புதன், 28 மே, 2025

ஆவணப்படுத்துதல் அவசியமா? ஒரு காமிக்ஸ் பார்வை

 இனிய வணக்கங்கள் இனியவர்களே! அபூர்வமான புத்தகங்களை யாரோ ஒரு சிலர் தானமாகக் கொடுப்பதை நம் வாசக உலகம் சென்று சேர நாம் எடுக்கும் முயற்சிகளானது நமது தலைமுறை வாசிப்பும், இரசனைகளும்  அடுத்த தலைமுறைக்கு நம் தலைமுறை வாசக உலகம் எப்படி இருந்தது என்பதனை எடுத்துக் காட்டுவதாக அமையும். சும்மா அந்த காலத்தில் வெறும் பேனல்களை வாசித்தவர்கள் என்று ஒரு காலத்தில் நம்மைப் புறக்கணித்து விடும் அபாயமும் இந்த மாபெரும் முயற்சி மூலமாகக் களையப்பட்டு விடும். உலகத்தின் அன்றைய வாசிப்பும் ஆழமான சிந்தனைகளும் இலக்கிய மொழிபெயர்ப்பாளர்களாலும், சிந்தனா வாதிகளாலும் கொண்டு சேர்க்கப்படுவது உறுதி. அதற்காக எத்தனையோ கரங்கள் கோர்த்து நிற்கின்றன.. எத்தனையோ உலகக் காவியங்கள் அனைத்து உலக மொழிகளுக்கும் மொழிபெயர்ப்பாகவும் வெவ்வேறு வடிவங்களிலும் அவர்களின் அந்த கால நூல்கள் ஸ்கேன் பிரதிகளாகவும் இணையம் கொண்டு சேர்த்து வருகின்றனர். தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும் என்னும் தத்துவத்தின் அடிப்படையில் அவரவர் மொழிக்குரிய முக்கிய விஷயங்கள் ஆவணப்படுத்தல் மூலமாகப் பாதுகாக்கப்பட முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.. இங்கே நமது தமிழ் காமிக்ஸ் என்னும் சிற்றிலக்கியத்தின் இரசிகர்கள் நாம் அனைவரும்.. இந்த மாபெரும் தவத்தின் சின்னஞ்சிறு பகுதிதான் நாம்..

இந்த சின்னஞ்சிறு பகுதியாக இருந்தாலும் வலிமையான பகுதியாகவும் சித்திரக்கதைகளும் ஒரு சிற்றிலக்கிய வகையே. அதற்காக எம் தலைமுறை அக்காலத்தில் இத்தனை முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன என்னும் தகவலையும் அதற்கான ஆதாரங்களாக முக்கியமான, முக்கியமல்லாத அனைத்து வகை சித்திரக்கதைகளையும் ஆவணமாக்குதலும் அவற்றைப் பாதுக்காத்தலும் காமிக்ஸ் என்னும் இரசனையைத் தாங்கிப் பிடித்திருக்கும் நமது கடமையே.. இதில் அனைவரது கரமும் ஒன்றிணைந்தால் மாத்திரமே சகலமும் சாத்தியம் என்பதை நாம் உணர்கிறோமா? புத்தகங்கள் அனைத்தும் மட்கி மண்ணாகும் வரை விற்பனைக்குக் கொண்டு வந்து அவற்றின் அழிவுக்குப் பின்னர் ஸ்கேன் அட்டைகள் கிட்டினால் அவற்றை பிரிண்ட் போட்டு ஒட்டி பின்னும் விற்பனைக்கு சிறப்பாகக் கொண்டு வரும் ஆர்வம் நம் நண்பர்கள் அனைவரிடமும் உள்ளது. மீட்க முடியாத பக்கங்களை வேறு புத்தகத்தில் இருந்து ஜெராக்ஸ் எடுத்து இல்லாத பக்கங்களில் இணைத்து அவற்றை சீர் செய்ய முயற்சிகள் நம்மால் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால்..ஆனால்.. இன்னும் இணையமே எட்டாத நூல்களுக்கு உரிய கவனம் செலுத்துகிறோமா? அவை யாரிடமேனும் இருந்தால் அவற்றை ஆவணப்படுத்த வேண்டியதன் அவசியங்கள் பற்றி நாம் விவாதிக்கிறோமா? எப்போதோ ஒரு சில நண்பர்கள் கொடுக்கும் அபூர்வமான புத்தகங்களை (அவர்கள் அந்த நூலைப் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் கண்டிப்பாக நமக்குத் தெரியாத தியாகங்கள்) எப்போதோ ஒரு முறை ஆவணப்படுத்தும் விதத்தில் நாம் இணைந்து ஸ்கேன் செய்வதும் அவற்றை எடிட் செய்து நம்முடன் பகிர்ந்து கொள்வதும் இப்போது இன்னும் குறைந்த பட்ச  இந்த குழுவை இயங்க செய்து வருகிறது. இந்த குழுவும் தமிழ் காமிக்ஸ் டைம்ஸ் (Tamil Comics Times Face Book Page) மேற்கொண்டு வரும் முயற்சிகள் அவ்வப்போது எடுத்தியம்புவது ஒன்றுதான்.  "ஒன்றுபட்டால் உண்டிங்கே வாழ்வு" சிற்றிலக்கியங்களை ஆவணப்படுத்துவோம். அவை நம் எதிர்காலம் நம்மை நினைவு கூற உதவட்டும் என்கிற சிந்தனையுடன் உங்கள் அனைவரின் அன்பினையும் ஆர்வத்தையும் ஒத்துழைப்பையும் நாடி உங்கள் நண்பன் ஜானி சின்னப்பன் @Tamil Comics Times //jscjohny//

2 கருத்துகள்:

  1. நண்பர்கள் இவ்வளவு உழைத்து ஆவணப்படுத்தி, அதை பொதுவெளியில் விற்பனைக்கு வரும் பொழுது, அந்த வியாபாரத்தில் scan செய்தவருக்கும் லாபமில்லை புத்தகத்தை கொடுத்தவருக்கும் லாபமில்லை எனும் பொழுது.. மனசு கஷ்டமாகிறது

    பதிலளிநீக்கு

2025- வில் ஐஸ்னர் காமிக் இண்டஸ்ட்ரி விருதுகளுக்கான பரிந்துரைகள்-குறிப்பு

 சான் டியாகோ - 2025 வில் ஐஸ்னர் காமிக் இண்டஸ்ட்ரி விருதுகளுக்கான பரிந்துரைகளை அறிவிப்பதில் காமிக்-கான் பெருமை கொள்கிறது. ஜனவரி 1 முதல் டிசம்...