ஞாயிறு, 6 நவம்பர், 2016

ஞானமிகு பேரரசர் சாலமன் _விவிலிய கதை வரிசை_013


வணக்கங்கள் அன்பு நெஞ்சங்களே..
இம்முறை விவிலியத்திலிருந்து பேரரசர் சாலமனின் வாழ்க்கை வரலாறை அறிந்து கொள்ள உங்களை அழைத்துப் போகிறேன்....இறைவன் அவரிடம் அவரது சிறு வயதில் உனக்கு அளவற்ற செல்வம் வேண்டுமா இல்லை அளவற்ற ஞானம் வேண்டுமா என்று கேட்டார்...எதனை சாலமன் தேர்ந்தெடுத்தார் தெரியுமா?
அவர் ஞானத்தைத் தேர்ந்தெடுத்தார். அந்த ஞானம் அவருக்கு அளவற்ற செல்வத்தை மட்டுமல்ல பூமியின் கடைக்கோடி எல்லையில் வசித்த ஜனங்களும் அவரது கீர்த்தியையும் புகழையும் அறிந்து கொள்ளும் வண்ணம் சிறப்பானதொரு வாழ்க்கையை தேடித் தந்தது.

பேரரசர் சுலைமான் என்று இஸ்லாமிய சகோதரர்களால் குறிப்பிடப்படும் இவரது வரலாறு விவிலியப் பார்வையில் உங்கள் முன் காட்சித் தொகுப்புகளாக விரிகிறது. நல்ல ஞானத்தைத் தேடுகிறவன் அதனுடன் அளவற்ற செல்வத்தையும், புகழையும் அடைகிறான் என்பதே இந்தக் கதை நமக்குக் கூறும் நீதியாகும்.
இனி உங்கள் கைகளில் பேரரசர் சாலமன்....




































ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு கல்வெட்டாகக் கருதத் தகுந்தவையாகும். ஏதோ ஒரு நூலை நீங்கள் வாசிக்கையில் உங்களை அறியாமலேயே உங்கள் ஆழ்மனதில் அந்த நூல் நல்ல பல மாற்றங்களை ஏற்படுத்தும். உங்கள் வாழ்க்கை தடம் மாறுவது உங்களை அறியாமலேயே நிகழும் அற்புதமாகும். கிடைத்தற்கரிய புத்தகங்களை எப்படியாவது ஆவணப்படுத்துவதே என் கனவாகும். அந்த நோக்கத்தைத் தெளிவாகப் புரிந்து இன்று உதவிடும் நண்பர்கள் பின்னர் ஒரு நாள் இந்த என் முயற்சிக்கு உறுதுணையாக நின்றமைக்கு நிச்சயம் பெருமைப்படும் வண்ணத்தில் அவர்கள் கொடுத்த நூலை என்னால் முடிந்த அளவுக்கு மறு சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு உங்கள் கரங்களில் இல்லையென்றாலும் ஆவணமாகப் படித்து இன்புறும் விதத்தில் கொண்டு வந்து சேர்ப்பித்துள்ளேன். இந்த நூலை வெகுகாலமாகப் பாதுகாத்து என் முயற்சிகளைக் கேள்விப்பட்டுத் தானாக முன்வந்து கொடுத்து உதவிய திரு.அலெக்சாண்டர் வாஸ் அவர்களுக்கும், இந்த நூலை செம்மைப்படுத்தி உங்கள் பார்வைக்குக் கொண்டு வரும் முயற்சியின் ஒவ்வொரு இழையிலும் உடனிருந்து உதவிய திரு.சொக்கலிங்கம் பன்னீர்செல்வம் அவர்களுக்கும் என் நன்றிகளை இந்த நேரத்திலும் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். 
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி..  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...