வணக்கம் அன்பு நெஞ்சங்களே!
இம்முறை ஒரு கதை சுருக்கம்!
கிட் கோல்ட் ஒரு வெஸ்டர்ன் கதை நாயகன். இவன் சிறுவயதில் ஒரு சமூக விரோதியைத் தற்காப்புக்காகக் கொன்று விடுகிறான். சட்டத்தை எதிர்கொள்ளும் திறனற்ற சிறுவனாக இருந்ததால் அவனது முட்டாள்தனமான பயத்தினால் அந்த இடத்தை விட்டுத் தப்பி சென்று விடுகிறான். பின்னர் அந்தத் தவறுக்காக அவன் செல்லும் இடமெல்லாம் துரத்தப்படுகிற சம்பவங்கள் அடுக்கடுக்காக நிகழ்கிறது. அவ்வாறு ஒரு இடத்தில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் அவனது தீரமான போராட்டத்தால் ஒரு இரயில் கொள்ளையைத் தடுக்க அந்த இடத்தின் ஷெரீப்புக்கு உதவுகிறான். அந்தக் கதையின் முடிவில் கெட்டவனிடமும் ஒரு நல்லது இருக்கும் என்கிற கருத்துடன் அந்த ஷெரீப் அவனைத் தப்ப விடுகிறார். அந்தக் கதையின் ஆரம்பப் பக்கம் மட்டும் சிறிய திருத்தங்களுடன் உங்கள் பார்வைக்கு...
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன்_ஜானி!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக