வியாழன், 5 ஜூலை, 2018

சிறுவர் விவிலியம்_ஷீலா (முழு பதிப்பு)

வணக்கங்கள் இனிய நட்பூக்களே... இது சிறுவர் விவிலியம்.. முன்னொரு காலத்தில் நான் தூய வளனார் மேல்நிலைப் பள்ளியில் கடலூரில் படித்துக் கொண்டிருந்தபோது எங்களுக்கு வழங்கப்பட்டது.. பின்னர் இடையில் எங்கோ தொலைத்து விட்டேன். திருமணமான புதிதில் மாமனார் வீட்டுக்கு போனபோது என் துணைவியாரின் சேமிப்பில் இந்த நூல் தென்பட்டது.. மிகவும் மகிழ்ச்சிக்குள்ளானேன். சிறு சிறு விவிலிய சம்பவங்களை சித்திரங்களுடன் இணைத்து பரிமாறி இருந்தனர்.. இடையே நண்பர் திரு சேலம் டெக்ஸ் விஜயராகவன் கேட்டிருந்ததால் அதனை பகிர்ந்து இருந்தேன்..நன்றி நண்பரே..இதுகாறும் பாதுகாப்பாக வைத்திருந்தமைக்கு... எடிட்டிங் செய்து இப்போது பகிர்கிறேன்...  சிறிய இடைவெளியில் உங்களுக்கு முதல் பாகம் கொடுக்கப்பட்டுள்ளது.. அடுத்த பாகமும் விரைவில் கிடைக்கும்படி செய்கிறேன்... நன்றியும் அன்பும்...  
இதனை தரவிறக்கம் செய்து கொள்ள...









புதன், 4 ஜூலை, 2018

மலர் 22_இதழ்_50_சூது போட்ட சூடு_இந்திரஜால் காமிக்ஸ்...ஜேம்ஸ் ஜெகன்


வணக்கம் நண்பர்களே...
நண்பர் ஜேம்ஸ் ஜெகனின் மற்றுமொரு அன்பளிப்பிது. இந்தக் கதையில் மாண்ட்ரேக் தனக்கொரு சகோதரன் இருப்பதை அறிந்து கொள்கிறார். தீமையான எண்ணம் படைத்த அந்த சகோதரன் தனது சகோதரனுக்கு விதவிதமான சோதனைகளைக் கொடுக்கிறார்... 
நிற்க..இந்தக் கதையை எங்காவது வாசித்த நினைவிருக்கிறதா? முன் பின் அட்டைகள் மற்றும் இன்னபிற தகவல்கள் தங்கள் வசமிருப்பின் இந்த பிடிஎப் உடன் இணைத்து விடலாம். நன்றி.. 




கதையை தரவிறக்க..

என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி


நிற்க.. சிறு வேண்டுகோள்... 
இந்தக் கதையின் முதல் பக்கம் இதுதான் எனில் இது மூன்றாம் பாகம் என்றாகிறது.. முந்தைய பதிப்புகளை வாசித்தோர் தகவல் தரலாம்... 

IND-20-14-கந்தருவத் தீவினிலே_சுரேஷ் சந்த்


திரு.சுரேஷ் சந்த் அவர்கள் வழங்கும் இந்த அன்பளிபைப் பெற... 
                                            கந்தருவ தீவினிலே

ராஜாளி கோட்டை_வாசு காமிக்ஸ்_குமார் திருப்பூர்




அப்புறம் என்ன நடந்தது??? அறிந்து கொள்ள வாசியுங்கள் நண்பர் திருப்பூர் குமாரின்..


நண்பர்கள் அனைவரும் இதைப் போன்ற ஸ்கானிங் முயற்சிகளை செய்யலாம்.. அபூர்வமான பல புத்தகங்கள் ஆவணப்படுத்தப்பட காத்திருக்கின்றன...
என்றும் அதே அன்புடன் உங்கள் நண்பன் ஜானி அண்ட் திருப்பூர் குமார் 

ஞாயிறு, 1 ஜூலை, 2018

RC 345_கோவில் கொள்ளையர்கள்_கரும்புலி_Sathish

வணக்கங்கள் பிரியமானவர்களே...
முகமூடி வீரர் மாயாவி கதைகளை வாசித்து இன்புற்று வந்த காலம் போய் கரும்புலி எல்லாம் படிக்க வேண்டியதாகி விட்டதே என்று நண்பர்கள் அலறி அடித்து ஓடியது ஒரு காலம்.. அந்த நினைவுகளின் அலைகளோடு இந்த புத்தகத்தை உங்களுக்கும் வாசிக்க பகிர்ந்து மகிழ்கிறோம்...
இந்த கோவில் கொள்ளையர்கள் புத்தகத்தை ஸ்கான் செய்து அன்பளித்த திரு.சதீஷ் அவர்களுக்கு நன்றியுடன்...
எச்சரிக்கை..மாயாவியை நீங்கள் மனதில் ஹீரோவாக வரித்துக் கொண்டிருந்தால் இந்த ப்ரிவ்யூ எல்லாம் ஒரு முறை பார்த்து விடுங்கள்... பிறகு தரவிறக்கம் செய்வது உங்கள் விருப்பம்..ஹி ஹி ஹி 
































இந்த கதையை நீங்கள் விரும்பினால் தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி


சார்ஜெண்ட் பில்கோ -அறிமுகம்.

 வணக்கங்கள் தோழர்களே.. ஒரு வலைப்பூ யாருமே இயக்காமலும் அதன் போக்கில் இயங்கும் என்றும் அதன் வாசகர்கள் தானாகவே வலைப்பூவைத் தேடிக் கண்டுபிடிப்பா...