வியாழன், 12 மார்ச், 2015

இந்திய தண்டனை சட்டம் 1860 (Indian Penal Code - Important Sections from 01-25)

இந்திய தண்டனை சட்டம் 1860 (Indian Penal Code - Important Sections from 01-25)
அத்தியாயம் – I
அறிமுகம்
முன்னுரை: இந்திய தண்டனை சட்டம் இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் லார்டு மெக்காலே மற்றும் ஆணையர்கள் மாக்ளியாட், ஆண்டர்சன், மில்லட் ஆகியோரால் 06.10.1860 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு  01.01.1862 ஆம் ஆண்டு முதல் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது. இதில் மொத்தம்  511 பிரிவுகள் அடங்கியுள்ளன.
பிரிவு – 01 பெயரும், எல்லையும்
இந்திய தண்டனை சட்டம் ஜம்மு காஷ்மீர் மாநிலங்கள் தவிர இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.
பிரிவு – 02 இந்திய எல்லைக்குள் புரியும் குற்றங்களுக்குத் தண்டனைகள்
இந்த சட்டப்பிரிவுகளில் கூறப்பட்டுள்ளபடி இந்தியாவில் குற்றம் புரிகின்ற குற்றவாளிகள் ஒவ்வொருவரும் தாங்கள் புரியும் குற்றத்திற்கு ஏற்ப தண்டனை பெறுவார்கள் மற்றும் சட்டப்படி செய்ய வேண்டியவற்றை செய்யாமல் விடுபவர்களும் இச்சட்டத்தின் கீழ் தண்டிக்கப் பெறுவார்கள்.
பிரிவு – 03 வெளிநாடுகளில் செய்யப்படும் குற்றங்களுக்குத் தண்டனைகள்
இந்தயாவில் உருவாக்கப்பட்ட சட்டங்களுக்கு உள்ளடங்கிய இந்திய குடிமகன் ஒருவர் இந்தியாவிற்கு வெளியே இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்ட குற்றங்கள் ஏதேனும் புரிவாரானால் அத்தகைய குற்றம் இந்தியாவிலேயே செய்யப்பட்டதாகக் கருதி அவ்வாறாகவே நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்.
பிரிவு – 04
(1)          இந்தப் பிரிவின்படி இந்தியக் குடிமக்கள் இந்தியாவிற்கு உள்ளும், வெளியிலும் புரியும் குற்றங்களுக்கும்,
(2)          இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பல் அல்லது விமானத்தில் செய்யப்படும் குற்றங்களுக்கும் இப்பிரிவின்கீழ் தண்டனை வழங்கப்படும்.
விளக்கம் இந்தியாவிற்குள் தண்டனை பெறத்தக்க குற்றத்தினை ஏதேனும் இந்தியாவுக்கு வெளியே செய்தாலும் இப்பிரிவின் கீழ் தண்டிக்கப்படுவர்.
உதாரணம்:- இந்தியக் குடிமகன் ஒருவன் உகாண்டா நாட்டில் (தென் ஆப்பிரிக்கா) ஒரு கொலைக் குற்றம் புரிகிறான். அந்த குற்றத்திற்காக அந்த இந்தியக் குடிமகன் இந்தியாவில் எந்த இடத்தில் இருந்தாலும் அதே இடத்தில் அந்த குற்றம் பற்றி நீதி விசாரணை செய்யப்பட்டு தண்டிக்கப்படலாம்.
பிரிவு – 05  
இந்திய அரசின் கீழ் பணியிலுள்ள தரைப்படை, கப்பல் படை, விமானப்படை ஆகியவற்றின் வீரர்கள் மற்றும் அலுவலர்கள் செய்யும் கலகம் மற்றும் பணியை விட்டு தன்னிச்சையாக சென்றவர் (விட்டோடி) ஆகியோர்களை தண்டிப்பதற்கு இயற்றப்பட்ட எந்த  தனி அல்லது உள்ளூர் சட்டத்தையும் இந்த சட்டப் பிரச்சனை அல்லது வேறு விவகாரங்களைப் பரிசீலித்தல், அறிக்கை கொடுத்தல், ஆவணத்தை வைத்திருத்தல், உண்டாக்குதல், அதிகாரப்பூர்வமாக்குதல், சொத்துக்களின் பொறுப்பேற்றல், நீதிபூர்வமான வேலைகளை செய்தல் போன்றவற்றை இந்த சட்டம் பாதிக்காது.
அத்தியாயம் – II
பொது விளக்கங்கள் (General Explanations)
பிரிவு – 21 பொது ஊழியர்:
பொது ஊழியர் என்ற சொல் கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொருவரையும் குறிக்கும்.
முதலாவது:- நீக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது:- இந்திய தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளிலுள்ள அலுவலர்கள்.
மூன்றாவது:- ஒவ்வொரு நீதிபதியும், (நீதிமன்ற ஊழியர்களும்) சட்டத்தை முன்வைத்து நீதிமுறையாக அலுவல்கள் ஆற்றுவதற்கு சட்டத்தால் அதிகாரம் பெற்றவர்களும்.
நான்காவது:- சட்டப்பிரச்சினை மற்றும் வேறு விவகாரங்களைப் பற்றி பரிசீலித்தல், புலனாய்வு செய்தல், ஆவணங்களை வைத்திருத்தல் அவற்றை உறுதிப்படுத்துதல், எந்த சொத்தையாவது பொறுப்பில் எடுத்துக் கொள்ளுதல் அல்லது அதைப் பற்றி முடிவு செய்தல், நீதிமுறைக் கட்டளைகளை அல்லது பிரமாணத்தைப் புகுத்துதல் அல்லது மொழி பெயர்த்தல் அல்லது நீதி மன்ற உத்தரவுகளை நிலைநாட்டுதல், நீதிமன்றத்தால் தனியாக இதற்கென்றே நியமிக்கப்பட்ட அலுவலர்.
ஐந்தாவது:- நீதிமன்றத்திற்கும் பொது ஊழியருக்கும் உதவுகின்ற பஞ்சாயத்துதாரர் (jury ) அல்லது மதிப்பீட்டாளர்(Assessor) அல்லது முறைகாண் ஆயத்தின் உறுப்பினர்(jury man)
ஆறாவது:- நீதிமன்றம் அல்லது தகுதி பெற்ற பொது அலுவலர் என்று கூறப் படுபவரால் வழக்கு முடிவு செய்வதற்காக அல்லது மத்தியஸ்தர் என்று நியமிக்கப்பட்டவர் அல்லது வேறு எந்த ஒரு நபராக இருந்தாலும்.
ஏழாவது:- ஒரு நபரை வைத்திருக்கவோ அல்லது அடைத்து வைத்திருக்கவோ அதிகாரம் அளிக்கப்பட்டு பதவியில் அமர்த்தப்பட்ட நபர் (உ.ம்.காவல்துறை)
எட்டாவது:- குற்றங்களைத் தடுப்பதற்கும், குற்றங்களைப்பற்றி தகவல் கொடுப்பதற்கும் குற்றவாளிகளை நீதிமன்றத்திற்குமுன் கொண்டு வந்து நிறுத்துவதற்கும், பொது சுகாதாரத்தை பாதுகாப்பதற்கும், பாதுகாப்பு அல்லது வசதியைக் காப்பதற்காகவும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அலுவலர் (உ.ம்.காவல்துறை)
ஒன்பதாவது:- அரசின் சார்பில் எந்தச் சொத்தையும் எடுத்துக் கொள்ளவும், வைத்துக் கொள்ளவும் பெற்றுக்கொள்ளவும் அல்லது அரசின் சார்பாக நிலங்களை அளக்கவும், மதிப்பிடவும், ஒப்பந்தம் செய்துகொள்ளவும், வருவாய்த்துறை கட்டளைகளை நிறைவேற்றுவதையும், அரசின் நலனைப் பாதிக்கின்ற விஷயம் எதைப்பற்றியும் பரிசீலனை செய்வதையும் அரசின் நிதி சம்மந்தமாக பத்திரம் எதுவும் தயார் செய்வதை உறுதி செய்வதையும் அல்லது அவற்றை வைத்து வருவதையும் அரசாங்கத்தின் நிதி நலன்களை பாதுகாக்கின்ற சட்டம் எதனையும் மீறுவதைத் தடுப்பதைத்  தன் கடமை என கருதும் அலுவலர்.(i.e. revenue dept.)
பத்தாவது:- சொத்து எதையும் எடுப்பது, பெற்றுக்கொள்வது, வைத்துக் கொள்வது அல்லது செலவிடுவது அல்லது அரசாங்கத்தின் சார்பாக நிலங்களை அளக்கவும் மதிப்பிடவும் அல்லது தீர்வை அல்லது வரி எதையும் விதிப்பதை கிராமம், நகரம், மாவட்டம் இவற்றில் மக்களுடைய உரிமைகளை உறுதியாகத் தெரிந்து கொள்வதற்காக பத்திரம் தயார் செய்வதை அல்லது வைத்து வருவதைக் கடமையாகக் கொண்ட அலுவலர்.
பதினொன்றாவது:-
வாக்காளர் பட்டியல் தயாரிக்க, வெளியிட, திருத்தம் செய்தல், வைத்திருத்தல் அல்லது தேர்தலை நடத்தவோ தேர்தலின் ஒரு பகுதியை நடத்தவோ அதிகாரமளிக்கப்பட்டு பதவி வகிக்கின்றவர்.(உ.ம். தேர்தல் ஆணைய ஊழியர், தேர்தலுக்கென பணியமர்த்தப்படுபவர்)
பன்னிரண்டாவது:- அரசின் ஊழியத்திலுள்ள அல்லது அரசிடம் ஊதியம் பெறுகின்ற அல்லது பொதுவான கடமைகள் எதையும் செய்வதற்காக அரசாங்கத்திடம் கட்டணங்கள் அல்லது தரகு என்கிற பெயரில் ஊதியம் பெறுகிறவர்.
     ஒரு தல நிர்வாகத்தின் அல்லது மத்திய அல்லது மாநிலச் சட்டத்தின் கீழ் அல்லது அதன் கீழ் நிறுவப்பட்ட ஒரு கூட்டு நிறுவனத்தின் அல்லது 1956ம் ஆண்டு வணிக நிறுவன சட்டப்பிரிவு  617ல் கூறப்பட்டுள்ளபடியான ஓர் அரசு வணிக நிறுவனத்தின் ஊழியத்தில் உள்ளவர் அல்லது அதனிடம் சம்பளம் வாங்குகிறவர். (உ.ம். ஒரு நகராட்சி ஆணையாளர் ஒரு பொது ஊழியரே)
விளக்கம்-1:- மேற்கூறிய ஊழியர்கள் அனைவரும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டிருந்தாலும், நியமிக்கப்படவில்லை என்றாலும் பொது ஊழியர்களே ஆவர்.
விளக்கம்-2:- சட்டமன்ற உறுப்பினர்கள்; நகர சபை உறுப்பினர்கள் அல்லது வேறு ஏதாவது பொது அமைப்பின் உறுப்பினர்களைத் தேர்தல் ஆணையம் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றுள்ள சட்டத்தின்படி நடைபெறும் தேர்தலையும் இங்குள்ள தேர்தல் என்ற சொல் குறிக்கும்.
பிரிவு – 22 அசையும் பொருட்கள்
     அசையும் பொருட்கள் என்பது நிலமும், பூமியுடன் இணைக்கப்பட்டுள்ள பொருட்களும் நிரந்தரமாக பூமியுடன் பிணைக்கப்பட்டுள்ள பொருட்களைத் தவிர உலகில் உள்ள மற்ற பொருட்கள் அசையும் பொருட்கள் ஆகும். (உ.ம். நீரில் இருந்து வெளியே எடுக்கப்படும் மீன்)

பிரிவு – 23 அநியாய இலாபம்
     சட்டபூர்வமான உரிமையில்லாத சொத்தைச் சட்டவிரோதமான முறையில் இலாபம் சம்பாதித்தல் தவறான முறையில் அபகரித்தல் ஆகும்.
     இலாபம் அடைகின்ற ஒருவர், சட்டவிரோதமாக, உரிமை இல்லாத சொத்தில் அடைவது தவறான முறையில் இலாபம் சம்பாதித்தல் என்பதாகும்.
அநியாய நட்டம் :
                சட்டப்பூர்வமான உரிமையுள்ள சொத்தைச் சட்ட விரோதமான முறைகளால் இழத்தல் அநியாயமான நட்டம் எனப்படும்.
-அநியாயமான லாபமும் அநியாயமான நட்டமும் அநியாயமாகப் பெறுவது மட்டுமல்ல அநியாயமாக வைத்திருப்பதும் அநியாய லாபத்தின்பாற்படும்.
- அநியாயமாக ஒரு சொத்தை இழப்பது மட்டுமல்ல, ஒரு சொத்தை ஒருவரை அடையவிடாமல் அநியாயமாகத் தடுக்கப்படும்போது கூட அநியாய நட்டம் உண்டாவதாகக் கொள்ள வேண்டும்.
பிரிவு – 24 நேர்மையின்மை:-
     ஒருவர் மற்றொருவருக்கு லாபம் அல்லது அநியாய இழப்பு ஏற்படுத்தும் காரியத்தை புரியும்போது ஒருவர் நேர்மையற்ற முறையில் செயல்படுவதாகக் கருதப்படுவார்.
விளக்கம்:- போலியினை உற்பத்தி செய்யும்போது அப்படியே அசலைப்போல ஒரே அச்சாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
பிரிவு – 25  மோசடி:- ஒருவர் மற்றொருவரை ஏமாற்றும் உள்நோக்கத்துடன் காரியத்தை செய்வாரேயானால் அந்த நபர் மோசடி செய்வதாகக் கருதப்படும்.
விளக்கம்:- ஒருவன் ஒன்றைப் போலவே மற்றொன்றைப் போலியாக்குவதன் மூலம் அந்தப் போலி மற்றவரை ஏமாற்றக் கூடியதாக இருக்கும்போது அந்த நபர் பிறரை அத்தகைய ஒற்றுமையின்மூலம் ஏமாற்றுவதற்காக அல்லது அப்படி ஏமாற்றுவதற்காக பயன்படுத்தப்படும் என்று அறிந்தே அத்தகைய போலித் தயாரிப்பில் இறங்கியிருக்கிறார் என்று அனுமானிக்கலாம்.  


3 கருத்துகள்:

சேட்டை நான்சி_அறிமுகம்

 வணக்கம் தோழர்களே..  இன்றைய சிறு அறிமுகம் இந்த நான்சி.. அவளது சேட்டைகளை அட்டையிலேயே காண்பித்திருக்கிறார்கள்.. வாசித்து இரசியுங்கள்..  என்றும...