Friday, 1 September 2017

பால்கன் காமிக்ஸ் வரிசை -001

வணக்கங்கள் தோழமை உள்ளங்களே! 
அபூர்வம் என்ற சொல்லுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான மாற்றம் நிகழ்ந்து வரும் காலக்கட்டத்தில் இருக்கிறோம். இன்றைக்கு அபூர்வம் என்று கூறப்படும் சித்திரக்கதை மறுநாள் வேறு ஒரு அபூர்வமான  சித்திரக் கதை வெளிப்படும்போது அதன் அபூர்வம் என்கிற அந்தஸ்தை இழந்து தவிக்கிறது. ஒரேயொரு இதழ் வரிசை ஒரேயொருவரிடம் மாத்திரமே கிட்டுமாயின் அதன் விலை மதிப்பற்ற தன்மையும், அதன் அபூர்வமான இருப்பும், அதனைப் பாதுகாத்து வந்த அரிய மனிதரும் முக்கியத்துவம் பெறுகின்றனர். அந்த வகையில் அரிதினும் அரிதாக வெளியாகி, இன்றளவில் வேறு எவரிடமுமே இல்லாமல், ஆச்சரியமாக ஒரேயொருவரிடம் இருந்து வெளிப்பட்டு தகவல்களை அள்ளித்தரும் எந்தப் படைப்புமே அபூர்வம் என்ற அடைமொழியோடு போற்றிப் பாதுகாக்கத் தக்கதாகும். பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சூழ்நிலைகளில் எவ்வித சோதனைகளையும் தாங்கிக் கொண்டு காலத்தால் அழியாமல் அட்டகாசமானதோர் இரசிகரால் பாதுகாக்கப்பட்டு வரும் புத்தகம்தான் எத்துணை அழகானதும், இனிமையானதுமானதாகும்? இந்த முறை நாம் ஆராயவிருக்கும் புத்தகமும் அப்படிப்பட்ட அபூர்வ வகை சித்திரக் கதைதான். 
    இந்தக் கதையைப் பாதுகாத்து, தங்க டிராகன் முட்டையைப் போன்று அடைகாத்து, அதன் இருப்பை உறுதிப்படுத்தி, இன்றைக்கு நம்மிடம் அதன் தரிசனத்தை வெளிக்காட்டி, இப்படியும் சித்திரக் கதைகள் வெளியாகி ஒரு காலத்தில் தமிழ் உலகைக் கலக்கின என்கிற தகவலை நம் அனைவருக்கும் பகிர்ந்து கொண்ட அபூர்வ மனிதர் திரு.இரா.தி.முருகன் அவர்களுக்கு நம் அன்பினையும் நன்றிகளையும் உங்கள் அனைவரின் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்.
     இந்தப் பதிவில் நாம் காணவிருப்பது பால்கன் இதழ் வரிசை. இதில் இதுவரை கிடைத்தவை இருபது புத்தகங்கள் மாத்திரமே. முதல் இதழ் வெளியான ஆண்டு மற்றும் மாதம் jan-15-1968 இறுதி இருபதாவது தமிழ் இதழ் காணக் கிடைப்பது oct-11-1968 வரையில். விலை 75 பைசாக்கள். அதே நேரம் ஆங்கிலத்தில் முதல் இதழ் வெளியான ஆண்டாகக் கருதப்படுவது jan -15-1968 இறுதி இதழ் வெளியான தேதி nov-25-1968 விலையில் மாற்றமின்றி அதே 75 காசுகளே. ஆக மொத்தம் 22 இதழ்கள் வெளியாகியுள்ளன. தமிழில் இருபது மட்டுமே காணக் கிடைக்கிறது. பால்கன் லோகோ ஈகிள் லோகோவில் இருந்து சற்றே மாறுபட்டுள்ளதாகக் காணப்படுகிறது. இரையைப் பற்றக் கீழே இறங்கும் வடிவில் பால்கனும் மேலே பறக்க ஆயத்தமாகும் விதத்தில் ஈகிளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

இதழின் பக்கங்களில் கீழே அச்சிடப்பட்டுள்ள All material appearing in this publication is the copyright of odhams Press Ltd., England 1965 என்கிற வரிகள் ஓதம்ஸ் பதிப்பகம் இங்கிலாந்தில் 1965ல் கொண்டு வந்த இதழ் இது என்ற தகவலை நமக்கு அளிக்கின்றன. source:https://en.wikipedia.org/wiki/Odhams_Press
அதன் பின்பு சுமார் 3 ஆண்டுகள் கழித்து 1968 ஆம் ஆண்டில் நமக்கு இந்த இதழ் அறிமுகமாகியுள்ளது. இதழ் குறித்த விவரங்களைப் பட்டியலிடுகிறேன்.

பால்கன்
மாதமிருமுறை
மலர் : 1
இதழ் : 1
15 ஜனவரி 1968
இலங்கை - 75 பைசா
மேற்கு ஆப்பிரிக்கா,கிழக்கு ஆப்பிரிக்கா-1 ரூபாய்,
மலேசியா மற்றும் சிங்கப்பூர் - 45
அளவு:டேப்லாய்ட் அளவு

படங்கள் இணைக்க அனுமதி கிடைத்தபின் ஒரு சில இணைக்கப்படும். 
சித்திரக் குறிப்புகள்
போர்க்கருவிகள் வளர்ந்த விதம்
நம்பர் 1 முதல் விமான குண்டு
குண்டு வெடிக்கும் விதம்
கொள்கைக்காக உயிர் விடும் வீரர்கள்....

தனிச்சண்டை
உலகத்தின் வேகமான போர் விமானம்

இந்த இதழில் இடம்பெற்ற தொடர்கள்
ஈகிளில் வந்த தொடரில் இருந்து அறிமுகத்துக்காக மட்டும் ஹீரோஸ் தி ஸ்பார்டன் படம் இணைக்கப்பட்டுள்ளது.

ஹீரோஸ் -ஸ்பார்ட்டன் வீரன்

சீசரின் கோபத்துக்காளான மாவீரன்ஹீரோஸ் பகைவரிடையே சிறு படையுடன் அனுப்பப்படுகிறான். அதன் பின்??

சோதனைக்கு ஒருவன்அறிவியல் சோதனைக்கு வந்த வீரனை பல்வேறு சோதனைக்குள்ளாக்குகிறார்கள். பிழைப்பானா அவன்?
   
டான் டேர் - வானவெளியில் கண்ட பயங்கரக் காளான்
மீகோன் எனும் வலுமிக்க எதிரியுடன் பொருதும் தீரன் டான் டேர்...


a page from eagle magazine

கடல் குரங்கு

தெய்வத்தின் சாபம்


பறக்கும் தட்டு வீரர்கள்

இரும்பு மனிதன்


கறுப்பு வில் சென்னா

from a page from eagle

தனிக்கதை
விடுதலை வேட்கை

சிறுவர் சித்திரத் தொடர்கள்
பழங்கால நாய் ஜில்லி

தீராத விளையாட்டுப் பிள்ளை - புரூன்

சிறுவர் பகுதி
புதிர் களஞ்சியம்

நகைச்சுவை
காணாமல் போன சீட்டுத் துண்டு
புதிருக்கு விடை
ஆகியவை இந்த இதழில் இடம்பெற்றுள்ளன.
இந்த இதழில் இடம்பெற்றுள்ள சில விளம்பரங்கள் மக்கள் மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய,  காலத்தால் அழியாத சாட்சிகளாக மாறி நிற்கின்றன. முதல் விளம்பரமாக யூனியன் கார்பைடு நிறுவனத்தின் விளம்பரத்தைக் கூறலாம். போபால் விஷ வாயு சம்பவத்தால் இன்று வரை பேசப்பட்டு வரும் யூனியன் கார்பைடு நிறுவனம் அந்த காலத்தில் உற்பத்தி செய்த பொருள்கள் சினிமா ப்ரோஜெக்க்ஷனுக்கான ஆர்க்குகள், ரேடியோ பாட்டரிகள் சிறுவர் இதழில் தன் விளம்பரத்தை கொடுத்து சிறார்களையும் ஈர்த்த ஒரு நிறுவனம் யூனியன் கார்பைடு. அங்கே நடந்த போபால் விஷ வாயுக் கசிவுக்குப் பின்னரான பலிகளுக்கு மட்டும் காரண காரியங்களை அலசி வரும் நமக்கு அந்த நிறுவனம் மக்களோடு எத்தனை அன்னியோன்னியம் பாராட்டி வந்தது அந்த காலத்தில் என்கிற தகவல் புதிது.

https://en.wikipedia.org/wiki/Union_Carbide


https://en.wikipedia.org/wiki/Bhopal_disaster


அடுத்த விளம்பரமும் அட்டகாசமான ஒன்றுதான். தன் புன்னகையால் தமிழ் மண்ணை ஈர்த்த தங்கத் தாரகை.. மறைந்தாலும் மக்கள் மனத்தை விட்டு அகலாத காவியத் தலைவி ஜெயலலிதா அவர்களது அட்டகாசமான போஸில் வெளியான ரெமி ஆயில் மற்றும் பவுடர் விளம்பரம்.
 


மொத்தப் பக்கங்கள் இருபது. இருபதும் அசத்தலாக வடிவமைக்கப்பட்டுள்ளன. தவறவிடக்கூடாத அற்புதமான கதைத் தொடர் இது. வாசித்தமைக்கு நன்றி. தேடலில் இந்த இதழினையும் இணைத்துக் கொள்ளுங்கள் தோழர்களே...
ஆங்கிலத்திலும் அழகுத் தமிழிலும் ஒரே நேரத்தில் சந்தமாமா குழுவினரால் டால்டன் பிரசுரத்தால் வடபழனியில் இருந்து வெளியிடப்பட்டு அட்டகாசம் நிகழ்த்தியுள்ள இந்த இதழ் மிகவும் சுவையானதொன்று. இந்த நூலைப் பற்றிய இன்னும் அதிகமான செய்திகளை அறிந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன். 
ஆராய்ச்சியில் அன்னையின் உறுதுணை... திருமதி.விஜயா சின்னப்பன் 
வேறென்ன தோழமைகளே புதுக்கதைகளைப் பற்றி எக்கச்சக்கமான வார்த்தைப் பிரயோகங்களை தோழர்கள் இணைய வெளியில் நிகழ்த்திக் கொண்டுள்ளனர். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவற்றைப் பார்வையிடுங்கள். வாசிப்பை இன்னும் உயிர்ப்போடு வைத்திருங்கள். அவ்ளோதான்.

என்றும் அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி சின்னப்பன்.
9 comments:

 1. நன்றி தோழர்!😃

  ReplyDelete
 2. .vஅன்பு நண்பரே மிக அருமையான பதிவை தந்துளீர்கள் மிக்க நன்றி. அந்த காலத்திலேயே இவ்வளவு அழகிய (அதாவது நமது முத்து காமிக்ஸிற்கு முன் )காமிக்ஸ் கதைகள் வெளிவந்ததை கண்டு ஆச்சரியம் அடைகிறேன்...ம் ..ம் ..நன் இவற்றை படிப்பது எப்போ து?. Haja Ismail Saudi Arabia

  ReplyDelete
 3. அன்பு நண்பரே மிக அருமையான பதிவை தந்துளீர்கள் மிக்க நன்றி. அந்த காலத்திலேயே இவ்வளவு அழகிய (அதாவது நமது முத்து காமிக்ஸிற்கு முன் )காமிக்ஸ் கதைகள் வெளிவந்ததை கண்டு ஆச்சரியம் அடைகிறேன்...ம் ..ம் ..நான் இவற்றை படிப்பது எப்போது ?.!
  அன்புடன் ஹாஜா இஸ்மாயில் ஜுபைல் சிட்டி சவுதி அரேபியா

  ReplyDelete
 4. கருத்திட்டமைக்கு நன்றி சார். தமிழகம் வரவை அன்போடு எதிர்நோக்கி நான்.

  ReplyDelete
 5. முத்து காமிக்ஸ் நிறுவனரோடு இந்த வெளியீட்டுக்குத் தொடர்புண்டு. அது விரைவில் பகிரப்படும் நன்றிகள்.

  ReplyDelete

IND-78-ஜனாதிபர் ஜாலம்..

Credits kumar Tirupoor and ganesh https://www.mediafire.com/file/fxilaesi9egs0ke/KR+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0...