ஆழ்கடலில் வசிக்கும் பாலூட்டி நான். குட்டி போட்டு பால் கொடுக்கும் வகையைச் சேர்ந்த பாலூட்டி நான்.
அவ்வப்போது காற்றைப் பீய்ச்சிக் கொண்டு கடல் மட்டத்தில் தலையை நீட்டி விட்டு பின்னர் ஆழ் கடலில் அமிழ்ந்து போவேன். யாருக்கும் தொந்தரவு தரமாட்டேன்.
சின்னஞ்சிறு மீன்களும் கடல் பாசிகளுமே என் உணவாகும்.
நீர் மூழ்கிகளில் அவ்வப்போது வரும் மனிதருக்கும் என்னால் எந்தத் துன்பமும் நேர்ந்ததில்லை. அவர்களாக வந்து ஆராய்ச்சி செய்து விட்டுப் போவார்கள். வாழ்வின் இறுதி கட்டத்தில் தரைக்கருகே கடற்கரையில் வந்து என்னை மாய்த்துக் கொள்வேன். என் கொழுப்பைக் கொண்டு விளக்கெரிய வைப்பதும், மருந்துப் பொருட்கள் செய்து கொள்வதும், என் எலும்புகளைக் கொண்டு அருங்காட்சியகங்களை அலங்கரிப்பதும் மனிதர் தம் வேலை. வாருங்களேன் ஒரு முறை கன்னிமாரா நூலகம் அருகே இருக்கும் அருங்காட்சியகத்தில் என் எலும்புக் கூட்டைக் கண்டு களிக்க..
நிற்க. கூகிளில் இப்போதெல்லாம் தேடினால் ஆபத்தான ஒரு விளையாட்டு வருகிறது. அதன் பெயர் ப்ளூ வேல் கேம். அதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும் சில சைக்கோத்தனமான ஆசாமிகள் ஒன்று கூடி மனித வதைக்கு என்றே ஒரு விளையாட்டை உருவாக்கி அதற்கு என் பெயரையும் வைத்து உலகெங்கிலும் உலவ விட்டுள்ளனர். நீங்கள் அந்த விளையாட்டை எவ்விதத்திலும் விளையாடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். இது என் அன்புக் கட்டளை. முப்பது யானைகளின் நிறை உள்ள என் சொல்லுக்கு செவி மடுப்பீர்கள்தானே? தீயன விலக்கி நல்லன அறிந்து கொள்வதே விவேகமாகும். ஆகவே உங்களை சுற்றியுள்ள நண்பர்கள் யாராவது இந்த விளையாட்டை விளையாடுவதைக் கண்டால் நமக்கு ஏன் வம்பு என்று விட்டு விடாமல் அவர்களது பெற்றோர், உற்றார், உறவினர்களுக்கு தகவல் சொல்லி அவர்களை நல்வழிப்படுத்துவது உங்களின் கடமை. திமிங்கலமாகிய என் பெயரைக் கெடுக்கும் இந்தப் போலி விளையாட்டால் எத்தனை சிறுவர், சிறுமியர் பலியாகி இறந்துள்ளனர் தெரியுமா? செய்தித் தாள்களைத் திருப்பினால் என் பெயரைக் கண்டு அலறும் நிலை இன்று. ஆகவே கவனமாக இருங்கள். உங்கள் வாழ்க்கையை வேறு யாருடைய வக்கிர புத்திக்காகவோ அழித்துக் கொள்ளாதீர்கள். வாழ்க்கையை ஜெயிப்பது வேறு விளையாட்டில் ஜெயிப்பது வேறு. உங்களுக்கு அந்த விளையாட்டு வேண்டாம். துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்கிற பழமொழிக்கு இலக்கணமாக நீங்கள் திகழ வேண்டும். போய் வருகிறேன். இதே போன்ற ஒரு திகில்இசை தோன்றி மனிதர்களை மிகவும் சோதித்தது. அது குறித்து திகில் காமிக்ஸ் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. அந்த விவரம் உங்கள் பார்வைக்கு...
நான் அந்த நீலத்திமிங்கலம்ன்னு நினைச்சுட்டேன்
பதிலளிநீக்குஹாஹாஹா
பதிலளிநீக்குGloomy Sunday song கேட்டு விட்டேன், மிகவும் சோகமாக உள்ளது!
பதிலளிநீக்குதிரும்பத் திரும்ப கேட்காதீங்க பாய். டேஞ்சர்.
பதிலளிநீக்கு