ஞாயிறு, 23 அக்டோபர், 2016

அரசர் தாவீது_விவிலிய சித்திரக்கதை வரிசை_012

வணக்கங்கள் தோழமை  உள்ளங்களே..
வெகு  நாட்களாகக்  காத்திருந்த  தாவீது  அரசரின் வரலாற்றின் இறுதிப் பகுதி  இந்தக் கதை...
முதல் பாகம் இங்கே: http://johny-johnsimon.blogspot.in/2016/09/011.html
(நன்றிகள் சுட்டிக் காட்டியமைக்கு திரு.வைரம் அவர்களுக்கு)
இந்த  விவிலிய சித்திரக்கதையினை வெகு காலமாக பாதுகாப்பாக வைத்திருந்து நமக்காகக் கொடுத்துதவிய திரு.அலெக்சாண்டர் வாஸ் அவர்களுக்கும், அன்னாரது  முயற்சிகளுக்கு  உறுதுணையாக  நின்றுதவிய குடும்பத்தாருக்கும் இறைவனின்  ஆசீர் கிடைக்கட்டும்.
 ரிலையன்ஸ் புண்ணியவான்களின்  தயவில்  இந்தப் பதிவினை  வலையேற்றுவதால் அவர்களுக்கும் என் நன்றிகள்.
அரசர் தாவீது தான்  சவுலின் கொலை வெறிக்குத்  தப்பி ஓடி ஒளிந்த காலத்திலும் சரி, மன்னராக முடி சூட்டப்பட்ட  காலத்திலும் சரி இறைவனுக்கு  புகழ் சேர்க்கும் கீதங்களையும், இசைக் கோர்வைகளையும்  இசைத்து  மகிழ்வாக  இருப்பார். அதனால் அவருக்கு விவிலியம் வழங்கிய சிறப்புப் பெயர் ஒன்று  உண்டு. அது சங்கீதக்காரன். இவரது பாடல்கள் அதிகமாகக் கொட்டிக் கிடக்கும்  இடம் விவிலிய நூலின் சங்கீதங்கள் பகுதியாகும்.



























வலைப் பூவில் ஒவ்வொரு பூவையும் மலரச் செய்வது என்பது பெரிய தவமாகும். முகநூலில் உள்ளது போன்ற இருவழிச் செய்திகளும் வேகவேகமான உரையாடல்களும், கிண்டல் கலாட்டாக்களும் இங்கே சாத்தியமல்ல. அமைதி  இங்கே உறைந்த ஒன்றாகும். இந்த நூலின் மின் பதிப்பு  வடிவினை நீங்கள் எங்கேனும் பகிரலாம். வெறுமனே  வலைத்தளத்தில்  கிடைத்தது  என்று மாய முரசு ராணி காமிக்ஸை நண்பர்  ஒருவர்  சமீபத்தில் தனது வலையில் பதிவேற்றினார். அந்த நூலை மின் வடிவாக்கம்  செய்த முயற்சிக்கு இந்தியா டுடேவில் நமது வலைப் பூவுக்கு மத்தியில் இடம் ஒதுக்கி சிறப்பு சேர்த்தார்கள் என்பதை அறிவீர்கள். மாயா மாயா டொம்ம் டொம்ம் டொம்ம் என்கிற அந்த மாய முரசொலியை இன்னுமொரு முறை இரசிக்க  இங்கே செல்லுங்கள். இது போன்று உரிய புத்தகங்களை உரிய நேரத்தில் வாசிக்கவும், மின் தடவல் மேற்கொள்ளவும் கொடுத்துதவிய அனைத்து நண்பர்களையும் இந்த நேரத்தில் நினைவு கூறுகிறேன். அனைவருக்கும் என் நன்றிகள். கடவுளும்காலமும் அனுமதித்தால் அடுத்த கதையான..  
சாலமன் அரசரின் வரலாறுடன் தங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது  உங்கள் இனிய நண்பன் ஜானி சின்னப்பன். 
உங்களுக்குப் பிடித்தமான கதைகளை தமிழில் வாசிக்கவும் நேசிக்கவும்  
சந்தா  கட்டலாமே நண்பர்களே...



புதிய முயற்சியாக மலர்ந்துள்ள 
மன்றத்தில் இணைவதையும் யோசியுங்கள். 
பை...






3 கருத்துகள்:

  1. நண்பரே முதல் பாகம் இங்கே linkல் இந்தப் பக்கத்தைப் பார்ப்பதற்கான அணுகல், உங்கள் நடப்பு கணக்கிற்கு இல்லை என்று வருகிறது. பக்கம் எண் 6 விடுதல் என்று நினைக்கிறேன், சரி பார்க்கவும். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. இப்போது சரி செய்து விட்டேன் நண்பரே. அந்தப் பக்கம் கிடைக்கப்பெறவில்லை. இதன் வண்ணப் பதிப்பு விரைவில் பதிகிறேன். அதில் விடுபட்ட அனைத்துப் பக்கங்களும் உள்ளன. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நண்பரே எனது மின்னஞ்சல் ganvairam@gmail.com முகவரிக்கு தாவீது அரசரின் வரலாற்றின் முதல் பாகம் அனுப்புங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...