▼
புதன், 25 மார்ச், 2020
செவ்வாய், 24 மார்ச், 2020
*கொரோனா கோரங்கள்..*
மனப்பயம்
அகற்றவே
முகத்திரை
தேடியலையும்
மாந்தரை
முகத்திரை
இல்லையென
தவித்தலைய
திண்டாடித்திரிய
அலைக்கழித்து
மறைத்திடும்
வியாபாரக்
கள்ளர்தம்
லாபநோக்கைக்
கண்டேன்..
கோர நோயின்
பிடியிலே
ஏழை
மாந்தர்தமை
மாண்டுபோக
கைவிட்டால்
நாளை
நமக்கும்
வரும் கேடென
உணர்வீர்..
இன்றதை
பணமாய்
மாற்றத் துடிக்கும்
அறிவிலீர்...
-ஜானி
இப்படிக்கு இயமன்.. ஜானி சின்னப்பன்
நித்தம் நித்தம்
நுண்மந்தன்னை
நுண்ணோக்கி
கொண்டு
நுணுகி
நோக்கும்
மானிடா..
இன்றந்
நுண்மந்தன்
தவம்கலைந்து
நெற்றிக்கண்
நெறித்துனை
நோக்கும்
நாளடா..
எட்டுத்திக்கும்
சந்துபொந்து
ஓடி ஒளியும்
போதிலும்
இரும்பைப் பற்றும்
காந்தமாய்
நாடித்தேடி
ஓடியே வருது
பாரடா..
உந்தன்
உள்ளந்தன்னில்
கள்ளம் கொண்டதை
முகமூடியிட்டு
மறைத்தாலும்
விதி வீசிச்
செல்லும் வலை
மெல்லமெல்ல
இறுகிடுமே..
போவதென்ன
வருவதென்ன
உந்தன்
கையின்
இட்டமா..
வரைந்திடும்
விதியினை
வென்று நீயும்
காட்டடா..
உன் இனந்தனை
வேரறுத்தாய்..
கொள்ளையிட்டாய்..
தீயிட்டாய்
தீமையெனும்
கரும்புகை
எட்டுத் திக்கும்
எழுப்பினாய்..
வெம்மை
தண்மை
வெள்ளம்
புயல்
நிலநடுக்கம்
கோபம்
கொண்டுன்னை
வதம் செய்தேன்..
நன்மையெனும்
கவசங்கொண்டு
நாளும்
நலமே
புரிந்திட்டால்
உந்தன்
நிலையை
நினைத்து
நித்தம்
நன்மைகள்
நடத்திடின்
இகபரம்
யாதும்
கொண்டாடிடும்..
இப்போது
ஓடடா..
ஓடடா..
நுண்மத்தை
வென்றிடும்
நுட்பத்தை
சீக்கிரம்
காணடா...
கண்டும்
நீ
திருந்திடா
தருணம்
வந்து
வாய்க்கையில்
நுண்மந்தானல்ல
நூறாயிரம்
வழிகளுண்டு
என்னிடம்..
கடும்புயலோ
கொள்ளை நோயோ
வெவ்வேறு
வேறுவடிவம்
கொண்டுனை
துரத்தி வருவேன்
பாரடா
பாரடா..
வெள்ளி, 20 மார்ச், 2020
**சிட்டுப் பெண்ணே** ஜானி சின்னப்பன்
கீச்..கீச்..கீச்சென
கொஞ்சும்
குரலில்
குதூகலமாக
கீச்சிடும்
குருவிப் பெண்ணே..
அன்றொரு தினம்
அருமையாய் ஒரு
கூடுகட்ட உன்
துணையோடு
சோராது உழைத்த
தருணமோ
என் மனதில்
அத்தனை
பெரிதாகப்படவில்லை..
உன் கூட்டுக்குள்
அவ்வப்போது
கேட்டிடும்
உன் இணையோடு
கூடிக்குலவிடும்
கீச்சொலிகள்..
வாசத்தோடென்
வாசலை நிரப்பியபோதும்
காதை வேறுபக்கம்
திருப்பி செல்ல
தயங்கியதில்லை..
திடீரென
சிலிர்க்க வைக்கும்
உன் குஞ்சுகளின்
உற்சாகக் குரலைக்
கேட்டு மயங்கிப்
போனேன்..
புழு தேடிப் பறந்திடும்
உன் இரைதேடும்
படலம் இதோ
தொடங்கிவிட்டது..
உன் உலகை இரசிக்க
நானும்
தயாராய்....
-ஜானி சின்னப்பன்..
வியாழன், 19 மார்ச், 2020
புதன், 18 மார்ச், 2020
காத்திருப்பேன் காதலுடன்....ஜானி
கண்ணே
கடைவிழிப் பார்வை
வீசி என் இதயம்
வெடிக்க வைத்தாய்..
கண்ணீர்ப்பின்
விசையில் விழுந்து
காதலுண்டேன்..
உன் பெற்றோர்
நினைவில்வர
தப்பென்றே விலகிப்
போனேன்..
எனையறியாமல்
நீ வீசிப்போன
புன்னகையெனும்
கடப்பாறை என்
இதயத்தை பெயர்த்தெடுக்க
உலகைமறந்து
உன்மேல்
உன்மத்தமானேன்..
வீழ்ந்தது மனத்திரை..
வீழ்த்தியது நீ..எனை
விழுங்கட்டுமே
கல்லறை..
விழாதென்
காதல் கோட்டை..
விழிப்போடு நான்..
மீண்டும் சந்திக்கையில்
காதல் கீதத்தை
இசைத்தே தீருவேன்..
இசைவாயா?
இதயம் தடதடக்க
நீவரும் பாதை
நோக்கிக்
காத்திருப்பேன்
காதலுடன்...
சனி, 7 மார்ச், 2020
*ப்ரியமானவளுக்கு...*_ஜானி சின்னப்பன்
சுடாதே
தென்றலே
சுட்டபின்
காயங்கள்
ஆறாதே..
உன் வார்த்தை
பாயுதே அம்பாய்
நீயே பெரும்
தீப்பிழம்பாய்..
ஈரம் கசிகிறது
இதயத்தில்..
கலங்குகிறது
கண்கள்..
இமைகள்
அதை மூடி
அழுகை மறைத்ததே..
வார்த்தைகள்
புரிதல்கள்
நிதர்சனம்
அனைத்துமே
அற்பமே
அன்பே
உன் இருப்பே
என் உயிர்ப்பென்று
உணர்வாயோ
உயிரே..
நமக்குள் ஏனடி
வம்பு?
வாய்ச்சொல்
வீரியத்தால்
உனை இழக்க
எனக்கேதடி
தெம்பு?
துயரத்தைத்
தூக்கிப்போட்டு
சேர்ந்தே வாசல்
மிதிப்போம்..
மௌனத்தின்
அமைதியின்
தனிமையின்
ஒன்றிப்பில்
களித்திருப்போம்..
வேண்டாமடி
முறிவுகள்..
கட்டுப்போட்டு
இறுக்கம்
சேர்த்து
பிரிவை
பிரிந்தோட
செய்வோம்..
வா...
தவிப்போடு இவன்..ஜானி
தூக்கமின்றி
தவிக்க வைத்தாய்..
நிம்மதியின்றி
அலைய
வைத்தாய்..
ஆசுவாசத்துக்கே
நேரம் தர மறுத்தாய்..
கதைகள் படித்தும்
கவிதை வடித்தும்..
வேலைபல செய்தும்..
எத்தனை எத்தனித்தும்
புத்தியில்
மாற்றமில்லை..
தொடர்ச்சியாய்..
புவியை ஈர்த்து
சுற்றும் நிலவாய்...
உன்
நினைவென்னை
ஈர்த்து
அலைக்கழிப்பதை
தவத்தின் சாட்சியாய்
ஒருநிலை மனதாய்
அகலாமல்
வேடிக்கை
பார்த்தவாறு..
நான்...
வெள்ளி, 6 மார்ச், 2020
கொரோனா..கொரோனா..
கொரோனா
கொடாத
கேளிக்கையில்லை
நிகழ்காலம்..
கொரோனா
கொண்டு வந்த
பீதியைவிட
கொரோனாவை
கொண்டாடி
மீம்ஸ் பேதி
கொண்டுவரும்
ஊடகங்களின்
ஊர்வலங்களே
தலைப்பாய்
தினம் தினம்
திண்டாட வைக்கிறது
திகைக்கும்
திடமனதில்லா
எளியோரை..
மருந்தில்லையாமே
மறைக்கிறாங்களாமே
புடிச்சி வெக்கிறாங்களாமே
முகமூடி போடணுமாமே..
நிஜத்தில்
கொரோனா
கொன்றதைவிட
கொரோனாவோ
என்கிற
பயமே
கொன்றிடும்
எதிர்காலம்..
கண்டறிவோம்
கடும்முயற்சி
கொண்டு
கொரோனாவை
வெல்லும்
வழி சீக்கிரம்...