ரங்லீ காமிக்ஸின் நான்காவது வெளியீடாக வந்திருக்கும் மரணத்துடன் ஒரு திருமணம்.. அட்டைப் படமே கவனம் ஈர்க்கிறது.. தனித்த பல படைப்புகளை மூன்று நான்கு ககதைத் தொகுப்புகளாகவும், சுவையான பல கட்டுரைகளை பதிப்பித்தும் திறம்பட செயலாற்றிவரும் ரங்லீ காமிக்ஸின் புதிய வரவை ஆதரிப்போம்..
புதன், 29 செப்டம்பர், 2021
மரணத்துடன் ஒரு திருமணம்_ரங்லீ காமிக்ஸ் வெளியீடு..
செவ்வாய், 28 செப்டம்பர், 2021
ஆவேசக் கவிதை_திகில் கிராமம்
ஆவேசங் கொண்டவனின்
கூக்குரல் கவிதை வரிகள்...
வா வா வெக்காளி..
வா வா வெக்காளி..
உன் பின்னே நிற்கும் ஆதிகுடி..
புதைக்கப் பாத்துது மனுச குலம்..
விதையா முளைச்சி வெளிவருவோம்..
அழிக்கப் பார்த்த ஒரு பயலும்
பொழைக்க மாட்டான் இனிமேலும்..
சக்தியும் பலமும் கொடுத்தாயே
உலகை நசுக்க மறப்போமா?
உப்பைத் தின்னவன் எவன்னாலும்
தண்ணியைக் குடிக்க வெச்சிருவோம்..
தப்பை செஞ்சவன் எவன்னாலும்
தலையைக் காவு வாங்கிருவோம்..
அலட்சியம் பண்ணா ஆதிகுடி
பொழச்சி வந்து பொளப்போமடா..
ஆவேசமா வாரா வெக்காளி...
அவ முன்னே பூமி அடங்குமடா..
வா வா வெக்காளி..
துணையா வா வெக்காளி..
_ஜானி சின்னப்பன்.
திகில் கிராமம்
இது லோன் உல்ப் பப்ளிகேஷன் முதல் வெளியீடு..
தற்போது பரபரப்பான விற்பனையில்..
திங்கள், 20 செப்டம்பர், 2021
அநீதி அகற்றிடு! _கற்பனைக் கதை_ஸ்பைடர்+சுஸ்கி விஸ்கி சந்தித்தால்.._ஜானி சின்னப்பன்
ஸ்பைடர்.. ஸ்பைடர்..
பதட்டத்தோடு ஓடி வந்தார் பெல்ஹாம்.. சிலந்திவலைப்படுக்கையிலிருந்து துள்ளிக்குதித்தான் அந்த வீர வேங்கை ஸ்பைடர். என்ன பெல்ஹாம்..பேய் அறைந்ததைப் போல விழிக்கிறாய்?!?
ஸ்பைடர்.. யாரோ இரண்டு குழந்தைகள் எதையோ தேடி நம் ஒளிவிடத்தில் அலைகிறார்கள்.. காமிராவில் காட்சி தெரிகிறது..
அடேய் ஆர்டினி.. இரகசியக் கோட்டையை மறைக்கும் மாயத்திரையை மறைத்து விட்டான் போலிருக்கே.. குறும்பன்.. எங்கே அவன். குரலில் கோபம் கொப்பளித்தாலும் மனதில் மென்மை தெறித்தது ஸ்பைடரிடம். பெல்ஹாம்..அந்த இருவரையும் அழைத்துவா..
சற்று நேரத்தில் சிறு அறிமுகத்துக்குப் பின்..
ஸ்பைடர் அங்கிள்.. வாங்க உங்க ஹெலிகாரில் ஒரு இடத்துக்குப் போகணும்.. புதிரா எதோ இரகசியம் ஒளிஞ்சிருக்கு ஓர் இடத்தில்.. சுஸ்கி விஸ்கி யின் அன்புக்குக் கட்டுப்பட்டான் ஸ்பைடர் புறப்பட்டது ஹெலிகார்.
அதன் கட்டுப்பாடுகளை உற்றுக் கண்காணித்தவாறே வழியை சொல்ல ஏரியொன்றின் அருகில் இறங்கியது ஹெலிகார்..
ஆர்டினி..ஐயோ நீரென்றால் பயம்..உயரமென்றாலும் பயம்.. பயபுள்ளையை விட்டுத் தப்பி எங்காவது ஓடிப்பிடலாம்னா விடவே மாட்டேங்கிறான் தம்பி.. புலம்பலுக்குப் புன்னகையை உதிர்த்தனர் சுஸ்கி விஸ்கி..
இந்த ஏரிக்கடியில் ஏதோ மர்மம் ஒளிஞ்சிருக்கு.. சுற்றியும் பாருங்கள் என்று கூற ஸ்பைடரின் கூர்விழிகளுக்குக் கதிரியக்கம் பாதித்த சூழல் புரிந்தது.. தனது நுட்பமான கருவிகளின் துணையுடன் பெல்ஹாமின் மூளையுடன் ஆர்டினியின் அலறலோடு ஏரியை இம்மிவிடாது அலசி எப்போதோ கடத்தப்பட்டு அங்கே கைவிடப்பட்டிருந்த அணு உமிழ் ஆயுதம் கண்டெடுக்கப்பட்டு பாதுகாப்பாக அங்கிருந்து அகற்றப்பட உள்ளூர் ஆட்கள் ஒன்று கூடி அவர்களை ஆரவாரத்தோடு வழியனுப்ப..சுபம்🙏🏻💐😄💓
All in one வாட்ஸ் அப் குழுவுக்காக..
மேலதிகக் கதைகளுக்கு:
திங்கள், 13 செப்டம்பர், 2021
டைகர் கதை வாசிக்க..
நண்பர் ஒருவர் ஏற்கனவே FB ஒன்றில் பதிவு செய்த details:
டைகர் கதைகள்:-
லெப்டினன்ட் ப்ளூபெர்ரி (தமிழில்: கேப்டன் டைகர்) கதை தொடர்கள் 1963ல்
முதன் முறையாக
வெளியிடப்பட்டன. இதில்
இதுவரை 28கதைகள் இடம்பெற்று
உள்ளன. இவை அனைத்தும்
தமிழில் வந்துவிட்டன.
1,2,3,4&5=இரத்தக்கோட்டை-5பாக
கதை(ஒற்றை ஒற்றை பாகங்களில் கறுப்பு வெள்ளையில் முத்து காமிக்ஸ்ல போடப்பட்டு, ஆகஸ்ட் 2017ல் ஈரோடு விழாவில் ஒரே இதழாக வண்ண மறுபதிப்பாக வெளியிடப்பட்டது)
6. தோட்டா தலைநகரம்-சிங்கிள்
சாட்- வண்ண மறுபதிப்பு-2018மார்ச்.
7,8,9&10=இரும்புக்கை
எத்தன்-4பாக கதை.(முத்து 250ல் ஆரம்பிக்கப்பட்டு அந்தரத்தில் தொங்கி, வண்ணத்தில் 2013 மே மாதம் க்ளைமாக்ஸ் பாகங்கள் போடப்பட்டன.)
11&12=தங்க கல்லறை-இருபாக
கதை(2012நவம்பரில் வண்ணமறுபதிப்பு)- என்னைப் பொறுத்து நெ1. ஆஃப் டைகர்.
13to23=மின்னும் மரணம்-11பாக
கதை- தி கிரேட் ஸ்டோரி ஆர்க் ஆஃப் டைகர். முத்துவில், லயனில் என ஆங்காங்கே போடப்பட்டு, 2015ஏப்ரலில் பிரமாண்டமான வண்ண மறுபதிப்பாக வெளியானது.
24,25,26,27&28=என் பெயர்
டைகர்-5பாக கதை- கி. நா. பாணியில் இருந்தாலும் கூட வசீகரிக்க ஏதோ உள்ளது.
இத்தொடர் பெரிய வெற்றி
பெற்றதை அடுத்து டைகரின்
இளவயது நடப்புகளை கொண்ட
யங்டைகர் சீரியஸ் 1989ல்
வெளியிடப்பட்டது. அதில்
இதுவரை 21கதைகள் வந்துள்ளன.
தமிழில் 9கதைகள் 3பாக, இருபாக
கதைகளாக வெளிவந்துள்ளன.
இன்னமும் 12பாக்கியுள்ளன.
இளம்டைகர்...
1,2&3=இளமையில் கொல்-3பாக
கதையாக லயன் கெளபாய் ஸ்பெசலில் வெளியானது.(அடுத்த வண்ண மறுபதிப்பு இதுவாகத்தான் இருக்கும்)
4. மரணநகரம் மிசெளரி(வைல்டு
வெஸ்ட் ஸ்பெசல்sep2012-இருபாக கதையின் முதல் பாகம்)
5. கான்சாஸ் கொடூரன்
(முத்துNBS jan2013-இருபாக கதையின் க்ளைமாக்ஸ்)
6. இருளில் ஒரு
இரும்புக்குதிரை(முத்து NBS
jan2013-அடுத்த இருபாக கதையின் முதல் பாகம்)
7. வேங்கையின் சீற்றம்(டிசம்பர்
2013-NBSல் வந்த இருபாக கதையின் க்ளைமாக்ஸ் சாகசம்)
8. அட்லான்டா ஆக்ரோசம்
9. உதிரத்தின்விலை...8&9-ஒரே
இதழாக மார்ச்2014ல் வந்த இருபாக
சாகசம்.
9. மார்ஷல் டைகர் - Lion magna spl லில் வந்த முதல் பாக கதை
10. வேங்கைக்கு முடிவுரையா & ரனகள ராஜ்ஜியம்- 2 பாக கதை
அடுத்த 9 பாகங்கள் கொண்ட இளம் டைகருக்காக ஆவலுடன் வெயிட்டிங்.
வெள்ளி, 10 செப்டம்பர், 2021
ஆவேசம் கொண்டெழுந்தவனின் பாடலிது_திகில் கிராமம்..
திகில் கிராமம்
(இது வீழ்த்தப்பட்டவர்கள் விழித்தெழுந்தெழுந்த வீரக்கதை)
வா வா வெக்காளி..
வா வா வெக்காளி..
உன் பின்னே நிற்கும் ஆதிகுடி..
புதைக்கப் பாத்துது மனுச குலம்..
விதையா முளைச்சி வெளிவருவோம்..
அழிக்கப் பார்த்த ஒரு பயலும்
பொழைக்க மாட்டான் இனிமேலும்..
சக்தியும் பலமும் கொடுத்தாயே
உலகை நசுக்க மறப்போமா?
உப்பைத் தின்னவன் எவன்னாலும்
தண்ணியைக் குடிக்க வெச்சிருவோம்..
தப்பை செஞ்சவன் எவன்னாலும்
தலையைக் காவு வாங்கிருவோம்..
அலட்சியம் பண்ணா ஆதிகுடி
பொழச்சி வந்து பொளப்போமடா..
ஆவேசமா வாரா வெக்காளி...
அவ முன்னே பூமி அடங்குமடா..
வா வா வெக்காளி..
துணையா வா வெக்காளி..
_ஜானி சின்னப்பன்.
அனைவருக்கும் இனிய விநாயகர் தின வாழ்த்துக்கள்..
செவ்வாய், 7 செப்டம்பர், 2021
பிணமென்று நினைத்தாயோ..?_வினாடி கதை வரிசை_ஜானி சின்னப்பன்
ஊஊஊஊ என்ற ஊளைச்சத்தம் அந்த சுடுகாட்டுக்கு அருகிலிருந்த ஜீவனேஷின் வீட்டை நிறைத்தது.. ஊருக்கு ஒதுக்குப்புறமாய் தன்னந்தனியே அவனது வீடு.. பலப்பல அசிங்கமான நிழல் காரியங்களுக்கு அவனுக்கு உதவிக் கொண்டிருந்த வீடு அது..
வீட்டுக்குள்ளே ஜீவனேஷ்..
எங்கோ ஒரு ஆந்தையின் அலறலில் அவனது இதயம் ஒருகணம் நின்று துடித்தது. நெற்றியில் துளித்துளியாய் வியர்வையோடு ஜீவனேஷ் நிமிர்ந்தான். இந்த ஆறடி ஆழம் சரியாய்த்தானிருக்கும்..அவன் மனம் திட்டமிட மண்வெட்டியை ஓரம் வைத்து விட்டு அந்த பெண்ணின் சடலத்துடைய காலைப் பற்றி இழுத்து குழிக்குள் தள்ளினான்..
அப்படியே அவனை இழுத்துக் குழியில் தள்ளிய விசையோடு வெளியே பாய்ந்தாள் ஷைனிகா.
ஜீவனேஷ் குழிக்குள் விழுந்த வினாடியில் பள்ளத்தின் பக்க சுவர்கள் அப்படியே சரிந்து ஜீவனேஷை மூடிக் கொள்ள மூச்சடங்கும் ஓசை..மயான அமைதி..
தன்னை அழிக்க நினைத்த காதலனின் பணக்கார புதுக் காதலி ஜூவாலினியை நினைத்து ஒரேயொரு செகண்ட் கடைக் கண்ணில் கசிவுடன் வெளியேறினாள்..
விடை பெறுகிறேன் காதலா..
@Copyright belongs to jscjohny.blogspot.
வியாழன், 19 ஆகஸ்ட், 2021
வியாழன், 12 ஆகஸ்ட், 2021
புதன், 11 ஆகஸ்ட், 2021
திகில் கிராமம்..டீம் அறிமுகம்
செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021
யாளி ட்ரீம் கிரியேஷன்ஸ்_ஒரு அறிமுகம்
யாளி ட்ரீம் கிரியேஷன்ஸ் ஒரு சித்திரக்கதை வெளியிடும் அசல் இந்திய நிறுவனமாகும், இது காமிக்ஸ் மற்றும் கிராஃபிக் நாவல்களைப் பயன்படுத்தி உலகளாவிய பார்வையாளர்களை ஈர்க்க அசல் கதைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. யாளி ட்ரீம் கிரியேஷன்ஸ் அசல் மற்றும் கற்பனை கதைகளை திகில் மற்றும் கற்பனையின் கலவையுடன் கொண்டுவருகிறது; மனதை வளைக்கும் அறிவியல் புனைகதை மற்றும் புராணம். அடுத்த தலைமுறையினரை எங்கள் கவரும் கதைகள் மற்றும் கண்கவர் கலை வேலைகள் மூலம் காமிக் புத்தக காட்சியில் குதிக்க நாங்கள் வளர்த்து அறிவூட்டுகிறோம். எங்கள் குழு, மிகவும் படைப்பாற்றல் கலைஞர்கள் முதல் விதிவிலக்கான திறமையான எழுத்தாளர்கள் வரை, ஒரே இலட்சியத்தைக் கொண்டுள்ளது: சிறந்த கதைகளை வெளியிட்டு வரும் இந்த நிறுவனம் தமிழ் நாட்டின் திரு.அஸ்வின் ஸ்ரீவத்சாங்கம் அவர்களால் 2012 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 2013 முதல் தங்கள் அட்டகாசமான படைப்புகளை வெளியிட்டு வருகின்றனர். யாளி என்கிற பெயரே கற்பனையான ஒரு மிருகத்தை குறிப்பிடுவதாகும். இல்லாத ஒரு மிருகத்தை கற்பனை செய்து ஆலயங்களிலும், சிற்பங்களிலும் கொண்டு வந்த அந்த கால சிற்பிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக யாளி ட்ரீம் கிரியேஷன்ஸ் தங்களுக்கு பெயர் சூட்டிக் கொண்டிருப்பதே இதன் இந்திய கலைத்துறைக்கான ஆகச்சிறந்த மதிப்பாகும்.
சமூக ஊடகங்கள் மூலமாகவே தனது தோழர்களான ஷமிக் தாஸ்குப்தா, சூர்யோதய் டே ஆகியோரை தொடர்பு கொண்ட அஸ்வின் ஸ்ரீவத்சாங்கம் தனது இலட்சியத்தைப் பகிர்ந்து கொண்டதும் விரைவிலேயே "கேரவன்" உதயமானது.. 2013 ஆம் ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற காமிக்-கான் கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் விதமாக கேரவன் அங்கே வெளியிடப்பட்டது. தொடர்ந்ததெல்லாம் சரித்திரம். தற்போது தமிழில் வெளியாகவிருக்கும் திகில் கிராமம் விருது பெற்ற படைப்பாகும். சிறப்பான கதை சொல்லல் பாணியில் பட்டாசை மிஞ்சிய தொடர் வெடியை போட்டாற்போன்று இந்திய காமிக்ஸ் வானில் கொண்டாட்ட நிகழ்வாகிப் போனது திகில் கிராமம் (தி வில்லேஜ்). அற்புதமான ஓவியங்கள், கதை, புத்தக வடிவமைப்பில் அனைவரையும் அசத்திய இந்த கிராபிக்ஸ் நாவல் தமிழ் நாட்டை கதைக்களமாகக் கொண்டது. இவ்வருடம் தமிழ் பேச வருகிறது என்பது ஹைலைட் செய்தி.. இந்த ஆண்டில் தமிழ் நாட்டில் புதியதாக உருவாகியிருக்கும் லோன் உல்ப் பதிப்பகத்தாரால் ரூனி காமிக்ஸ் உருவாக்கப்பட்டு தங்கள் முதல் பதிப்பாக திகில் கிராமம் வெளியிடப்படுகிறது.. அதற்கான முன்பதிவு சுட்டியை சென்ற பதிவிலேயே கொடுத்திருக்கிறேன்.. தங்கள் அனைவரது முயற்சியால் கண்டிப்பாக இந்த படைப்பு மாபெரும் வெற்றியடையும் என்பதில் பெரு மகிழ்ச்சியுடன்...
என்றும் அதே அன்புடன்..
ஜானி சின்னப்பன்,
மொழிபெயர்ப்பாளர்,
காமிக்ஸ் காதலர் + காவலர்.
Connected Links
https://www.yalidreamcreations.com/
சார்ஜெண்ட் பில்கோ -அறிமுகம்.
வணக்கங்கள் தோழர்களே.. ஒரு வலைப்பூ யாருமே இயக்காமலும் அதன் போக்கில் இயங்கும் என்றும் அதன் வாசகர்கள் தானாகவே வலைப்பூவைத் தேடிக் கண்டுபிடிப்பா...
-
வணக்கங்கள் தோழமை உள்ளங்களே... பல கைகள் கூடி இழுத்தால்தான் அது தேர்... அந்த வகையில் பலருடைய ஒட்டுமொத்த உத்வேகமான முயற்சியால் இன்று நண்பர் ...
-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
வணக்கங்கள் நட்பூக்களே... மனித மனங்களின் ஆழத்தையும் நீளத்தையும் உயரத்தையும் அளந்து அறிபவன் யார்? உதாரணமாக இந்த உயிரைத் தேடியையே எடுத்...











