ஞாயிறு, 29 அக்டோபர், 2017

015-இறைவாக்கினர் ஓசேயா-விவிலிய சித்திரக் கதை வரிசை

இனிய வணக்கங்கள் தோழமை உள்ளங்களே...


இறைவாக்கினர் ஓசேயா அவர்களது வாழ்க்கை வரலாறு...
பதினான்கு அதிகாரங்களில் கர்த்தருடைய செம்மையான வழிகளில் நீதிமான்கள் நடப்பார்கள்..பாதகரோவென்றால் அவைகளில் இடறி விழுவார்கள் என்று ஓங்கிக் குரல் எழுப்பி நாட்டுக்கு நடைபெறப்போகும் விபரீதங்களை தன் சொந்த வாழ்விலும் கண்டு அதனையே தன் குரலாகவும் ஓங்கி ஒலித்த இறைவாக்கினர் ஓசியா என்றும் அழைக்கப்படுபவரின் வாழ்க்கை வரலாறு உங்கள் கரங்களில் சித்திர வடிவில் இதோ தவழவிருக்கிறது... விறுவிறுப்பான இந்தக் கதையை வாசித்து மகிழுங்கள்.. 





































இந்த சரித்திரத்தை பிடிஎப்பில் பெற:

https://www.mediafire.com/file/0yo9maew8mb667p/15-oseya.pdf

என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி திரு.அலெக்சாண்டர் வாஸ் அவர்களுடன் இணைந்து... 

புதன், 25 அக்டோபர், 2017

காமிக்ஸ் - ஒரு சதுரங்க விளையாட்டு..(Comics - the Chess Game)

வணக்கம் தோழமை உள்ளங்களே...
நீங்கள் புதிய வாசகராக இருக்கக்கூடும்...
சித்திரக் கதை உலகத்துக்குள் நீங்கள் நடை பழகிக் கொண்டிருக்கக் கூடும்....
அல்லது நீங்கள் பழம்பெரும் வாசகராக இருக்கக்கூடும்...
அல்லது தேடல் நிறைந்த புதுத் தலைமுறை சேகரிப்பாளராக இருக்கக்கூடும்...
உங்களுடன் ஒரு சில வார்த்தைகள்....

இது ஒரு செஸ் கேம் (சதுரங்க விளையாட்டு போன்றது)
இங்கே நீங்கள் நகரும் திசையைப் பொறுத்தே மற்றவர்கள் தங்கள் திசையை நிர்ணயித்துக் கொண்டு தங்கள் நகர்வை மேற்கொள்வார்கள்.

நீங்கள் புத்தகம் வாங்க விரும்பினீர்கள் என்றால் சிலர் அந்தப் புத்தகம் இருப்பதை வெளிப்படையாக தெரிவிப்பார்கள். சிலர் அந்தப் புத்தகத்தை முதலில் ஒளித்து வைத்து விட்டு ஆகா தேட ஆரம்பித்து விட்டார்கள்டோய் நம்மிடம் இருப்பது மற்றவர்கள் தேடும் புத்தகம் என்று சலனமின்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள்..மனதில் இருக்கும் மகிழ்ச்சியை ஆட்டக்காரர் வெளியில் காண்பிக்கக் கூடாது...இது சதுரங்க ஆட்டத்தின் முக்கியமான விதிகளுள் ஒன்று...

நீங்கள் வலைப்பூ துவக்க எண்ணி அதனைத் தெரிவிக்கும்பட்சத்தில் உங்களைத் தேடி ஆதரவுக் கரங்கள் நீளும்.. அதே சமயம் நீங்களெல்லாம் எழுத வந்து விட்டீர்களா என்ற மன நகர்வுகள் வேறு சில இடங்களில் உருவாகும்...

நீங்கள் சமூக வலைதளங்களில் வந்து விட்டீர்களா? பலர் நட்பு வட்டத்துக்குள் உங்களை சேர்த்துக் கொள்வார்கள்...சிலர் உங்கள் நகர்வை மாத்திரம் கவனித்துக் கொண்டே அமைதி காப்பார்கள்.

நீங்கள் பழைய புத்தகங்கள் உங்களிடம் இருப்பதாக வெளிக்காட்டிக் கொள்கிறீர்களா? சிலர் மகிழ்வார்கள். சிலர் அடடா இவனிடம் இருக்கும் புத்தகம் நம்மிடம் இல்லையே என்கிற கழிவிரக்கம் கொள்வார்கள். சிலர் இந்தப் புத்தகத்தை இவன் விற்கிறானா பார்க்கலாம் எனத் தூது விடுவார்கள்.. சிலர் புதிய சில புத்தகங்களை உங்களிடம் விற்க வாய்ப்புள்ளதா என்ற திசையில் நகர்வார்கள்...ஏனெனில் இது ஒரு சதுரங்க ஆட்டம். இங்கே நகர்தல்களும், நகர்த்தல்களும் விசித்திரமான திசைகளில் இருக்கும். ஒரே சமயத்தில் பல்வேறு திசைகளில் தாக்குதல்கள் இருக்கும்.... கொஞ்சம் அசந்தாலும் உங்கள் காய்கள் காலி...

நீங்கள் வாட்ஸ் அப் குழுக்களில் இணைகிறீர்களா? சிலர் உங்களை வரவேற்பார்கள்..சிலர் எப்போதடா, எந்த வகையிலடா இவனை வீழ்த்தி வெளியேற்றலாம் என்ற துடிப்பில் இருப்பார்கள். ஏனெனில் இந்த ஆட்டத்தில் வெட்டு எந்தப் பக்கமிருந்து எந்த காய் மூலமாக என்று கணிப்பது மிக மிகக் கடினம்.. இது ஒரு சதுரங்க ஆட்டம்..

நீங்கள் பழைய கடைகளை அணுகி புத்தகங்கள் பற்றிக் கேட்டுத் திரிகிறீர்களா? கவனம் அவர் ஏற்கனவே வேறு ஒருவரின் ஏஜெண்டாக இருக்கக்கூடும். உங்கள் தேடல் குறித்த செய்தி பல்வேறு இடங்களுக்கும் பறக்கும். உங்கள் தேடலில் ஏதேனும் புத்தகத்தைக் குறிப்பிட்டு விட்டீர்கள் என்றால் அந்தப் புத்தகம் குறித்த உடனடி அலசல் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு அதனைக் கொத்தித் தூக்கிச் சென்று விடுவார்கள்... சில காலம் கழித்து இப்படி ஒரு புத்தகம் இருக்கிறது...உங்களுக்குத் தேவைப்படுமா பாருங்கள் என்கிற ரீதியில் உங்களிடம் அந்தப் புத்தகம் காண்பிக்கப்படும்...கவனம் சிதறி விட்டீர்கள் என்றால் உங்கள் பர்ஸ் கணிசமானதோர் பாயிண்டுகளை இழக்க நேரிடும்.. இது சதுரங்க ஆட்டம்.. இங்கே உங்களது ஒவ்வொரு நகர்வும் அடுத்த இடத்தில் வேறு வகையான நகர்வை உருவாக்கும்...

நீங்கள் முகநூல் பக்கம் வந்து விட்டீர்களா? நல்வரவு... சதுரங்கப் பலகையில் நீங்கள் முதலில் இழக்கத் தயாராக இருக்க வேண்டியது உங்கள் நிம்மதி.. ஏனெனில் இங்கே நுழையும்போதே வெட்டப்படும் முதல் சோல்ஜர் உங்கள் நிம்மதிதான்.. எக்கச்சக்கமான பக்கங்கள்.. எதைத் தேர்வது, எதைத் தவிர்ப்பது? எங்கே மொக்கை? எங்கே வித்தை? எங்கே பிடிஎப்? எங்கே பரிமாற்றம்? எது ஒரிஜினல்? எது டூப்ளிகேட்? எங்கே போலிகள்? எங்கே உண்மையானவர்கள்? அத்தனையும் நீங்களே தேடித் திரிந்து பொறுக்கி அலசி ஆராய்ந்து சல்லடை போட்டு என அத்தனை வேலைகளையும் செய்ய வேண்டும். அத்தனையிலும் நீங்கள் உங்கள் திசையை உங்கள் நகர்தலை நீங்களே மேற்கொண்டாக வேண்டும்.. உங்களுக்கு விதவிதமான அழைப்புகளும், விதவிதமான செய்திகளும், விதவிதமான தேவைகளும்.. அங்கே சிறகடித்துப் பறக்கும்...
இது சதுரங்க ஆட்டம் உங்கள் ஒவ்வொரு நகர்தலும் மிக மிக முக்கியம்.

வாசகர்கள் பல்வேறு விதமாக இருப்பார்கள்.. வணிகர்களும் பல்வேறு விதமாக இருப்பார்கள்... அனைவரிலும் நல்லவர்களும் உண்டு..மோசமானவர்களும் உண்டு... நீங்கள் செலுத்தும் பணத்தை வாங்கிக் கொண்டு.. நீங்கள் கொடுக்க வேண்டிய பணத்தை இன்னும் தராமல் ஏமாற்றுகிறீர்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைப்பார்கள்... நீங்கள் அனுப்பிய பணத்தை வாங்கிக் கொண்டு புத்தகங்களைத் தராமலேயே காலம் கடத்துவார்கள். நீங்கள் அனுப்பிய புத்தகங்களை வாங்கிக் கொண்டு பணம் தராமலும் காலத்தைக் கடத்துவார்கள்.. இங்கே ராஜா யார்? ராணி யார்? பிஷப் யார்? யானைகள் எவை? குதிரைகள் எவை? வெற்று வீரர்கள் யார்? வாய்ச்சவடால் வீரர்கள் யார்? சரியான வீரர் யார்? கண்டறிவது கடினம். நீங்களே பாதிப்புக்குள்ளானால் மட்டுமே..நீங்களே அனுபவசாலியானால் மட்டுமே இந்த ஆட்டத்தில் தாக்குப்பிடிப்பீர்கள்.

நீங்கள் தொண்டுள்ளம், தியாக உள்ளம், அர்ப்பணிப்பு போன்றவைகளுடன் இங்கே வரக்கூடும்.. சில வருடங்களில் பக்கா பணம் பிடுங்கிக் கழுகாக நீங்கள் மாறியிருப்பதை உங்களாலேயே கண்டுபிடிக்க முடியாது. இங்கே உருமாற்றம் எப்போது வேண்டுமானால் நிகழலாம்.. ஏனெனில் இது வேற லெவல் சதுரங்க ஆட்டம்..

உங்கள் திறமைகளை வைத்து இங்கே சாதிக்க நினைத்துக் கொண்டிருப்பீர்கள்.. ஒரு கட்டத்தில் திரும்பிப் பார்த்தால் ஏதோ ஒரு நிறுவனத்தின் விளம்பரதாரராக மாறிப் போயிருப்பீர்கள்..உங்கள் தனித்தன்மை உங்களிடமிருந்து விடைபெற்றுப் போயிருக்கும்... அதனை உணர்வது யானையின் மேலிருக்கும் சுண்டெலியை விரட்டி விடுவதற்கு சமம்... அவ்வளவு எளிதானதல்ல.. ஏனெனில் இது சதுரங்க ஆட்டம்.. இங்கே நீங்கள் நகரும் திசை வேறிடங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்... கேயாஸ் போன்று..

         கவனமாக ஆட்டத்தைத் துவக்கி உங்கள் காய்களைப் பாதுகாத்துக் கொண்டு ஆட்டத்தை சிறப்பாக ஆட என் வாழ்த்துக்கள். இது ஒரு முடிவில்லா ஆட்டம். இங்கே காலடி எடுத்து வைத்து விட்டீர்கள் என்றால் இந்த ஆடுகளத்தை விட்டு எங்கேயும் தப்பியோட முடியாது.. இது முடிவில்லா சதுரங்க ஆட்டம். நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள். நீங்களே ஆடிக் கொண்டிருக்க வேண்டியதுதான். பல காய்களையும் வைத்து வெற்றிகரமாக நகர்தலை மேற்கொண்டு ஆட்டத்தைத் தொடர வாழ்த்துகிறேன்...
என்றும் அதே அன்புடன்...உங்கள் இனிய நண்பன் ஜானி...

ஞாயிறு, 22 அக்டோபர், 2017

015_நீதி வெள்ளமெனப் பொங்கி வருக...ஆமோஸ்_விவிலிய சித்திரக் கதை வரிசை

வணக்கங்கள் தோழமை உள்ளங்களே...
இம்முறை நான் ஆமோஸ் அவர்களது கதையுடன் உங்களை சந்திக்கிறேன். விவிலியம் கூறும் வரலாறுகளில் ஒன்பது அதிகாரங்களில் சுருங்கக் கூறப்படும் வரலாறு ஆமோஸ் என்கிற இறையன்பருடையது...
இவரும் ஓர் ஆட்டிடையர். இறைவனின் தரிசனம் இவருக்குக் கிட்ட அவர் உதிர்த்த வார்த்தைகள் விவிலியத்தில்... நீதி வெள்ளமெனப் பொங்கி வருக...நேர்மை வற்றாத ஆறெனப் பாய்ந்து வருக...என்கிறது..
இதோ அவருடைய வரலாறு சித்திரக் கதை வடிவில்...



































இந்த சித்திரக் கதையை பிடிஎப் ஆகப் படித்து இன்புற:

இந்த சித்திரக் கதையை சிபிஆர் ஆகப் படித்து இன்புற:
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி சின்னப்பன்..
அலெக்சாண்டர் வாஸ் அவர்களுடன் இணைந்து... 

சேட்டை நான்சி_அறிமுகம்

 வணக்கம் தோழர்களே..  இன்றைய சிறு அறிமுகம் இந்த நான்சி.. அவளது சேட்டைகளை அட்டையிலேயே காண்பித்திருக்கிறார்கள்.. வாசித்து இரசியுங்கள்..  என்றும...