து நிற்கிறார்கள். 

  கிறிஸ்டோ ரே என்கிற துப்பாக்கி போன கதையில் தீய சக்திகளுக்கு பயன்பட்டு உள்ளது. (போன கதை எது என விவரம் அறிந்தவர்கள் சொல்லுங்க நண்பர்களே) 
அந்த துப்பாக்கியை எதிர் இயக்க நிலையில் வைத்து இயக்கி அவரை நம்ம மாயாவி காப்பாற்ற அவரோ இதுக்கு நன்றி காட்டாம நீதான்யா இதுக்கு காரணம் என்று அவர் மேலே விழுந்து பிடுங்குகிறார். அந்த சமயம் பார்த்து நிழல் படையின் சிறப்பான உளவாளி வர அவரை மேஜர் நீலோன் பாராட்டுகிறார்.ஆனால் அந்த உளவாளி ஒரு வெடி குண்டை எடுத்து கொலை வெறியோடு மேஜர் மீது வீசுகிறார்.

நம்ம இரும்பு கரம் காக்கிறது! 


எதனால் இப்படி ஆனார்? மாயாவி உண்மையை கண்டறிய புறப்படுகிறார். அவரது சேட்டை தாங்காத மேஜர் அவஅவரது சகா வைத்து இருந்த பழம் பொருட்கள் கடைக்கு செல்கிறார் அங்கே அவர் மீது தாக்குதல் நடக்கிறது.  

       கதையின் முக்கியமான பகுதி இது ! நம்ம இரும்பு கையாரை இயந்திர சிலந்திகள் சுற்றி வலை பின்னி மடக்கி விடுகின்றன. தலைவரை அறிமுகபடுத்தும் அட்டகாசமான காட்சி இது. வில்லன் ஒரு இயந்திரம்தான். மனித மூளையுடன் இயந்திர உடலுடன் நடமாடும் இயந்திரமாக அறிவாளி ஹெர்மன் என்னும் விஞ்ஞானி உலா வருகிறார். அவரது அட்டகாசங்கள் நிறைந்த பரபரப்பு மிக்க அற்புதமான கதை இது. 


அவரின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட மாயாவி மனோவசிய மருந்தால் பாதிக்கப் பட்டு நிழல் படை அலுவலர்களை குறித்து பட்டியல் வைத்திருக்கும் ரகசிய இடத்தை அடைய அவர் செய்யும் கலாட்டாக்கள் மிக பயங்கரமானவை. தொழில் நுட்ப ரீதியில் நிழல் படையினரும் அதீத நிலையில் இருக்கிறார்கள். பட்டியல் அடங்கிய மூன்று மாத்திரை வடிவிலான கேப்சூல்கள் ரோபோ காவலர்கள், ஆக்ரோஷமான நாய்கள், மின்சார வேலி ஆகிய பாதுகாப்பு அரணில் இருக்கின்றன. 

மாயாவி நல்லவர் என்று தீவிரமாக நம்பும் மோரிஸ் அவரை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் நட்புக்கோர் நல்லதொரு எடுத்துக்காட்டு ஆகும். இதில் அ.கொ.தீ.க. நபர்கள்தான் பின்னணியில் செயல்படுகிறார்கள் என்ற உண்மை வெளியே வருகிறது. மற்றவற்றை படித்து ரசியுங்கள் நண்பர்களே. இந்த நூல் எனக்கு அன்பளிப்பாக கொடுத்து படிக்க உதவிய அரிய நண்பர் திரு.முருகவேல் பாண்டியன் அவர்களுக்கும், எங்களை எல்லாம் தூண்டி விட்டு கொண்டிருக்கும் திரு.விஜயன் அவர்களுக்கும், எங்கள் அன்புக்குரிய வழிகாட்டி கிங் விஸ்வா அவர்களுக்கும், நண்பர் ஸ்டாலின், திருப்பூர் புளு பெர்ரி நாகராஜ் அவர்களுக்கும் நன்றிகள் பல. மற்ற நண்பர்களும் தங்கள் வசம் உள்ள அபூர்வ படைப்புக்களை பகிர்ந்து மகிழுங்களேன். அப்பப்போ விசிட் அடிங்க அடுத்தடுத்த பக்கங்களை பார்க்கலாம். இப்போ விடை கொடுங்க நண்பர்ஸ்!

இதழின் பின் அட்டை கீழே:

இதுக்கடுத்த புத்தக விளம்பரம். 
இந்த புத்தகம் இருக்கும் நண்பர்கள் உங்க வசமுள்ள புத்தகத்தினை இது போல பதிவிட்டு எங்களை மகிழ்விக்கலாமே!இல்லை என்றால் எனக்கு தெரிவியுங்கள். மிக உதவியாக இருக்கும்.  என்றும் அதே அன்புடன் விடை பெறும் உங்கள் இனிய நண்பன்---- ஜானி 
அப்புறம் ஒரு சின்ன வேண்டுகோள் இவ்வளவு நல்ல காமிக்ஸ் வெளியீடுகளை தங்கி வரும் நம்ம முத்து காமிக்ஸ் தனது நாற்பதாவது ஆண்டு மலரை கொண்டு வரவிருக்கிறார்கள். முன்பதிவுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து வெளியிடப்படுவதால் உங்க பிரதிக்கு முந்துங்க. 

14 comments:

 1. Super Post நண்பரே.

  நல்ல நட்பு தங்கத்தை விட உயர்ந்தது - அப்பாவிகள் குழு வாசகம்.

  ReplyDelete
 2. வருகைக்கு நன்றி வாத்தியாரே!

  ReplyDelete
 3. நண்பரே,
  இவ்வளவு பழைய நைந்த புத்தகம் இப்படியே கிடைத்ததா? அல்லது இப்படியே பாதுகாக்கப்பட்டதா? எப்படி இருப்பினும் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete
 4. நல்வரவு பரிமள்! இப்படியேதான் என் நண்பருக்கு கிடைத்ததாம். தங்கள் பாராட்டுக்கள் முருகவேல் அவர்களையே சாரும்!

  ReplyDelete
 5. கிடைத்தற்கரிய பொக்கிஷம்.
  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே.
  உங்களுடைய பதிவுகள் வருவதே எனக்கு தெரியவில்லை நண்பரே.
  விஸ்வா அவர்களின் வலை பூ மூலம் தான் தெரிந்தது.
  ஒரு சிறு வேண்டுகோள் தயவு செய்து உங்களை தொடருவருவதர்கான Gadget உங்கள் வலை பூவில் சேர்த்தால் சந்தோசமாக தொடருவேன்.

  ReplyDelete
 6. வருகைக்கு நன்றி க்ரிஷ்! கண்டிப்பா நீங்க சொன்னதை செய்றேன். அந்த Gadget எப்படி சேர்க்கணும் என்று மட்டும் சொல்லி கொடுங்க நண்பரே!

  ReplyDelete
 7. ஹி ஹி நாம இந்த ப்ளாக் தொடங்கனதே நம்ம நண்பர் கிங் விஸ்வா அவர்களது தமிழ் பதிவுகளை படித்துதான்.

  ReplyDelete
 8. //நல்ல நட்பு தங்கத்தை விட உயர்ந்தது - அப்பாவிகள் குழு வாசகம்.//


  இப்பொழுதுதான் கார்சனின் கடந்த காலம் படித்து (உண்மையாகவே அருமையான கதை) முடித்து விட்டு, இங்கே வந்தால் "நல்ல நட்பு தங்கத்தை விட உயர்ந்தது" என்கிறார் நண்பர் விஸ்வா.

  கிரேட் ... உண்மை ....

  ReplyDelete
 9. ஆமாம் நண்பரே அருமையான நண்பர்கள் கிடைத்தது நான் செய்த பாக்கியம்.

  ReplyDelete
 10. சாரி நண்பரே,இப்போதுதான் தங்களது பதிவை பார்த்தேன்.வழக்கம் போலவே லேட்.அற்புதமான ஒரு பொக்கிஷம் என காட்டுவது போல நைந்துள்ள புத்தகம் .அற்புதமான மனம் நிறைந்த தங்களது பதிவிற்கு நன்றி.

  "அவர்கள் காத்திருந்தது நீ நினைப்பதை விட நீண்ட காலம் டாம்" இருபத்தைந்து வருடங்...............அப்பாவிகளின் பேச்சினூடே ....இதன் இரண்டாம் பாகத்திற்காக நாமும்தானே நண்பரே...............நீண்ட காலங்கள் ....................

  ReplyDelete
 11. நல்ல நட்பு தங்கத்தை விட உயர்ந்தது - அப்பாவிகள் குழு வாசகம்.
  உண்மை புத்தகம் முழுதுமே சிறந்த வாசகங்கள் நிறைந்திருக்கும்.............

  ReplyDelete
 12. nanraaga soneer steel claw avargale

  ReplyDelete
 13. வணக்கம்...

  வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : ரூபக் ராம் அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கனவு மெய்ப்பட

  வலைச்சர தள இணைப்பு : பனியைத் தேடி - பனி சறுக்கு விளையாட்டு

  ReplyDelete

மலர்_24_இதழ்_33_3.00_ தளபதி சதி_வேதாளர்_இந்திரஜால் காமிக்ஸ்_அலெக்ஸ்சாண்டர்

ஹாய் ஆல்... இது இந்திரஜால் காமிக்ஸ் நேரம்.. இப்போது தளபதி சதியை உங்களுக்கு வழங்க முன்வந்து தானே கைபேசி வழி ஒளி வருடல் செய்து முயற்சித்தி...