வியாழன், 27 மார்ச், 2014

தூரிகை மன்னர் வின்சென்ட் மோசஸ் ராஜா!!!

அன்பு வாசக நெஞ்சங்களே! என் ஆருயிர் வாக்காளப் பெருமக்களே!! உங்கள் ஓட்டை தவறாமல் ஏதாவது ஒரு சின்னத்திலோ நாப்பத்தி ஒன்பது ஓ விலோ குத்தி ஜனநாயகத்தின் பெருமைக்கு இன்னும் உரமூட்டப் போற மகாசனங்களுக்கும் சபையோருக்கும் என் வணக்கங்க! என்னது ஓட்டு போட கமிசன் வெட்றதா?!?!?!? அய்யா சாமீ அப்புறம் பதவிக்கு வந்தா உங்களையே மொட்டை போடுவோம் பரவால்லயா????  
நிற்க!! அன்பு சகோதரர், நண்பர் காமிக்ஸ் உலகின் சிறப்பான பக்கங்களில் ஒரு அட்டகாசமான நண்பர் திரு.ராசா ஹீ ஹீ ஹீ வின்சென்ட் மோசஸ் ராஜா தி கிங் ஆப் பிரஷ் அவர்களைக் குறித்து கோள் மூட்டுறதுல எனக்கு ரொம்ப சந்தோசமுங்க! (எப்படியும் உருட்டுக் கட்டையோட மேடம் அடுத்த தடவை வரவேற்கப் போறாங்க!! அந்த ரிஸ்கை எடுத்தாதானே எங்க காமிக்ஸ் ரசிகர்கள ரஸ்க் போட்டு திருப்தி பண்ண முடியும்?!??! ஹீ ஹீ ஹீ ) 
சார் எங்களுடன் நட்பு பாராட்டும் நல்ல உள்ளங்களில் ஒருவர்! சர்வதேச அளவில் அறிமுகமான கலக்கல் தமிழ் முகம் இவர்! தனது தூரிகையால் தமிழன் பெருமையை அமெரிக்கப் பத்திரிக்கைகள் வரை கொண்டு சேர்த்த படைப்புலக பிரம்மா இவர்! ஆனால் விளம்பர வெளிச்சம் கண்டு ஒதுங்கிப் பதுங்கிப் பின் பாயும் புலி இவர்! 
கொஞ்சுதமிழ் நான்ஜில் நாட்டு மன்னர் இவர். சிறப்பான காமிக்ஸ் முயற்சிகளும் பத்திரிக்கையுலக உலாவலும் கொண்டு திகழும் அருமையான மனிதர்! இவரிடம் இருந்து அனேக விஷயங்களைக் கற்கலாம்! 
தனது முயற்சியில் கண்மணி காமிக்ஸிலும் ஒரு சில கதைகளைப் படைத்துள்ளார்! அவற்றில் சாரின் அனுமதியுடன் ஒரு சில பக்கங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு....
பின் அட்டை 
கடற்கரை மணலில்... வின்சென்ட் மோசெஸ் அவர்களது மகத்தான தூரிகையில் விளைந்த அற்புதமான கதை 





இந்த பக்கங்களை எங்களுக்காக கொடுத்து உதவியதற்கு மிக்க நன்றி சார்! தங்கள் காமிக்ஸ் காதலுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்! இன்னும் சிறப்பான உங்களது படைப்புகளை இன்னும் இன்னும் எதிர் நோக்கி இருக்கிறோம்!!! 
சாரின் மற்றுமொரு அசத்தல் ஓவிய நூல்!!! மாபெரும் மீட்பர்!!!



பின் பக்கம் 

தவிர சுட்டி விகடனில் இலவச இணைப்பாக வரும் கட்டிங் ஓவியங்களை இணைத்து பொம்மை உருவம் செய்யும் எண்ணத்தினை விதைத்து ஆரம்ப அதகளம் செய்தவர் சார்தான்! இன்னும் பல சாதனைகளை புரிந்து எங்களை மெய்மறக்க செய்ய வேண்டியது உங்க கடமை சார்!!
 (ஹீ ஹீ ஹீ எங்க ஓடறீங்க!!!!)



என்றும் அதே அன்புடன்_ உங்கள் தோழன் ஜானி!!!!

செவ்வாய், 25 மார்ச், 2014

சக்தி சக்தி மகா சக்தி!!! _Sakthi Comics

வணக்கங்கள் வாசக நெஞ்சங்களே!! 
இம்முறை நாம் ரசிக்கவிருப்பது சக்தி காமிக்ஸ்! வெறும் முப்பது பக்கங்களில் அதிரடி நிகழ்த்தியுள்ளார் நம்ம ஆசிரியர் திரு விஜயன் அவர்கள்! கடுகு சிறுத்தாலும் காரம் குறைவதில்லை என்கிற முதுமொழிக்கு சான்றாக நம்ம ஆசிரியரின் முத்தான சிந்தனைகளில் விளைந்த நல்முத்து இந்த சக்தி காமிக்ஸ்! அட்டகாசமான கதைக் களம்! அருமையான எடிட்டிங் என்று எந்தக் கதையில் தனது பொற்கரம் பட்டாலும் அந்தக் கதையை தமிழரின் நெஞ்சுக்கு நெருக்கமாக மாற்றும் ரசவாதம் அறிந்தவர் இவர்! சிங்கத்துக்கு இணையாக சிங்கக் குட்டி தனது போர்க்களத்தில் தற்போது நிற்கிறது விக்ரம் விஜயன் என்கிற இந்த அணுகுண்டு தாக்கவுள்ளது தமிழ் காமிக்ஸ் ரசிகர்களின் உள்ளங்களையே!! தனது http://www.lioncomics.worldmart.in/ என்கிற அட்டகாசமான ஆன்லைன் விற்பனை தளம் மூலமாக புத்தகங்களை உலகளாவிய விதத்தில் பகிர விற்பனை செய்ய ஏதுவாக அமைந்துள்ள இந்த தளத்தினை நன்கு பயன்படுத்திக் கொள்ள உங்களை வரவேற்கிறோம்!!! காமிக்ஸ் ரசிகப் பெருமக்களுக்கு எங்கள் வந்தனங்கள்!!
இந்த நூல் ஒரு சாம்பிள் மட்டுமே! 
படித்து ரசித்து புத்தம்புது முயற்சிகளை தமிழ் கூறும் நல்லுலகுக்கு வழங்கிவரும் லயன் & முத்து குடும்ப காமிக்ஸ் இதழ்களை அனைவரும் வாங்கி படித்து ரசித்து மகிழ்ந்திட எங்கள் ரசிக உலகின் சார்பில் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!
 

















coming soon!!!!!
_Only in Lion Comics 30 years of long lasting experience which put u in the edges of seat!! 
_wait and watch the lion's show!!! 


தொடர்புடைய பக்கங்கள் ::
                                http://mudhalaipattalam.blogspot.in/2014/03/blog-post.html
என்றும் அதே அன்புடன் இந்த அரியதொரு புத்தகத்தினை வாசிக்க கொடுத்து உதவிய நண்பர் ரஞ்சித்துக்கு நன்றிகளை சொல்லிக் கொண்டு.....ஹீ ஹீ ஹீ

வெள்ளி, 21 மார்ச், 2014

விவிலிய காமிக்ஸ் வரிசை _01_காயின் & ஆபேல்

இனிய வணக்கங்கள் தோழமை நெஞ்சங்களே!! விவிலியம் என்பது வரலாற்றின் தொகுப்பு!! முதல் மனிதன் படைக்கப்பட்டதில் இருந்து இனியவர் இயேசுவின் மறுவருகை குறித்த எதிர்பார்ப்பு  நிறைந்த கிறிஸ்துவ வாழ்வு மேற்கொண்டுள்ள அன்பு மிகு சகோதர சகோதரிகளின் வாழ்க்கைக்கு விவிலியம் காட்டும் வழிமுறைகள் மிக அருமையாக காமிக்ஸ் வடிவில் கொண்டுவரப் பட்டுள்ளன.
 வரலாறு; மனிதர்கள்; சம்பவங்கள் என்கிற கோணத்தில் கண்டும் கேட்டும் ரசித்தும் படித்து மகிழ எங்கள் காமிக்ஸ்  ரசிகப் பெருமக்களுக்கு இந்த இதழை அன்பளிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்!! உதவிக் கரங்கள் நீட்டிய அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள் உரித்தாகட்டும்! இறைவனின் ஆசீர் உங்களோடு இருப்பதாக!!!! 



































see you then...bye folks! god bless you and your family!!!

ஈகிள் கேர்ள்-உதித்து விட்டாள்-புதிய வரவு

  வணக்கங்கள் அன்பு இரசிகர்களே.. புதிதாக கோவையில் இருந்து எசென்ஷியல் பப்ளிகேஷன்ஸ் வாயிலாக அறிமுகமாகி இருக்கிறாள் புதிய நாயகி ஈகிள் கேர்ள். இர...