செவ்வாய், 24 ஜனவரி, 2017

இசைக்கலாம் இளையோரே!

போலீஸுக்கு ஒரு சல்யூட் :) (y)
ஆட்டோவில் தீவைக்கும் வீடியோ, வீட்டிற்கு தீவைக்கும் வீடியோ, ஓடி ஓடித் துரத்தி பெண்களை - குழந்தைகளை லத்தியால் அடிக்கும் வீடியோவைப் பார்த்துக் கொதித்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் என்னைக் கழுவி ஊத்த தயாராகிக் கொள்ளுங்கள்.
மாணவர் போராட்டத்தில் மிகச் சிறப்பாய் பணியாற்றிய காவல்துறையினருக்கு என் பாராட்டுக்கள்.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாய் இரவு பகல் பாராமல் மாணவர்களைக் காத்தீர்கள். மாணவர்களின் அனைத்து சிரமங்களையும் உங்கள் சிரமங்களாய் பகிர்ந்து கொண்டீர்கள். ஆகப்பெரும்பாலும் அவர்களைப் போலவே உணர்வு கொண்டவர்களாய் நீங்களும் இருப்பதால் உணர்ச்சி வேகத்தில் யூனிஃபார்மில் கோசம் போட்டு கடமையிலிருந்து தவறி போராட்டக்காரராகவே மாறிப் போன காவலர் பற்றியும் ஒரு நாள் கேள்விப்பட்டேன்.
நிர்வாகத்திற்கான - பேச்சுவார்த்தைக்கான கலெக்டரோ, எம் எல் யோவோ, மினிஸ்டரோ, மேயரோ தன் பொறுப்பினைப் புறம் தள்ள, போராட்டக்காரர்களிடம் நீங்களே பேச்சு வார்த்தை நடத்தி புதிய சரித்திரம் படைத்தீர்கள். பேச்சுவார்த்தைக்கு என்று தலைவர்கள் இல்லாத வித்தியாசமான போராட்டச் சூழலில் மைக் வைத்துக் கொண்டே எல்லா நகர்களிலும் பேசியது கடமை மீதான உங்கள் அசாத்திய ஈடுபாட்டைக் காட்டுவதாய் இருந்தது.
இத்தனை நாட்கள் கழித்து சட்ட ஒழுங்கை நிறைவேற்றும் உத்தரவு கிடைத்ததும் இன்று காலை 5 மணிக்குத் தொடங்கி இருட்டுவதற்குள்- ஒரே பகலில் மாணவர்கள் எல்லோரையும் முடிந்த அளவிற்கு சேதாரம் இல்லாமல் வீட்டுக்கு அனுப்பி வைத்தீர்கள்....
முக்கியமாக மத்திய காவல் படையோ, இராணுவமோ நுழைந்து மாணவர்களையும், நம் மாநிலத்தையும் நாசமாக்குவதற்கு துளியும் வாய்ப்புக் கொடுக்காமல், உயிரைக் கொடுத்து உழைத்து நம்மவர்கள் எல்லோரையும் பக்குவமாய் மீட்டீர்கள்.
குறிப்பாய் திருச்சியில் மாணவர்கள் போராட்டத்தை நிறைவு செய்யும் போது ஒவ்வொருவரையும் காவலர்கள் கட்டியணைத்துப் பிரிந்தது புதிய சகாப்தம்.
இத்தனை நாட்களாய் மாணவர்களோடு எப்படி நீங்களும் பகிர்ந்து உண்டு, ட்யூட்டி முடித்தபிறகு மஃப்டிய்ல் நின்று கோசம் போட்டு, பாடல் கேட்டு மகிழ்ந்தீர்களோ... அதுபோலவே இன்று முழுவதும் மாணவர்களைப் போலவே நீங்களும் - பெண் போலீஸ் உட்பட, அடிபடுவதையும் வீடியோவில் பார்க்க முடிகிறது.
போராட்டக்கார்களுக்கு காயம் படக்கூடாது. சமூக விரோதிகளின் நாசவேலைகளுக்கு அவர்கள் பலியாகவும் கூடாது. மீடியாவின் - மனித உரிமைப் போராளிகளின் கேள்விகளில் - வீடியோக்களில் சிக்கிவிடவும் கூடாது என்பதற்கிடையே உங்களுக்கான கடமை மிகக் கடுமையானது.
சென்னை மட்டுமல்லாமல் எல்லா ஊர்களிலும் இதுதான்.
டெல்லிக்காரனுக்கு எப்படி தமிழகம் பொருட்டில்லையோ. அப்படித்தான் சென்னைக்காரனுக்கு இங்குள்ள கிராமங்களும்.
கிராமங்களில் செத்தால் ஒருவேளை மனிதர்களின் கணக்கில் வருவதில்லையோ என்னவோ....
ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களின் வெற்றிக்காக அரசு கொண்டு வந்த அவசரச்சட்டம் - அதன் அவசரச் செயல்பாட்டின் விளைவாய் இதுவரை ஜல்லிக்கட்டு மாடு முட்டி மூன்று பேர் பலியாகியிருக்கிறார்கள்.
அவர்களில் உங்களைப் போல இரவு பகலாய் மக்களைக் காத்துக் கொண்டிருந்த கான்ஸ்டபிலும் ஒருவர். விருது நகர் மாவட்டம் கான்சாபுரம் கிராமத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த போது ஜல்லிக்கட்டு மாடு முட்டி இன்று உயிரழந்த கான்ஸ்டபிள் சங்கரும் கூட,போராட்டக்கார்களைப் போலத்தான்.... 29 வயது இளைஞர்.
எத்தனைதான் கொடுமைகள் எதிர்கொள்கிறார்கள் என்றாலும் போராட்டக்காரர்கள் அவற்றை எல்லாம் விரும்பி முடிவெடுக்கிறார்கள். வாங்கிக் கொள்கிறார்கள்.
உங்களுக்கோ, போராட்டக்காரர்களால் அதுவாய் தலையில் வந்து விழுகிறது.
மற்றவர்களைப் போல பொது இடத்தில் கதறுவதற்கோ - கண்ணீர் சிந்துவதற்கோ வாய்ப்போ அனுமதியோ இல்லாத உங்களுக்காக - உங்களின் சத்தமில்லாத சாதனைகளுக்காக....
பிடியுங்கள் ஒரு சல்யூட் :) (y)
(ப்பிரண்ட்ஜ்ஜ்... நவ் யூ ஸ்டார்ட் ம்ம்யூஜிக்... ;) )

  நன்றி: இளங்கோவன் பாலகிருஷ்ணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...