வியாழன், 19 ஜனவரி, 2017

வலேரியன் - விண்வெளி நாயகன்...


வணக்கங்கள் தோழமை உள்ளங்களே... நாம் இப்போது பார்க்கப்போவது வலேரியன் காமிக்ஸ். இது ஒரு பிரெஞ்சு காமிக்ஸ். சுமார் இருபதுக்கும் மேற்பட்ட கதைகள் தொடராக இந்தத் தலைப்பில் வெளியாகி விற்பனையில் சாதித்துக் கொண்டிருக்கின்றன. பியரே கிறிஸ்டின் கதையில் ஜீன் கிளாட் மேசியர்ஸ் கைவண்ணத்தில் உருவாகியுள்ள படைப்பு இது. 
ஓவியர் ஜீன் கிளாட் மெசியரெஸ் அவர்களைத் தனது புதியதோர் அறிவியல் புனைகதைத் திரைப்படத்துக்கான செட் டிசைனை 1991 ன் முடிவில் திரைப்பட இயக்குனர் லக் பெஸ்ஸன் வரைந்து தரக் கோரினார். அவருக்கு இருபத்தைந்து ஆண்டுகளாக வெளியாகிக் கொண்டிருந்த வலேரியன் காமிக்ஸ் மிகவும் பிடித்துப் போய் விட்டதாம். 

எனவே தான் பணியாற்றிக் கொண்டிருந்த தி சர்க்கிள் ஆப் பவர் கதையுடன் நிறுத்தி விட்டு திரைப்படத்துக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார். 
இது இருபத்து மூன்றாம் நூற்றாண்டில் ராக்கெட் தொழிற்சாலையில் பணியாற்றும் ஒரு மனிதனைப் பற்றிய கதை. அவர் வேற்று கிரகப் பெண்ணுடன் காதல் கொண்டு பின்னர் இருவரும் இணைந்து உலகை மற்ற கிரகங்களின் அச்சுறுத்தல்களில் இருந்து எப்படிக் காப்பாற்றுகிறார்கள்? என்பதை மையமாக்கிய கதைதான் வலேரியன்.
எதிர்கால நகரக் கட்டமைப்புகள், விண்கலங்கள், ஆய்வுக் கூடங்கள், சூதாட்ட மையங்கள் இன்ன பிறவற்றுக்காக நமது ஓவியர் ஜீன் கிளாட் நிறைய வரைந்து தள்ளி இருக்கிறார். பறக்கும் போலீஸ் கார் சிறப்பான பங்கு வகிக்கிறது. (இன்னும் ரெண்டு நூற்றாண்டு பின்னாடி பிறந்திருக்கலாம் என்கிற ஏக்கம் எனக்குள் இந்தக் காரைப் பார்த்து) 



1992வில் ஒரு சிறு இடைவெளி விழுந்தது திரைப்படத் தயாரிப்பில். இயக்குனர் லக் பெஸ்ஸன் தி ப்ரொபஷனல் திரைப்படம் இயக்கப் போய் விடுகிறார். ஓவியர் தனது தி சர்க்கிள் ஆப் பவரை வரைந்து முடிக்கிறார். புத்தகம் பதிப்பிக்கப்படுகிறது. அதன் பின்னர் அந்தப் புத்தகத்தின் ஒரு பிரதியை இயக்குனருக்கு அனுப்பி வைக்கிறார் ஓவியர் ஜீன். அந்த சமயம் தனது அறிவியல் சார் படத்தில் நிறைய மாற்றங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் இயக்குனர். முக்கியமாக கதாநாயகனின் வேலை. அவனை ஒரு வாடகை வாகன ஓட்டுனராகக் காண்பிக்கிறார்.
தி சர்க்கிள் ஆப் பவரில் வரும் பறக்கும் காரை விரும்புகிறார் இயக்குனர்..
1997 தி பிப்த் எலிமென்ட் திரைக்கு வருகிறது. வெற்றிச் சரித்திரம் படைக்கிறது. அது தனக்கும் பெருமையளிப்பதாக ஓவியர் கூறுகிறார். 

சில ஓவியங்கள் உங்கள் பார்வைக்காக...









தி வலேரியனின் பின்னணியில் இருக்கும் கதை இதுதான். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற தமிழ் காமிக்ஸ் டைம்ஸ் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்...

குறிப்புகள்: 
trailer  காணத் தவறாதீர்கள்...
விரைவில் தமிழில் காமிக்ஸ் அவதார் எடுக்கிறது.
மேலதிக விவரங்களைப் பெற...http://wikivisually.com/wiki/XB982

என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...