சனி, 25 ஏப்ரல், 2020

கண்ணாம்பூச்சி-மாலைமதி காமிக்ஸ்_வெள்ளை இளவரசியார்


*தமிழில் வெளிவந்த மாலைமதி காமிக்ஸ் பிடிஎப்*
*கண்ணாம் பூச்சி*
*மகிழவைக்கும் க்ரைம் த்ரில்லர் நெகிழ வைக்கும் தன் முடிவில் !!*
வெள்ளை  இளவரசியை கொள்ளை கொண்ட மணாளர் !
கள்ளமில்லா சிரிப்புக்கு காலமெல்லாம் சொந்தக்காரர் !! கல்விச் செல்வத்தை கற்றுத் தருவதில் கனிவுமிகுந்த ஆசிரியர் !
நெல்லும் காய்கறிகளும் தந்து உலகம் காக்கும் விவசாயி !!
*சென்னிமலை ஆசிரியர் சரவணனுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள்*
இந்த இந்த நன்னாளில் அந்த நல்ல மனிதரை கௌரவப்படுத்த ஒரு மாலைமதி தமிழ் காமிக்ஸின் வெளியீடு

கதையை பற்றி கொஞ்சம் ...
துரைவேலனை தாக்கியதற்காக சிறையிலிருந்து திரும்பும் ரவி... இடைப்பட்ட காலத்தில் தங்கை கீதா அந்த துரைவேலனுக்கே மனைவியாகி இருக்கும் அதிர்ச்சி... ரவியின் வாழ்வில் குறுக்கிட்டு தொடர்ந்துவரும் ஒரு மர்ம குழந்தை .... அது பற்றிய ரகசியம் தெரிந்ததும் அவன் அடையும் ஆவேசமும் ஆத்திரமும்... தன்னையும் குழந்தையையும  துரைவேலனிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள அவன் ஓடும் ஓட்டம்... இறுதிக் கட்டமோ நம் இதயங்களை சிறிது நேரமாவது கனமாக வைத்திருக்கும்.. மாலைமதி காமிக்ஸில் முழுவதுமாக வெளிவந்த இந்த குமுதம் தொடர் படக்கதை இன்று உங்களை மகிழ்விக்க பிடிஎஃப் வடிவில்
*தமிழில் வெளிவந்த மாலைமதி காமிக்ஸ் பிடிஎப்*
*கண்ணாம் பூச்சி*
*மகிழவைக்கும் க்ரைம் த்ரில்லர் நெகிழ வைக்கும் தன் முடிவில் !!*


திங்கள், 6 ஏப்ரல், 2020

ஓடு..கொரோனா..ஓடு..


கொன்று தீர்க்கும்
கோரப் பசியை
கொண்டுதித்த 
கொரோனாவே..

கபத்தை
சுரத்தை
வெல்லும்
வரத்தை
சித்தர் முன்பே
எழுதி வைத்தார்..

அறிவும்
ஆற்றலும்
கொண்டுனை
வதைத்து
விலக்கி
கொல்வோமே..

தனித்து
விலகி
தவமே
செய்த
மூத்ததெம்
தமிழ்க்குடியே..

தனித்திருத்தல்
புதிதல்ல
புதிருமல்ல
எம்மோர்க்கு

விரட்டியடிப்போம்..
விலகியே..
வீழவைப்போம்
உன்னையே..
தொட நினைக்காதே
எம் மண்ணையே..
கொன்றொழிப்போம்
உன்னையே..

-ஜானி சின்னப்பன்

ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

ஏய்..மானிடா..ஜானி




பெற்ற தாயாய் 
உனைத் தாங்கும்
பூவுலகை 
வெற்றி கொண்ட 
கர்வம் கொண்டு 
நடைபயின்ற மானிடா...
அகிலம் அளக்க 
கடலைக் கடக்க 
யுத்தம் நூறு செய்திட்டாய்.. 
பல தலைகள்..
பல உயிர்கள்..
காவுகூட வாங்கினாய்..
ஒற்றை கிருமி 
உந்தன் தேகம் 
துரத்தக் கண்டு 
ஓடினாய்..
அடக்கியாளும் 
மனதை மாற்று.. 
சேவை செய்யும் 
இதயம் கைக்கொள்..
மீண்டும் வாழ 
வாய்ப்பிருந்தால்..
மீண்டு வா..வா..
மனிதனாய்..
-ஜானி

வெள்ளி, 3 ஏப்ரல், 2020

தீர்க்கா நாளை தீர்க்கப்படுவாள்-ராஜேந்திரகுமார் நாவல்..



உடல் மறைந்தாலும்
புகழ் குறையாத
*புதுமை எழுத்தாளர் ராஜேந்திரகுமாரின்*
*தீர்க்கா நாளை தீர்க்கப் படுவாள்*
*அமானுஷ்ய திகில் நாவல்*
விபத்தில் அகால மரணமடைந்த ஜூலி என்ற தீர்க்கா உடனடியாக மறுமணம் செய்துகொண்ட கணவன் ராம்தாஸுக்கு வரும் கடிதங்கள் மூலமாக திரும்பவும் வருகிறாள். தன் கல்லறைக்கு மண்டபம் கட்ட நிர்பந்திக்கிறாள். இதற்கிடையே அவளது மரணம் விபத்தா கொலையா என காவல்துறை சந்தேகிக்கிறது. ராம்தாஸ் அவளது அண்ணன் பீட்டரின் உதவியை நாடுகிறான். இறுதியில் பல மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றன. தீர்க்காவின் ஆவி தன் முயற்சியில் வெற்றி பெற்றதா என்பதை இந்த திகில் நாவலின் கடைசிப் பகுதியில் தெரிந்து கொள்ளுங்கள்.. வீட்டில் இருந்து வெளியேறாமல்  படித்து நேரம் போக்குவதற்காக இன்றும் பிடிஎஃப் வடிவில்
போனஸ்:: சுபா எழுதிய குறுநாவல் ஒன்று இதே இணைப்பில்
உடல் மறைந்தாலும்
புகழ் குறையாத
*புதுமை எழுத்தாளர் ராஜேந்திரகுமாரின்*
*தீர்க்கா நாளை தீர்க்கப் படுவாள்*
*அமானுஷ்ய திகில் நாவல்*


சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...