வெள்ளி, 29 ஜனவரி, 2021

அடிப் பெண்ணெனும் தீயே...

 


பனிசூழ் உலகிலே 

அகத்தீயாய் நீ...

விட்டு விலகியே 

அகிலம் சமம்செய் 

அகத்தியனாய் நான்..

முத்திரை பதிக்குமொரு

மென் முத்தமிட 

நெருங்கினால்

நொறுங்கிடும்

தரணியே..

இணையாமலே

தண்டவாளமாய் 

நம் பாதைகள்..

அங்கு நீ..

இங்கு நான்..

விதியை

நொந்தவாறே

தொலைவே நின்று

துயரம் அடக்கிப்

புன்னகையைப் 

பரிசளிக்கிறேன்..

ஏற்றிடுவாய்

ஏந்திழையே..

பிழைத்துப் போகட்டும்

மானுடர்கள்..

பிரஞ்சம் நம் காதல் 

பிரிந்தாலும் இறுகிடும்

மாயம் புரியாமலே

போகட்டும்...

- ஜானி சின்னப்பன்

#கவிதையதிகாரம்

#ஜானி #jscjohny

புதன், 27 ஜனவரி, 2021

இழப்பைக் கடப்போம்...

 *இதையும்...*


கடந்து வருவீர் 

நெஞ்சில் வலி

 கொண்டோரே..

காலமொன்றே 

கண்ணீரின் வலியைக்

கரைத்திடும் மருந்தாகும்..

எல்லோரின் நினைவிலும் 

எங்கோ ஒரு மூலையில்

சுகமாகவோ

வேதனையுடனோ

மகிழ்ச்சியுடனோ

வெறுப்புடனோ

ஏதாவது ஒரு நினைவின்

கீற்றாகத் தங்கும் எவரது இழப்பினையும்..

தவிர்க்கவே முடியா 

நினைவுகளும்...

தாங்கவே இயலா 

பாரங்களும்..

தொண்டையை அடைத்திடும் துக்கமும் நம்மிடம்

சொல்லிப் போகும் 

செய்தி ஒன்றுண்டு கேளீர்...

இதுவும் கடந்து போம்..

ஏற்கனவே இழந்த 

ஏதோவொன்றின் 

யாரோ ஒருவரின்

எண்ண மிச்சம் 

கரைந்தது போலவே...

ஆம்..

காலமே காயத்தையாற்றும் அருமருந்து.. 

மனதைத் தேற்றி

வாழ்வை மாற்றி

உறவைப் போற்றி 

வாழ்வோம் வாரீர்...

#செயலதிகாரம்...

#jscjohny

#ஜானி

#கவிதையதிகாரம் 


(நண்பர் ஒருவரின் பிரிவால் வாடும் குடும்பத்தாரின் ஆறுதலுக்கு...)

Super Tex 56. I Demoni Del Lago -june issue

  வணக்கங்கள் வாசக வாசகியரே.  வரவிருக்கும் இத்தாலியன் வெர்ஷன் சூப்பர்  டெக்ஸ்: ஏரியின் பேய்கள்  விடுவிக்க ஒரு கைதி, கடக்க ஒரு சாபமிட்ட ஏரி: ட...