திங்கள், 27 மார்ச், 2023

எங்க ஊர் நூலகத்துக்கான சித்திரக் கதைகள் ஷெல்ப் கனா

 


மணலூர்பேட்டை நூலகத்தின் 58 ஆவது ஆண்டு விழா


கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் மார்ச் 05, 1965 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை சார்பில் கிளை நூலகம் தொடங்கப்பட்டது.


இந்நூலகத்தின் 58 ஆவது ஆண்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது


இந்நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டக் குழுத்தலைவர் கு.ஐயாக்கண்ணு தலைமை வகித்தார்.


அரிமா சங்க மாவட்ட தலைவர் அம்மு ரவி, முதுகலை தாவரவியல் ஆசிரியர் அரிமா தா.சம்பத், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் பணி நிறைவு பெ.முனியன், வர்த்தகர் சங்க துணைச் செயலாளர் கு.சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


வாசகர் வட்டக் குழு துணைத் தலைவர் இளங்கவி சண்முகம் வரவேற்று பேசினார்.


நல்நூலகர் மு.அன்பழகனிடம் திருவண்ணாமல ஹோமியோபதி மருத்துவர் எம்.ராமானுஜம்,  மணலூர்பேட்டை பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மா.தம்பிதுரை ஆகியோர் வாசகர்கள் பயன்பாட்டிற்காக ரூபாய் 15 ஆயிரம் மதிப்புள்ள நூல் அடுக்குகளை நன்கொடையாக வழங்கினர்.


திருக்கோவலூர் வாசகர் வட்டக்குழுத் தலைவர் கவிமாமணி சிங்கார. உதியன் நூலகப் புரவலர்களுக்கு பட்டயம் வழங்கிப் பாராட்டி பேசினார்.


தமிழ் காமிக்ஸ் வாசர் வட்டம் சார்பில் காவலர் ஜானி சின்னப்பன் தமிழ் காமிக்ஸ் நூல்களை நன்கொடையாக வழங்கினார்.


விளந்தை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராஜகோபால், நூலகப் புரவலர்கள் மொ.நடராஜன், சி.சக்கரை, ம.வெங்கடேசன், எம்.ஜி.கண்ணன், ம.பாலு நாயுடு, கு.அய்யாசாமி, பி.ராமமூர்த்தி, எஸ்.ஜெயக்கண்ணு, ஒவியர் சு.செல்வம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.


நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பணியாளர்கள் அ.கிருஷ்ணமூர்த்தி, ச.தேவி, கி.பாஸ்கரன், பெ.விக்னேஷ் செய்திருந்தனர்


வாசகர் வட்ட பொருளாளர் வீர.சந்திரமோகன் நன்றி கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக