Posts

உடையும் தருணங்கள்...

சொத்தென என் முன் வந்து விழுந்ததொரு
பிழைத்திருந்தால் பறவையாகி வானை அளந்து தன் நடனக் கால்களைத் தரையில் பதித்து குருகுரு வெனும் குரலோசையால் மனதை மயக்கியிருக்கும் வாய்ப்பினைப் பெற்றிருந்த அந்த முட்டை. விழுந்து பிளந்து உள்ளிருந்த உலகம் காணா ஜீவனொன்று திடுதிப்பென உலகினில் எறியப்பட்ட அதிர்ச்சியில் கண்ணும் திறவாத பேரதிர்ச்சியுடன் தன் பிஞ்சு வாயை மட்டும் பிளந்தபடி பிளந்த முட்டைக்குள்ளிருந்து எட்டிப் பார்த்தது. ஈவிரக்கத்தைப் பல ஒளி மைல்களுக்கு அப்பாலேயே நெஞ்சின் உள்ளிருந்து எடுத்துப் போட்டு விட்டு வீரியத்துடன் உயிரைப் பறிக்க வந்த காலனாகத் தன் இறக்கைகளை அடித்துக் கொண்டு ஒலியின் வேகத்தை மிஞ்சிடும் வேகத்துடன் கீழிறங்கிப் பாய்ந்த அந்தக் காலன் காக வடிவிலிருந்தாலும் தன் பணியைச் செவ்வனே ஆற்றிய திருப்தியோடு மேலேறிப் பறந்தான் காலில் பாசக் கயிறில்லாமல் தன் கோரக் கால்களால் பற்றிப் பிடித்துக் கொண்டு...

அடைந்ததொரு அதிர்ச்சியா, சோகமா, கண்ட காட்சி தந்த வேதனையா எது என்னை உடைத்ததோ நானறியேன்..ஆனால் உள்ளே ஏதோ உடைந்து நொறுங்கி ஏதோ ஒன்று கருகும் உணர்வோடு கலங்கி நின்றேன் கண்களில் பெருக்கெடுக்கும் வடிகால் ஒன்றுக்கு …

தடையை உடைத்தெறி...!

Image
வணக்கங்கள் தோழமை உள்ளங்களே..

நீங்கள் இப்பகுதிக்குப் புதியவரா? சித்திரக்கதைகள் குறித்த ஆர்வமில்லாதவரா? இதற்கு முன் பதிவினை வாசித்து விட்டுக் கடந்து சென்று விடலாம். இது சித்திரக்கதைகள், காமிக்ஸ்கள் மீதான ஆர்வம், நேசம், வெறி கொண்டோருக்கு மட்டும் தனிப்பட்ட சில தகவல்களை உள்ளடக்கிய பதிவு. தங்கள் வரவுக்கு நன்றி..

வணக்கம் மீண்டும் கடந்து வந்த காமிக்ஸ் இரசிகப் பெருமக்களுக்கு..
சமீபத்தில் ஒரு முக நூல் பக்கத்தை ஒரு நண்பர் ஆர்வத்துடன் துவக்கி தனது அத்தனை புத்தகங்களையும் சிறிது சிறிதாக அட்டை, உள் பக்கங்கள், விவரங்கள், கதையின் துவக்கப்பகுதி, முடிவுப் பகுதி அனைத்தையும் புகைப்படங்களாக வெளியிட்டு மனமகிழ்ச்சி கொள்ள செய்தார்.. அவரைப் போன்று இன்னும் சிலர் இதனை ஒரு தவமாகவே கருதி செய்து வருகின்றனர். அவர்கள் வைத்திருப்பதைப் பெருமையாகக் காட்டிக் கொள்வதற்காகத்தான் இப்படி செய்கிறார்கள் என்று அவரை யாரோ இகழ்ச்சியாகப் பேசி இருக்கிறார். அவரோ மிகவும் எளிய மனம் கொண்டவர்.. மனமுடைந்து போய் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்து விட்டார் அவரது பக்கத்தில்..


சித்திரக்கதைகள் ஒரு கட்டத்தில் மக்களின் பெரிய பொழுது போக்கு அம்சமாக இ…

பெரிய எழுத்து நல்ல தங்காள் கதை..ஐதீகப் படங்களுடன்..

Image
வணக்கம் நட்பூக்களே..
இன்றைய தினமும் புதுப்புது பூக்கள் மலரட்டும்.. மகிழ்ச்சி பொங்கட்டும். இன்பம் நிறையட்டும். வாழ்வின் எல்லா வளங்களும் கிட்டட்டும்...

நல்ல தங்காள்...வாழ்வின் சோதனைகளின் உச்சம்..
வரலாற்றின் எச்சம்..
சாமானிய மாந்தர்களின் அவல நிலையை நாம் இவளது கண்களால் தரிசிக்கலாம்.

நண்பர் ஒருவரை உங்கள் வீட்டுப் பரணையை எனக்காகக் கொஞ்சம் பார்த்துப் பழைய நூல்கள் ஏதாயினும் தென்பட்டால் கொண்டு வந்து கொடு என்று நச்சரித்ததன் பேரில் இந்தப் புத்தகம் வெளிவந்து விழுந்தது.. அன்றைய நாட்களில் என்னிடம் ஸ்கான் செய்யும் வசதி இருக்கவில்லை. அதனால் நண்பர் திரு.சதீஷ் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்..
அவருக்கும் புத்தகத்தைக் கொண்டு வந்து கொடுத்த திரு.அன்பு என்கிற நண்பருக்கும் இங்கே நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்.. இந்த நூல் கொஞ்சம் பழமையான தமிழிலேயே இருக்கும். புரியாத வார்த்தைகளுக்காக நாலு அகராதிகளைத் தேடிப்பார்க்கலாம். தப்பில்லையே?

இனி..