திங்கள், 27 மார்ச், 2023

காமிக்ஸ்_அனுபவங்கள்

 அதுவொரு ஓட்டைதகரடப்பா பங்க்கடை. அதில்தான் எனது குட்டி வாடகைப் புத்தக நிலையம் இயங்கியது. பள்ளி சிறுவர்கள்தான் என் உலகம். அவர்கள்தான் என் வாடிக்கையாளர்கள்.. 10 காசு வாடகை. எனது தந்தையாரின் முட்டை கடையிலேயே எனது புத்தகங்களை வைத்து அழகு சேர்த்திருந்தேன். விதவிதவிதமாக அடுக்கி அழகு பார்ப்பது என் வழக்கம். அவ்வப்போது தோழர் முருகன் வந்து உதவி விட்டுப் போவார். ஒரு பலத்த அடைமழை நாளில் புத்தகங்கள் அனைத்தும் நனைந்து கொழகொழத்துப் போயின. என்னால் உடனடியாக அவற்றை மீட்க இயலாமல் போய் கண்ணீர் மல்கிய நாட்கள் அவை. ஐம்பது ரூபாய் மின்னும் மரணத்தை பக்கம் பிரித்து காய வைப்பதற்குள் நாக்கு தள்ளி விட்டது. இன்றும் மறக்கா வடு மனதில். ஏகப்பட்ட லயன் ராணி மேகலா மேத்தா கொஞ்சமே கொஞ்சமாக டால்பினின் அத்தனை வெளியீடுகளும், கோபக்கனல் போன்ற எதிர்கால கதைகளும் இரத்தப்படலம் பாகங்களும் அங்கே அவ்வப்போது விவாதத்தில் இருந்து வந்தவையே. இளையராஜா, சங்கர் இருவரும் செம்ம கலாய் கலாய்ப்பார்கள் என்றாலும் அடங்காத ஆசையோடு சித்திரக்கதைகளின் விவாதங்கள் அனல் பறக்கும். என் தந்தை திரு.சின்னப்பன் அந்த விவாதங்களில் ஆழமாக பேசுவதை கண்டு உனக்கு ஏற்ற தந்தையடா என்னும் நண்பர்களிடம் என் தோழர் அவர் என்று பெருமையோடு சொல்வேன். அத்தனை இலகுவாக காமிக்ஸ் டைம் பாஸ் அங்கே நடக்கும்..அந்நாட்களில் வாசித்திராத பொன்னி போன்ற காமிக்ஸ்களைக் கண்டால் டித்தாக வேண்டும் என்கிற பேரவா ஏற்படுகிறது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக