எந்திர மனிதன் நீ எங்கள்
இதயத்தில் ஓர் இடம் நீ
எளிமையின் உருவம் நீ
வலிமையின் உதாரணம் நீ
மக்களின் நாயகன் நீ
மாசற்ற மன்னன் நீ
உலகினுக்கோர் பாதை நீ
இந்தியாவின் பெருமை நீ
ஏக்கமாய் நின்று கண்டோம்
ஏவுகணை எங்கோ பறந்திடுவதை
திப்புவின் சாதனைகள்
காலத்தால் கரைந்திடினும்
எம் ஏக்கத்தின் விடையாக
ஏவுகணை ஏட்டினிலே
எழுந்து நிற்கும் இமயம் நீ
சாதனை வரிசையிலே
இளைஞருக்கோர் எழுச்சி நீ.
சத்தியம் பகர்வதிலே
அக்கினிச் சிறகு நீ!
விஞ்ஞான சித்தன் நீ!
இன்னொரு புத்தன் நீ.
எங்கிருந்தோ வந்தாய்
அசையாத உறுதி கொண்டாய்
இந்திய சரிதத்தின் மேல்
பெருமை முகமாய் நீ நின்றாய்.
எம் மண்ணின் ஏக்கங்களின்
விடையாக நீ நின்றாய்.
தேசத்தின் பெருமைதனை
தூக்கி நீ நிறுத்தினாய்.
காலம் எத்தனை கடந்திடினும்
காற்றில் உன் பெயர் எதிரொலிக்கும்
கலாம் கலாம் கலாம் என்று
சென்று வா எம் தோழா
பிறிதோர் தீர்ப்பு தினத்தில்
பார்க் கலாம் –பழ கலாம்
இன்று கொள் சாந்தி சாந்தி சாந்தி !
விடை கொடுக்கிறோம்
எம் இந்திய மகனே
மூத்தக் குடிமகனே!
போய் வா. போய் வா.போய் வா
நல்லவர்கள் திரும்புவதில்லை
இன்னொரு வாய்ப்பிருந்தால்
எம் மண்ணுக்கே திரும்ப வா.
திரும்ப வா. திரும்ப வா.
எனும் நப்பாசை நெஞ்சில்
நச்சரிப்பின் கூக்குரலை
அழுகையுடன் அழுத்திக்
கொண்டு.
அடிமனதில் இருந்து வந்த ஆழமான வரிகள்..!தலைவணங்குகிறேன்..!
பதிலளிநீக்கு