வெள்ளி, 8 ஜனவரி, 2021

கொலுசின் மொழி_கவிதை_ஜானி சின்னப்பன்


விலகி விலகிப் பறக்க நினைத்தாலும் புவி ஈர்ப்பைத் தாண்டி பறவைக்கெங்கேவானம்.. 

புவியை சுற்றிடும் நிலவாய் அவள் நினைவை சுற்றிடும் என் மனம்..

தொலைவில் கேட்கும் கொலுசின் மொழி என் மனதை மயக்கும் சொக்குப்பொடி

எங்கோ எதிரொலிக்கும் அவளது சிரிப்பு எங்கெங்கோ அலைந்து என் இதயம் துளைத்த அம்பு.

காற்றில் வீசிவரும் வாசம்  வழியெங்கும் மணக்கும் பூக்களை மிஞ்சிடும்.. அவள் வந்து போன தடத்தில்..

_ஜானி சின்னப்பன்..

#கவிதையதிகாரம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுட்டிப் பெண் நடாலி_அறிமுகம்

  வணக்கங்கள் இனிய உள்ளங்களே.. அன்பு நண்பர் திரு.K.V.கணேஷ் அவர்களது பிறந்த தினம் இன்று.. அவருக்கு நமது வலைப்பூ சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவ...