புதன், 9 மே, 2018

001_அன்புமிகு கிரகம் அக்வா ப்ளூ...கோடை கொண்டாட்டம்..

கோடை விடுப்பில் இருக்கும் அனைத்து சுட்டிகளுக்கும் ஹாய்...
அது ஒரு அன்புமிகு கிரகம்...
அதன் பெயர் அக்வாப்ளூ...
அந்த கிரகத்துக்கு விண்வெளியில் இருந்து வந்த ஒரு சிறுவன்..
அவனை சுற்றிப் பின்னப்படும் கதை...
தோர்கல் வாசித்தவர்களுக்கு இந்தக்கதையின் களத்தை புரிந்து கொள்வது சுலபம்.. இது புவி அல்ல.. இது அக்வாப்ளூ கிரகம். இதன் பழங்குடிகள்...அவர்களின் மொழி..அனைத்தும் உங்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக பிடிபடத்தொடங்கும்...
ஒரு வெற்றிகரமான கதையின் சில பக்கங்களை உங்கள் தரிசனத்துக்கு வைத்திருக்கிறேன். இந்தக் கோடை வேளையில் உங்கள் சிறார்களுக்கும் பிடிக்கும் வகையிலான இந்தக் கதையை தமிழிலேயே சொல்லித்தர முயற்சியுங்களேன்...

சில சமயங்களில் இப்பேர்ப்பட்ட அட்டகாசமான கதையை தமிழ் மண்ணுக்கு எப்படித்தரப்போகிறோமோ என்கிற எண்ணம் அவ்வப்போது தலைதூக்குவதுண்டு.. ஆனாலும் சரி காத்திருப்போமே..இருக்கும் நல்ல பதிப்பகங்கள் ஏதாவது இதனை களமிறக்காதா என்கிற எண்ணத்திலேயே காலம் கடந்து கொண்டிருந்த சூழலில் இந்த அக்வாப்ளூ வெளியானால் எத்தனை மகிழ்ச்சியாக இருக்கும் என்கிற தூண்டுதலை திரு.ராகுலன் அவர்கள் என்னில் தூண்டிவிட்டுவிட சரி முயன்று பார்ப்போமே என்று உங்கள் பார்வைக்குப் பரிமாறுகிறேன்...
 இனி கதைக்குள் புகுங்கள்.. வழக்கம் போல இதுவும் ஒரு விசிறியின் தாகம் மட்டுமே.. விற்பனைக்கல்ல. ஒரிஜினல் காப்பிரைட் உரிமையாளர்கள் அணுகினால் மொழிபெயர்ப்பில் பங்கேற்க நான் தயார்...   













வாசித்தவர்கள் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்..
நன்றியும்..அன்பும்.. இது ஒரு கோடை கொண்டாட்டம்...



திங்கள், 23 ஏப்ரல், 2018

021_இறைவாக்கினர் எசேக்கியேல்_விவிலிய சித்திரக்கதைகள் வரிசை




பிரியமான நட்பூக்களுக்கு இனிய வணக்கங்கள். இம்முறை நாம் தரிசிக்கப் போவது செக்கரியா என்கிற இறைவாக்கினரின் தரிசனங்களையும் அவர் வாழ்ந்த காலக்கட்டத்தையும்.. இது விவிலிய சித்திரக்கதைகள் வரிசையில் இருபத்தோராம் புத்தகமாக வெளியாயிற்று.. வெளியிட்டோருக்கு நன்றியும் அன்பும்.. 
இதனை வாசிக்க ஏதுவாக ஸ்கான் செய்வதற்கு வழங்கி உதவிய திரு.அலெக்சாண்டர் வாஸ் அவர்களுக்கு நன்றிகள். 



































பிடிஎப் ஆக இந்த வரலாற்றைத் தரவிறக்கம் செய்ய விழைபவர்களுக்கு:

என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி சின்னப்பன்.

ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

ஏப்ரல் பூல் - செந்தில் ராஜன்_வாசக முயற்சி..

வணக்கங்கள் தோழமை உள்ளங்களே..
கதைகள் மனதில் பிறந்து விட்டாலே அதற்கு இறக்கை கட்டிக் காற்றில் மிதக்கவிட்டு வேடிக்கை பார்ப்பது நமது கற்பனைக் குதிரைகளுக்கான பாதை.. இதோ ஒரு சித்திரக்கதை இரசிகரின் முயற்சி.. முழுமையான நகைச்சுவை கதையினை தனக்குப் பிடித்த நாயகர்களுடன் இணைத்து நமக்கும் வாசிக்கக் கொடுத்துள்ளார். வாசித்து எப்படி இருக்கிறது என்று தெரிவியுங்கள்.. அவரை உற்சாகப்படுத்துவோம்... என்ஜாய்...













 இந்த கதையை சிபிஆர் வடிவில் வாசிக்க..
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி சின்னப்பன்.

ஈகிள் கேர்ள்-உதித்து விட்டாள்-புதிய வரவு

  வணக்கங்கள் அன்பு இரசிகர்களே.. புதிதாக கோவையில் இருந்து எசென்ஷியல் பப்ளிகேஷன்ஸ் வாயிலாக அறிமுகமாகி இருக்கிறாள் புதிய நாயகி ஈகிள் கேர்ள். இர...