வணக்கம் தோழர்களே...
பூனை வீரன் பில்லி... உங்களை ஈர்த்தானா?
இவன் 1967 முதல் 1974 வரையிலான காலகட்டத்தில் பிரிட்டிஷ் காமிக்ஸான the beano வில் தொடர்ந்து சாகசம் செய்தான். அவனது பெற்றோர்கள் கொள்ளை கும்பல் ஒன்றின் வாகனத்தால் மோதப்பட்டு உயிரிழந்ததால் அவனது அத்தையான மேபெல்லின் இல்லத்தில் வளர்கிறான். உடன் கேத்லீன் என்கிற பூனை வீராங்கனை கேட்டியும் உண்டு. இந்த சிறார்கள் இருவரும் அந்த பர்ன்ஹாம் நகரின் குற்றம்புரிவோரை காவல்துறையிடம் எப்படி பிடித்து ஒப்படைக்கிறார்கள் என்பதுதான் கதையின் பிரதான அம்சம்.
இந்தத் தொடர் அப்போது நிறைவுற்றபோதிலும் அடுத்தடுத்த ஆண்டு மலர்களிலும் வழக்கமான இதழ்களிலும் எப்போதாவது இடம்பிடித்துக் கொண்டே இருந்தான்.
இப்போது அவன் வளர்ந்து விட்டான்..
வேகமான அக்ரோபாட்டிக் அசைவுகள் வயதானதால் குறைந்து விட்டாலும் அறிவிலும் திறமையிலுமாக சமர்த்தனாகவே காண்பிக்கப்படுகிறான்.
அதை விடுங்கள்...அந்த நாட்களில் சிறுவர்கள் இதனை வாசித்து விட்டு தங்கள் தலைக்கவசங்களில் பூனைக் கண்களை பெரியதாக வரைந்து கொள்வதும் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு வேகமாக ஓட்டுவதும் நடந்திருக்கிறது என்பது இதன் ஹைலைட்...
ஆமாம்..நீங்கள் வண்டி ஓட்டும்போது தலைக்கவசம் அணிவீர்கள்தானே...எனக்கு நிகழ்ந்த சில விபத்துக்களின்போது அடடா தலைக்கவசம் அணிந்திருந்தால் இன்னும் கொஞ்சம் சேதாரத்தில் இருந்து தப்பியிருக்கலாமே என்று நினைத்துக் கொள்வேன். இப்போதெல்லாம் வழக்கமான செயலாக தலைக்கவசம் அணிவது உருப்பெற்றுவிட்டது. கண்களில் தூசி விழாமல் பூச்சி அடிக்காமல் குளிர்க்காற்று முகத்தில் மோதாமல் எத்தனை இனிமையான பயணம் காத்திருக்கிறது தெரியுமா? தலைக்கவசம் அணிந்து பாருங்கள். உங்களுக்கும் இந்த இனிய அனுபவம் கிடைக்கும்.
பில்லியை விதவிதமான ஓவிய பாணியில் கேட்டியுடன் வரைந்துள்ளனர்... பின்னர் சித்திரக்கதைகளாக உருப்பெற்றனவா என்பதை அறியேன். நீங்களும் கண்டு இரசிக்கக் கொடுத்து நிறைவு செய்கிறேன். என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி....
http://www.mediafire.com/file/dbpa16t2to3kul9/POONAI%20VEERAN%20BILLY.pdf
Thanxs a lot
பதிலளிநீக்குWelcome bro.
பதிலளிநீக்கு