jsc johny
தேடல்தான் அடிப்படை... நம்ம வலைப்பூ சித்திரக்கதைகளை மையமாகக் கொண்டியங்குகிறது..
திங்கள், 13 அக்டோபர், 2025
V 24-எழுந்து வந்த எதிரி _ராபின் சாகசம்
வெள்ளி, 10 அக்டோபர், 2025
பாக்கெட் நாவல் தீபாவளி வெளியீடுகள்
புரட்டாசிய நேசி,
பரோட்டா குருமாவ யோசி...
இந்த அரைவை இயந்திரம்(கிரைண்டர் ) இருக்கு பாருங்க... அதில் என்னை மாதிரி மாவாட்டிய, மாவாட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு
தெரியும்.
அரைக்கறப்பே கொஞ்சம் கொஞ்சமா போடணும், ஒரேடியா போட்டா அப்படியே நின்னுடும்.
நம்ம வயிறும் ஒரு கிரைண்டர் தான்.
தொறுங்க திண்ணா நூறு வயசு என்பார்கள்.
நம்மாளு அத தப்பா எடுத்துக்கொண்டு நொறுக்கு தீணிகளான முறுக்கு, வடை,சிப்ஸ்களை ஃபுல் கட்டு கட்டுகிறார்கள்.
நொறுங்க தின்பது நன்றாக வாயில மென்று சாப்பிடுவது.
நாம எத சொன்னாலும் திருந்தமாட்டோம் என்பதால் தான் சில விசயங்களை சமய மதங்களில் சேர்த்து வாழ்வியலாக்கிட்டாங்க.
இந்த புரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது என்பதும் அப்படித்தான்.
வருடம் முழுக்க ஊர்வன, பறப்பன, நீந்துவன என உண்ணும் நாம் வயிறு என்ற அரவை இயந்திரத்திற்கு கொஞ்சம் மென்மையான உணவுகளை உண்ணுவதால் குடல்,வயிறு எல்லாம் விட்டாச்சு லீவு,லீவு என கொண்ட்டாட்டம் போடும்.
அடுத்து பரோட்டா குருமா... இத நினைத்தாலே சாப்பிடணும் என்ற ஆசை வருவது உண்மை தான்.
பரோட்டா மாதிரியான பலன் குறைவு பாதிப்பு அதிகம் என்ற உணவு உலகில் வேற இல்லை. அடிக்கடி சாப்பிடாதீங்க, மாசத்திற்கு ஒரு தடவ இரண்டு தடவ என இருக்கட்டும். எப்பவுமே சாப்பிடாம இருந்தா உத்தமம்.
நானும் புரட்டாசியில் குடும்பநாவல்ல இரண்டு, கும்கில இரண்டு என நான்கு பெண்களை கொழு வச்ச மாதிரி அனுப்பலாம் என முடிவு செய்து முதல் தேதிக்கு அனுப்பிட்டேன்.
ஆனா நம்ம க்ரைம்நாவல் வகையறாக்கள்
அலோ அசோகரே நாங்க ஆடில அதிரடியா இருப்போம் புரட்டாசியில் புயலா இருப்போம்.
நாலு பெண்கள் போலவே நாலு ஆண்கள் கண்டிப்பா வேண்டும் என கொடி பிடிக்காத குறையா சவுண்டு விட்டதால், போர்க்கால நடவடிக்கையா நாலு பசங்களை ரெடி பண்ணிட்டேன்.
நாலு புள்ளைங்களும் 14 ஆம் தேதி உங்க பொற்கரங்களில் தவழுவாங்க.
வெரிக்குட், வெரிக்குட்...
அது யாறு வாரிக்கொட்டு மன்னிக்கவும் வெரிக்குட் என்பது.
தலைவரே, நான் தான் டெல்லி ஹரிஹரன் விஸ்வநாதன் ...
தலைவரே, மகிழ்ச்சி, நன்றி...ஆமா டெல்லிக்கு நம்ம புத்தகங்களை எப்ப வாங்கப் போறீங்க.
விரைவில் வாங்கிடறேன் தலைவரே... திபாவளிய சிறப்பா கொண்டாட வெச்சுட்டீங்க, அப்படியே இந்த எட்டு புத்தகங்களை வாங்க எவ்வளவு என்று சொல்லிட்டா... பணத்தை அனுப்பி வைக்கிறேன் .
தலைவரே உங்களுக்கில்லாததா, எட்டு புத்தகங்களும் தேவை என்போர்
ரூ.300/= யை 9443868121 என்ற எண்ணிற்கு அனுப்பி வைக்கவும். தமிழ்நாடு தவிர வெளி மாநிலங்களுக்கு ரூ.30;= சேர்ந்து ரூ.330/=ஆக அனுப்பவும்
-அசோகன் அண்ணன்
புதன், 8 அக்டோபர், 2025
#14- களவு போன கிரீடம்
Kvg சாரின் மொழிபெயர்ப்பில் இந்த ஜி காமிக்ஸ் வெளியிடப்பட்டுள்ளது வீரபாண்டியன் அவர்கள் டைட் செட் உதவி செய்துள்ளார் இந்த புத்தகத்தில் களவு போன கிரீடம் என்கிற தலைப்பில் ஒற்றை கதை வெளியிடப்பட்டுள்ளது கதையின் இளவரசர் ஒருவர் அவரது நாடான தாரத்தோர் என்ற நாட்டில் தன்னுடைய பாரம்பரியமான அரிய பொக்கிஷமாம் தன்னுடைய கிரீடத்தை களவு கொடுத்து விடுகிறார் அதனை மீட்கும் மாபெரும் பொறுப்பு துப்பறிவாளர் லெஸ்லி ஷேன் அம்மணிக்கு வழங்கப்படுகிறது லெஸ்லி எப்படி களவு போன கிரீடத்தை கண்டுபிடித்தார் என்பது கதையின் மைய புள்ளி. ஜுடோ கற்ற நமது நாயகியின் துப்பாரியும் திறனுக்கும் அதிரடிக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாத கதை.. கருப்பு வெள்ளையில் தடக் தடக் என காட்சிகள் மாறுகின்றன நம்மை ஓவியங்கள் கட்டிப்போட்டு விடுகின்றன கண்டிப்பாக தவற விட கூடாத கதை இது நன்றி
Gemini ai உதவியுடன் கொஞ்சம் டெவலப் செய்து பார்த்து மகிழ்ச்சி அடைந்த சில அட்டைகள் இதோ..
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி சின்னப்பன்
செவ்வாய், 7 அக்டோபர், 2025
சிகப்பு சிகை சங்கம் _ ஷெர்லக் ஹோல்ம்ஸ் சாகசம் - 2 _G Comics
அன்புள்ள வாசகர்களே வணக்கம்..
இந்த மாதம் வெளியீடாக ஜி காமிக்ஸில் வெளியாகி இருக்கும் இரண்டு நூல்களில் முதல் நூலான சிகப்பு சிகை சங்கம்.. இது ஒரு ஷெர்லக் ஹோல்ம்ஸ் சாகசம். துப்பறிவதில் முன்னோடியான ஷெர்லக் தனது நண்பர் டாக்டர் வாட்சனுடன் தனது துப்பறிவின் ஒவ்வொரு நகர்தலையும் பகிர்ந்து கொள்ளும் தருணங்கள் நமக்கு சர்க்கரைப் பாகாய் இனிக்கும்.. இப்படியும் ஒரு பலதுறை ஆற்றல் பெற்ற துப்பறிவாளரா என்று ஆச்சரியப்படுத்தும்.. திரைப்படங்களாகவும், ஆடியோ ரேடியோ நாடகங்களாகவும், நூல் வடிவிலும் மக்களை மிகவும் கொண்டாட வைத்த ஷெர்லக் இங்கே சித்திரக்கதை மூலம் நம்மைத் தொட வருகிறார்.. முத்து காமிக்ஸ் மூலம் தமிழில் ஏற்கனவே பரிச்சயமான நாயகர் இவர். ஆரம்பத்தில் ஷெர்லக் செய்யும் செயல்கள் ஒருவருக்கும் புரியாது தவிப்பார்கள்.. ஆனால் அதன் பலனை விவரிப்புகளுடன் அவர் கூறும்வேளையில் அனைவரும் பிரமிப்பார்கள். அதுதான் அவருடைய துப்பறியும் ஸ்டைல்..
நமது ஜி காமிக்ஸின் பதிமூன்றாவது வெளியீடாக ரூபாய் எழுபத்தைந்து விலையில் சிகப்பு சிகை சங்கம் மற்றும் போஹீமியாவில் ஒரு அவதூறு ஆக இரண்டு கதைகளுடன் நம்மை சந்திக்க வந்திருக்கிறது..
ஆக இவ்வளவு ப்ரிவ்யூ போதும் என்று நினைக்கிறேன்.. சிறப்பான ஷெர்லக் கதைகள் உங்களைக் கவர்ந்து இழுப்பது உறுதி.. புதிரான ஒரு விளம்பரம் செய்தித்தாளில் வருகிறது.. அதனை கவனித்தாலும் அப்போது எதுவும் பிரச்சினை இல்லாத நிலையில் அதனை ஓரங்கட்டி விட்டு தன் பணியினை மேற்கொண்டிருக்கிறார் ஷெர்லக்.. ஒரு கட்டத்தில் அதன் தொடர்ச்சி அவரது வீட்டு வாசலுக்கே வந்து அடைகிறது.. விட்டு விடுவாரா என்ன? ஆணிவேர் வரை ஆராய்ந்து முன்கூட்டியே ஒரு சம்பவத்தைக் கணித்து விடுகிறார் ஷெர்லக்.. அது நிகழ்ந்ததா? குற்றத்தை எப்படி முன்கூட்டியே கண்டு கொண்டார் என்பதை இந்த சிகப்பு தலை சாகசம் உங்களுக்கு சுவாரஸ்யமாகக் கூறவிருக்கிறது.. வாசித்து மகிழவும் சித்திரக்கதைகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கவும் உங்களை அன்புடன் வேண்டுகிறேன்.
திங்கள், 6 அக்டோபர், 2025
IND-190-அண்டவெளி அசுர எலியார்_மாண்ட்ரேக் அண்ட் லொதார்_இந்திரஜால் காமிக்ஸ்
வணக்கம் அன்பு நெஞ்சங்களே.. இம்முறை நாம் வாசிக்கவிருப்பது அண்டவெளி அசுர எலியார்.. 1974ம் ஆண்டு ஒரு ரூபாய் விலையில் வெளியிடப்பட்ட டைம்ஸ் ஆப் இந்தியா வெளியீடு. வேற்று கிரகங்களின் மோதல் பூமிப் பந்தை அடைகையில் இங்கே சிறந்த நபரான மாண்ட்ரேக் அந்த சிக்கலை தீர்த்து வைக்க தூதுவராக செல்கிறார்.. ஆழ்கடலுக்கடியில் பூமிக்கு அச்சுறுத்தலாக வந்திருக்கும் எலியார்களின் முக்கிய பிரச்சினை தீனி,சாப்பாடு, உணவு.. அவர்களை மாண்ட்ரேக் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதையின் மையக்கரு..
பல்வேறு கிரகத்தின் நபர்களை கைது செய்து வருகிறது விண்வெளி ஓடம் ஒன்று.. அதன் எஜமானர்கள் அசுர எலியார்கள். புவியின் ஆழ்கடலில் அவர்களை ஒளித்து வைத்து தகுந்த சமயத்துக்காக காத்திருக்கிறார்கள்.. அவர்கள் கைது செய்திருப்பவர்களில் ஒருத்தி இளவரசி.. பேரண்டங்களின் அரசர் மக்னானின் மகள்.. அது அவர்கள் அறியாத இரகசியம்.. அப்படிப்பட்ட நேரத்தில் நமது மாண்ட்ரேக் உதவியுடன் மக்னான் செயல்பட காலம் கனிகிறது.. மாண்ட்ரேக் உதவியைக் கோருகிறார் அரசர்.. எலியாரை தப்ப விட்டால் முழு உலகையும் உணவாக்கிக் கொள்வர். விண்கலத்தில் இருப்பதோ பன்னிரெண்டே எலியர்.. என்ன நடக்கும்???
வாசித்து மகிழ நமக்காக புத்தகத்தைக் கொடுத்தும், ஸ்கேன் செய்தும் அளித்த நண்பர்கள் திரு.செந்தில்நாதன், திரு.குணா கரூர் ஆகியோர்களுக்கு நன்றிகளுடன்..
அபூர்வமான படைப்பிது.. மகிழ்ந்திடுங்கள்.. என்றும் அதே அன்புடன் உங்கள் நண்பன் ஜானி சின்னப்பன் @ விஜயா மைந்தன்.
மாண்ட்ரேக் கதைகள் இப்போது லயன் காமிக்ஸ் மூலமாக வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.. ஹார்ட் பவுண்டில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு வாசிக்க ஏதுவான வடிவில் கொண்டுவரப்பட்டுள்ளன.. வாங்கி வாசித்து ஆதரவு நல்குமாறு வேண்டுகிறேன்..
V 24-எழுந்து வந்த எதிரி _ராபின் சாகசம்
வணக்கம் நண்பர்களே.. இது வி காமிக்ஸின் இருபத்து நான்காவது சாகசம். ரூபாய் நூறு விலையில் நூறு பக்கங்களில் தீபாவளி மாதமான இந்த அக்டோபர் 2025ல் ...

-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
ஆம் நண்பர்களே.. வருக.. வணக்கங்கள்.. லயன் காமிக்ஸ் வாட்ஸ் அப் சேனலில் வந்த எடிட்டர் திரு.விஜயன் அவர்களது அதிகாரப் பூர்வமான அறிவிப்பு.. மிக்க...
-
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. சில அரிய சித்திரக்கதை புத்தகங்களை ஆவணப்படுத்த வேண்டும் என்கிற கனவ...