புதன், 15 அக்டோபர், 2025

வினோத கொலையாளி_இன்ஸ்பெக்டர் கருடா_தொடர்..004

வணக்கங்கள் அன்புள்ளங்களே.. விநோதக் கொலையாளியின் இறுதி பாகங்களை பகிர்கிறேன்.. சிறப்பான ஒரு கதையை எடுத்து அதற்கொரு உருவம் கொடுத்து சித்திரக்கதையில் நாயகர்களைப் புகுத்தி அவர்களுடைய பின்னணிகளையும் எதிர்நாயகர்களின் பின்னணிகளையும் அழகாகப் புகுத்தி...சித்திரக்கதை வடிவமைப்பது அத்தனை எளிதான சிறு பிள்ளை விளையாட்டு அல்ல.. ஆனால் வாசிப்புப் பழக்கம் குறைந்து வரும் இந்தத் தலைமுறையில் தங்களால் இயன்ற நேரமெல்லாம் வந்து வாசிக்கவும், தரவிறக்கவும் கமெண்ட் இடவும் முயற்சித்து வரும் உங்கள் அனைவர்க்கும் நன்றிகள்.. காவல் ஆய்வாளர் கருடன், கான்ஸ்டபிள் பீர்பால் இருவரும் பறவைகளின் அச்சுறுத்தலுக்கு  ஆளாகும் மருத்துவரின் பின்புலம் ஆராயப் புகுகின்றனர். அவரின் மனைவி கடத்தப்படுகிறாள்.. அதனை புலனாய்வு செய்கையில் பறவைகளை வைத்து தாக்குதல் நிகழ்த்தும் கொடியவன் ஒருவனின் கரங்களில் சிக்குண்டு சிறைப்படுகிறார்கள்.. 
இந்த ஆபத்தான நிலையிலும் உணவு வரவில்லையா என்று கேட்டு சிரிப்பு மூட்ட முயற்சிக்கிறார் பீர்பால்.. லீலாவும் டாக்டரும் சந்தித்துக் கொள்கிறார்கள்.. வில்லன் வழக்கம்போல சிறிது நேர நல்லவனாக மாறுகிறான். 
இன்டர்போல் தேடும் கொலைகாரன் பரூக்தான் இங்கே பதுங்கி இருந்து தனது தாக்குதலை மேற்கொள்ள உத்தேசித்திருக்கிறான் என்பதை இன்ஸ்பெக்டர் கருடாவின் மூளை கணித்து விடுகிறது.. டாக்டர் லீலாவைப் பிரித்து வைத்ததுபோன்றே பறவைகளையும் பிரித்து வைத்திருக்கும் குரூரகுணம் இந்த வில்லனின் தனிக்குணம்.. அவனது இலட்சியம் இப்போது விடுபடும் புதிராகிறது.. 
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றின் தலைவருக்கு வைக்கப்பட்ட குறிதான் வில்லன் அனுப்பும் பறவை வடிவில் செல்கிறது.. இது இன்ஸ்பெக்டர் கருடன் நேரம்.. 
விமானம் காப்பாற்றப்பட்டு விடுகிறது.. கொடியவன் கைதாகிறான். அனைத்தும் நலமே.. அதிமேதை அப்பு கேள்வி பதில்கள் சுவாரசியத்துடன் வெளியாகி இருக்கின்றன.. வாசித்து மகிழ்ந்த அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..  
                            என்றும் அதே அன்புடன் உங்கள் நண்பன் ஜானி.. 
முந்தைய பகுதிகளை வாசிக்க..





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக