ஞாயிறு, 22 ஜனவரி, 2017

ஒரு வினாடி நில்லுங்க பாஸ்..

நண்பர் சம்பத்தின் பார்வர்ட் செய்தி இது. தகவல் பயனுள்ளதாகத் தோன்றியது.
வாசித்து யோசிங்கப்பா.

ஆறுவது_சினம்

மலரச் செய்த முகங்களை மெல்லச் சுருங்கச் செய்து, சுளிக்க வைக்கிறது இந்தப் போராட்டம்.

மத்திய, மாநில அரசுகள் மீது வைக்கப்பட்ட எதிர்மறை  விமர்சனத்துக்கு அனைவரும் எதிர்பார்த்ததை விட பலன் கிடைத்திருக்கிறது.

நிரந்தரச் சட்டம் வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதை நிறைவேற்றுவதற்குரிய சிறிது கால அவகாசத்தை அளித்திட வேண்டும். வலையில் சிக்கிய மீன் எங்கும் நழுவி விடப் போவதில்லை. எதிர்தரப்பும் மெச்சத் தகுந்த விதமாய் நடத்தப்படுவதே போராட்டத்துக்கு அழகு.

உலகின் கவனத்தை ஈர்த்துவிட்டோம். அவசரச் சட்டம் வந்தாயிற்று. நிரந்தரச் சட்டத்துக்கு சிறிது அவகாசம் கேட்கிறார்கள். அவ்வளவே. உச்சபட்ச வானளாவிய அதிகாரம் படைத்த அரசாங்கத்திடம் இதற்கும் மேல் எதிர்பார்ப்பது மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் அழகல்ல. களத்தில் எதிரிக்கும் உரிய மரியாதையை அளிப்பதே சிறந்த வீரனுக்கான லட்சணம்.

உணர்ச்சிக் கொந்தளிப்பும், குழு மனப்பான்மையும் வரையரைக்குள் இருக்கும் வரைதான் போற்றத்தக்கது.

போதுமான அளவு போராடியாகி விட்டது. ஆதரவு நிலைப்பாடு எடுத்தவர்களை எதிர்நிலைப்பாடு எடுக்கச் செய்து கூச்சல் குழப்பங்களுக்கு தயவுசெய்து வழிவகுக்க வேண்டாம்.
.
நாளை திங்கள். போராட்டத்தை விடுத்து அவரவர் கடமையாற்ற அமைதியாக கலைந்து செல்வதே புத்திசாலித்தனம். தேவைப்படின் மீண்டும் கூடலாம்.
.
பொறுத்தது போதும் என பொங்கி எழுந்தோம். ஆயினும், ஆறுவது சினம் என்பதையும் மனதில் நிலைநிறுத்துவோம்.
.
-இரா.சுந்தரபாண்டியன்
விழுப்புரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சேட்டை நான்சி_அறிமுகம்

 வணக்கம் தோழர்களே..  இன்றைய சிறு அறிமுகம் இந்த நான்சி.. அவளது சேட்டைகளை அட்டையிலேயே காண்பித்திருக்கிறார்கள்.. வாசித்து இரசியுங்கள்..  என்றும...