திங்கள், 25 டிசம்பர், 2017

மீட்பின் வரலாறு புண்ணியவான்களும் புண்ணியவதிகளும்...பாகம் -1

வணக்கங்கள் தோழமை உள்ளங்களே...
இறைவனின் ஆசீரும் அன்பும் என்றும் நிறைவாகக் கிடைக்கப் பெறுவதாக..


திருவண்ணாமலை உலகமாதா பேராலயம்....இன்று...

இது மீட்பின் வரலாறு...
நற்கருணை வீர சபையால் திண்டுக்கல் பெஸ்கி  கல்லூரியில் இருந்து ஒரு காலத்தில் அநேகமாக எண்பதுகளாக இருக்கலாம். வெளியாகி கத்தோலிக்கத் திருச்சபைகள் எங்கும் பரவலாக கிடைத்த ஒரு அபூர்வமான சித்திரம் ப்ளஸ் கதை சொல்லும் வகையிலான இந்தக் கதையை வெகுநாட்களாக தேடிக் கொண்டிருந்தேன். நான் இந்த வகை நூல்களை சிறு வயதில் நிறைய உறவினர் இல்லங்களிலும் வேளாங்கண்ணி திருத்தலத்திலும் கண்டிருக்கிறேன். அதன் பின்னர் மீண்டுமொரு சந்திப்பு நிகழவேயில்லை. எத்தனையோ ஆண்டுகள் தேடலில் கிடைக்காத ஒரு நூல் புனித அந்தோணியார் திருத்தலத்தின் நூலகம் அமைந்திருக்கும் சென்னை நீதிமன்றப் பகுதியில் ஒற்றை நூல் மட்டுமே விற்பனையாகாமல் எனக்காகவே காத்திருந்தது போன்று இருந்தது. அதனைப் பற்றி திரு.அலெக்ஸ்சாண்டர் வாஸ் அவர்கள் மூலமாக தேடல் தொடர்கையில் திடீரென நண்பர் திரு.ராஜசேகரன் வேதிஹா இன்னும் நான்கு கதைகளை அனுப்பி வைத்து என்னை மகிழ்ச்சியில் திணறடித்து விட்டார். இவை மாபெரும் மீட்டெடுப்பாகும். தேடல் மாத்திரமல்ல இனிய நண்பர்களும் அமைவது என்பது இறைவனின் சித்தமாகவே இருக்கக்கூடும். நண்பர் இனிப்பைக் கொடுத்து அத்தனை வாசகர்கள் மத்தியிலும் நன்மதிப்புடன் திகழ்கிறார். இனிய அனுபவங்களை தனது அன்பளிப்பால் தந்து மகிழ்ச்சியை அளித்துள்ளார். அவர் கொடுத்த புத்தகங்கள் விரைவில் ஸ்கானாக மாறி வரும்... இப்போதைக்கு உங்கள் அனைவருக்கும் கிறிஸ்து பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த சிறு கதையுடன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு விடைபெறுகிறோம்... நன்றி வணக்கம்..








என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பர்கள் ஜானி மற்றும் ராஜசேகரன் வேதிஹா 
குறிப்பு... இந்த புத்தகம் மொத்தமாக வெளியிடப்பட்டதும் பிடிஎப் ஆக ஒன்று சேர்த்து லிங்க் கொடுத்து விடுகிறேன். அதுவரை பொறுமை ப்ளீஸ்...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனக்கு எண்டே கிடையாது_ டிடெக்டிவ் ட்ரேசி_வண்ணத்தில்!!!

வணக்கம் அன்பு வாசகர்களே.. இது நம்ம வலைப்பூ.. லயன் காமிக்ஸில் வெளியான கனவே கொல்லாதே வாசித்திருந்தீர்கள் என்றால் அதில் கனவுக்குள் புகுந்து ஒரு...