வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018
சந்திரனில் பூகம்பம்..மலர் காமிக்ஸ் (அறிமுகம்)_டெக்ஸ் சம்பத்..
பிடிஎப் தரவிறக்கிக் கொண்டு அப்படியே இருந்து விடாமல் வாசித்து உங்கள் கருத்துக்களை கொண்டு வந்து கொட்டுங்கள்...
010-12-உயிரைத்தேடி..
சக காமிக்ஸ் வாசக நண்பர்களுக்கு வணக்கம்...அபூர்வமான ஒரு படைப்பினை ஆச்சரியமூட்டும் விதத்தில் வண்ணமூட்டி அந்த காலத்திலேயே தொடர் வடிவில் கோரமான உருவங்கள் என்றாலும் அவற்றின் வீர ஈரங்களையும் போகிறபோக்கில் பதிவு செய்து வித்தியாசமான இந்த கதையை பதிப்பித்த தினமலர் நாளிதழ் என்றென்றும் போற்றிப் பாராட்டத்தக்க சூப்பர் நாளிதழாகும்... கன்னித் தீவினை கட்டிப் புரண்டு கொண்டிருந்த நமது மற்றும் மூத்த தலைமுறையை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியது இந்த தொடர் என்பதில் ஐயமேது?!? சிறுவனாகிய நானும் ஆவென வாயைப் பிளந்து கொண்டே என் பாட்டனார் திரு.அமிர்தன் த/பெ இஞ்ஞாசி முத்து காவல்துறை அவர்கள் வாங்கிக் கொடுக்கும் பன்னை டீயில் நனைத்து விழுங்கிக் கொண்டே வாசித்து மகிழ்ந்தேன்.. இன்று அந்த நிழல் நிஜமாகும் தருணங்களின் விளிம்பில் நிற்கும் நாமும் கொண்டாடுகிறோமா என்பதை உங்கள் கருத்துக்களை பதிவு செய்தால்தானே தெரிந்து கொள்ள முடியும்?!?! சைலன்ட் வாட்சர்ங்க நானு என்று அறிமுகம் செய்து கொள்வோரிடத்திலெல்லாம் நான் புரிந்து கொள்வது ஒரு பாதுகாப்பான வட்டத்திற்குள் தாமிருக்கிறோம் என்கிற மனநிலையையே.. உஷாராக இருக்க வேண்டிய இடத்தில் உஷாராக இருப்பதும் கொண்டாட்டங்களில் அளவுடன் பங்கேற்பதும் என்கிற பாடத்தை இன்னும் அவர்கள் கற்கவில்லை அல்லது கற்க விரும்பவில்லை என்றே நான் புரிந்து கொள்கிறேன்.. அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவதை எவர்கிரீன் நகைச்சுவை நடிகர் வடிவேலு அவர்களின் பாணியில் கூற விழைகிறேன்.. தம்பிகளா..ரிஸ்க் எடுத்தாத்தான் ரஸ்க் சாப்பிட முடியும்...
மற்றவை மற்றவையே... என்றும் அதே அன்புடன்...உங்கள் ப்ரியமிகு நண்பன் ஜானி சின்னப்பன்..
1988 என் வாழ்வின் ஒரு விழா....
நடுவே திரு.அமிர்தன் தாத்தா
வியாழன், 23 ஆகஸ்ட், 2018
MB-005-துரோணரின் வருகை-மகாபாரதக்கதை வரிசை
இனிய வணக்கங்கள் பாரதநாட்டின் புதல்வர்களே...தமிழ்த்தாயின் மைந்தர்களே..மாபெரும் வரலாறை உள்ளடக்கியது நம் பாரதப்பழம்பெரும் நாடு...இராம காதை முதல் மகாபாரதம் வரை அத்தனையும் பிரமிப்பூட்டும் சரித்திரங்களாகவே பதிவாகி பாரதத்தின் பல்வேறு பாகங்களிலும் போற்றப்பட்டு ஆராதிக்கப்பட்டு வழிபடப்பட்டு வருகின்றன.
யோகிகளும் முனிவர்களும் அரசர்களும் பொதுமக்களும் வலம்வரும் மகாபாரதக்கதையில் எக்கச்சக்கமான பாத்திரங்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இலக்கு..ஒவ்வொரு இலட்சியம்..
அத்தனை மாந்தர்களின் கதையையும் உள்ளடக்கமாகக் கொண்டு உருவான மகாபாரம் வீட்டில் உள்ள சிறுவர் சிறுமியரும் வாசித்து புரிந்து கொண்டு மகிழ வகை செய்துள்ளனர் பூந்தளிர் அமர்சித்ரகதைகள் பதிப்பகத்தார்...இந்த மாபெரும் இதிகாசக் கதையை நமக்கும் வாசித்து மகிழ வசதியாக ஸ்கேன் செய்ய கொடுத்துதவி புரிந்த ஸ்ரீராம் லட்சுமணன்...அவருக்கு கொடுத்துதவிய இரா.தி.முருகன் ஆகியோரை நன்றியோடு எண்ணிப் பார்க்கும் தருணமிது...
இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு பாரதப் பிரதமர் தீர்வு காண போராளிகளுக்கும் இலங்கை அரசுக்குமான உடன்படிக்கை செய்து வைக்க முயன்று வருவதாக செய்திகள் தெரிவிப்பதை கவனியுங்கள். இன்னபிற தகவல்களையும் கவனித்து வாசியுங்கள். இந்த நூலின் முக்கியத்துவத்தையும் உணருங்கள். வாசகர்களாக நாம் ஒன்றிணைந்து கொண்டாட வேண்டிய நூலுள் இந்த துரோணரின் வருகையும் ஒன்றென்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கும்...
தரவிறக்க சுட்டியை கொடுங்க முதலில் என்கிறீர்களா?!? கேட்ச் இட்ட்ட்..
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி சின்னப்பன்..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
சார்ஜெண்ட் பில்கோ -அறிமுகம்.
வணக்கங்கள் தோழர்களே.. ஒரு வலைப்பூ யாருமே இயக்காமலும் அதன் போக்கில் இயங்கும் என்றும் அதன் வாசகர்கள் தானாகவே வலைப்பூவைத் தேடிக் கண்டுபிடிப்பா...
-
வணக்கங்கள் தோழமை உள்ளங்களே... பல கைகள் கூடி இழுத்தால்தான் அது தேர்... அந்த வகையில் பலருடைய ஒட்டுமொத்த உத்வேகமான முயற்சியால் இன்று நண்பர் ...
-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
வணக்கங்கள் நட்பூக்களே... மனித மனங்களின் ஆழத்தையும் நீளத்தையும் உயரத்தையும் அளந்து அறிபவன் யார்? உதாரணமாக இந்த உயிரைத் தேடியையே எடுத்...



















































