வெள்ளி, 29 செப்டம்பர், 2017

புதியதோர் பயணம் துவங்கட்டுமே...

வணக்கம் வாசகர்களே....
உங்களில் யாருக்காவது சர்வதேச அளவிலான காமிக்ஸ் விமர்சகர் மற்றும் வாசகர் என்ற புகழ் கிட்ட வேண்டும் என்கிற ஆசைப்படுகிறீர்களா? உங்களுக்குத் தமிழ் காமிக்ஸ் டைம்ஸ் உதவுவதில் மகிழ்ச்சி.. ஒரு டைரியைப் போட்டுக் கொள்ளுங்கள். யாரெல்லாம் பிரபல ஓவியர்கள், பிரபல கதாசிரியர்கள், பிரபல பதிப்பகத்தார் என்பதை எழுதிக் கொள்ளுங்கள். அவர்களது பிறந்த தினம், வளர்ந்த விதம், பின்புலம், திருமண தினம், இந்த ஓவியர் அந்த கதாசிரியரை சந்தித்தார், அந்த பதிப்பகத்தார் தங்கள் கேட் உள்ளே இந்தக் கதாசிரியரை அனுமதித்தார்கள், அந்த ஓவியருக்கு இந்தப் பதிப்பகம் பரிச்சயமானது எப்படி இது போன்ற அரிய தகவல்களை அவர்களுக்கு மின்னஞ்சல் தட்டியாவது, விக்கிபீடியா போன்ற காமிக்ஸ் சார்பில் இயங்கும் பல்வேறு தளங்களையும் அலசி ஆராயுங்கள். இன்னார் இறந்த தினம், இன்னார் நினைவு தினம், இன்னார் அறுவதாம் திருமண தினம், இந்தத் தேதியில் அந்தக் கதையை எழுதினார், அந்தத் தேதியில் இந்த ஓவியர் வரைந்து முடித்தார். அதற்காக அலாஸ்கா பாலைவனம் போனார், ஊட்டியில் ஓய்வு இல்லம் சென்றார். அமேசான் காடுகளில் பித்துப் பிடித்துத் திரிந்தார், இப்படி இப்படி லொக்கேஷன் பிடித்தார், அப்படி அப்படி பணம் போட்டு செலவழித்தார் என்பது போன்ற அரிய தகவல்களை அவர்கள் சொன்னால் உண்மையாகவும். அவர்கள் சொல்ல மறுத்தால் நாமே கொஞ்சம் கற்பனைக் கரப்பான் பூச்சிகளைக் கொட்டிக் குலுக்கியும் நீங்கள் எழுதும்போது உங்கள் இருப்பு பத்திரிகை உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும். இவர் சொன்னால் அது மிகவும் சரியாக இருக்கும் என்கிற நம்பகத்தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டியது. சில பல வளர்த்த மார்பின் மீதான பாய்ச்சலும், அவ்வப்போது காப்பி ரைட், டீ ரைட் போன்றவற்றின் மீதான விசாலமான பார்வையும் கொண்டு உங்களை வளர்த்தெடுத்துக் கொள்ளுங்கள். அடுத்த விருதுகளும், மாபெரும் அங்கீகாரங்களும் நீங்கள் எங்கோ போக நினைக்கும் உயரத்துக்கு உங்களைத் தூக்கி அமர வைக்கும். சில நண்பர்கள் இது குறித்த முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறீர்கள். அவர்களுக்கு எங்கள் அனைவரின் சார்பிலும் வாழ்த்துக்கள்.  இந்த ஆயுத பூஜைத் திருநாளில் உங்களைக் கூர் தீட்டிக் கொள்ளுங்கள். சிலர் திட்டிச் செல்லுங்கள். சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டியதும், ஓத வேண்டியதை ஓதுவதும் எங்கள் கடமை. வாழ்த்துக்கள் மீண்டும்...
அட சும்மா நாலு வரி எழுதிப் பாருங்கப்பா தன்னால எல்லாம் வரும்... ஏதோ சொல்லணும் னு தோணுச்சு. சொல்லிட்டேன். ஏதாவது தப்பா இருந்தா மனசில வெச்சிக்காதீங்கள். திட்டித் தீர்த்துடுங்கள். ஏன்னா மனசில அடக்கி வைக்கிற உணர்ச்சிக்கு சக்தி அதிகமாம். ஆயா எப்பயோ சொல்லுச்சி இல்லை???
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன்..ஜானி  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...