தேடு தேடு தேடு தேடு
தேடி நீயும் ஓடடா..
வெல்லு வெல்லு வெல்லு வெல்லு
கதை சித்திரத்தை நீ வெல்லடா
அங்கும் இங்கும் தேடிப்பாரு
கிடைக்காமலே தண்ணி காட்டுமடா..
உன்னுள் உறையும் ஜோதியை
பொங்கிப் பெருகும் அருவியை
வெளியே தேடித்திரிந்திடும்
அப்பாவி நீயும் மானிடா..
வணக்கம்..
இது சித்தன் நேரம்...
வாசிக்கலாமா சித்தன் காமிக்ஸ்?
மதுரை மண்ணின் பூவிழி பப்ளிகேஷன்ஸ்
வெளியிட்ட "பேயின் புதையல்"
ஜார்ஜ் டவுன்...
அங்கே வந்து சேர்கிறான் மாயா..
அவனை ஊரார் விரட்ட..
சத்திரம் ஒன்றில் தங்க நேர்கிறது..
அதுவோ பேய் ஒன்று குடியிருக்கும் சத்திரம்.
அந்தப் பேய் அவனை ஏதும் செய்யாமல்
தன் கதையை சொல்ல...
நாமும் கதை கேட்க ஆரம்பிக்கிறோம்...
எமிலி ஒரு அழகான இளம் பெண்..
அந்த ஊரில் தீயவன் ஒருவன்
கரையான் புற்றுக்குள் கருநாகமாய் வர..
பலிகள் துவங்குகின்றன..
புதையலுக்காக கொடுமைகள் பல செய்து
ஊருக்கே தலைவனாகிறான்..
அவனை எமிலி எதிர்த்து பலியாகிறாள்..
ஆவியாக மாறியும் பழிவாங்க தவிக்கிறாள்..
அவளால் பழிவாங்க முடிந்ததா?
அவள் காத்த புதையல் என்னவாயிற்று?
பரபரப்பான கதையை நமக்களித்த
நண்பர் திரு.சரவணன்(வெள்ளை இளவரசி புகழ்) அவர்களுக்கு
என் அன்பின் வணக்கங்கள்..
உங்களின் காமிக்ஸ் ஆர்வத்தினால் நமது நண்பர்களுக்கு கிடைத்தற்கரிய பல்வேறு காமிக்ஸ் புத்தகங்களின் pdfகிடைத்துக் கொண்டு உள்ளது அண்ணா உங்களுடைய இந்த ஒருங்கிணைந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநல்வாழ்த்துக்கள் நம் சக இரசிகர்களுக்கும்..நன்றி தங்களின் கருத்துக்கு..
நீக்குகேள்விப்படாத அரிய காமிக்ஸ், Thanks ji
பதிலளிநீக்குதங்கள் கருத்துக்கு நன்றிகள்..
நீக்குதொடருட்டும் உங்களின் பணி.
பதிலளிநீக்குThanks ji
பதிலளிநீக்கு