செவ்வாய், 24 மே, 2016

சிறுமியர் காமிக்ஸ்_தமிழில் முதல் முறையாக_கால இயந்திரம்...!

வணக்கங்கள் தோழமை நிறை நெஞ்சங்களே. இதோ உங்களுக்காக ஜூடி. சிறுமியருக்கென்றே வடிவமைக்கப்பட்டதொரு சித்திரக்கதைப் புதையல். பூக்கள் என்ன நினைக்கும்? மலர்கள் எப்படி வாசம் வீசும்? தென்றல் எப்படித் தழுவிச் செல்லும்? அதுதான் சிறுமியர் சித்திரக்கதைகள். 
அதில் ஜூடிக்குப் பெரும் பங்கு உண்டு. இன்று தமிழ் காமிக்ஸ் டைம்ஸ் மூலமாகத் தமிழகத்தில் காலூன்றி இருக்கிறாள். அவளது அட்டகாசங்களுக்கு இது ஒரு சிறிய துவக்கப் புள்ளிதான். இதனை நெடும்பயணம் ஆக்குவதற்குத் தமிழ் மண்ணில்  உள்ள  சித்திரக்கதைப் பத்திரிகைகள் குறிப்பாக லயன்  குழுமம் ஆர்வம் காட்டினால் மிகவும் மகிழ்வேன். 






குறிப்பு:

அப்படியே pdf, cbr கொடுத்து விடுங்கள்  தோழர்களே. அது உங்கள்  கடமை. ஆங்காங்கே  முகநூலிலும் உங்கள் டைம் லைனில் பகிர்ந்தாலும் மகிழ்ச்சியே. 

என்றும் அதே  அன்புடன், உங்கள் இனிய நண்பன் ஜானி.

5 கருத்துகள்:

  1. சிறுமியர்க்கென ஒரு சித்திரக்கதையிதழ் -அதுவும் தமிழில்- இருப்பதை இப்பொழுதுதான் முதன் முறையாக உங்கள் மூலமாக அறிகிறேன். தமிழ் சமூகத்தில் எப்பொழுதும் எந்த ஒரு விதயத்தையும் பெண்கள் மூலமாகச் செய்வது என்பது வெற்றியின் எளிய வழி. பெண் குழந்தைகள் தமிழ் படிப்பதில் ஆர்வம் காட்டினால் வருங்காலத்தில் அடுத்த தலைமுறைக்குத் தமிழ் படிக்கும் பழக்கமும் தமிழும் சென்று சேர்வது உறுதி. அதற்கான இந்த முயற்சி இரு கை நீட்டி வரவேற்க வேண்டியது. மிக்க மகிழ்ச்சி! அப்படியே, இந்த இதழ்கள் இணையத்தில் கிடைக்குமா? அச்சு இதழாகத்தான் கிடைக்கும் என்றால் எந்தெந்த இடங்களில் கிடைக்கும்? இது போன்ற விவரங்களையும் விரிவாகத் தெரிவியுங்கள் தோழரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா. இது இணையத்தில் ஆங்கிலம் பேசிய பழமையான இதழ். தமிழில் ஒரு வாசகனாக அடியேன் மொழி பெயர்ப்புப் புரிந்துள்ளேன். சக நண்பர்கள் தொடருவர்.

      நீக்கு

சேட்டை நான்சி_அறிமுகம்

 வணக்கம் தோழர்களே..  இன்றைய சிறு அறிமுகம் இந்த நான்சி.. அவளது சேட்டைகளை அட்டையிலேயே காண்பித்திருக்கிறார்கள்.. வாசித்து இரசியுங்கள்..  என்றும...