செவ்வாய், 23 டிசம்பர், 2014
திங்கள், 22 டிசம்பர், 2014
திரை விமர்சனம்_யாதேன்!
வணக்கங்கள் அன்பு நண்பர்களே! கிறிஸ்துமஸ் ட்ரெஸ் எடுத்தாச்சா?
கிறிஸ்து பிறப்பு ஒரு விழாவாகக் கொண்டாடப்படவேண்டும் என்கிற செய்தி முதன்முதலில் யாருக்கு தெரிவிக்கப்பட்டது என்று நினைக்கிறீர்கள்? ஆடு மேய்க்கும் பணியை மேற்கொண்டு ஊருக்கு வெளியே கடும் பனி விழும் இரவினில் தங்கள் ஆடுகளுக்குக் காவல் புரிந்து கொண்டிருந்த ஆட்டு இடையர்களுக்கு வானதூதர்கள் தோன்றி தகவல் தெரிவித்தனர். அவர்களே கொண்டாட்டத்தின் துவக்கப்புள்ளியாக அமைந்தனர். மிகவும் எளியவர்களுக்கே தேவன் தன் மகிமையை வெளிப்படுத்தினார். இறையரசு எளியவர்களுக்கு உரியது என்பதே இயேசு பூமிக்குக் கொண்டு வந்த செய்தி. எளிமையான வாழ்வினை மேற்கொள்ளும் மனிதர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
அப்புறம், இன்றும் கல்கியின் ராஜ்யத்தில் வெளியான பழமை ததும்பும் யாதேன் என்கிற இந்தி திரைப்படம் திரை உலகில் தாக்கத்தை உண்டாக்கியதை விமர்சிக்கும் குறிப்பு வெளியாகிறது.

அப்புறம் கொஞ்சம் என் பர்சனல் பக்கங்கள். எனது பாட்டனார் திரு.அமிர்தன் அவர்களது ப்ளஸ் பாட்டி திருமதி.தாயார் அம்மாள் அவர்களது புகைப்படத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தாத்தாவின் பணியை ஆவலுடன் ஏற்றுக் கொண்டு தொடர்வதிலும் ஒரு சுகம் எனக்கு உண்டு. அவர்கள் வழிகாட்டாவிட்டால் என் வாழ்வு எப்படி அமைந்திருக்கும் என்பதை என்னால் கற்பனையாகக் கூட எண்ணிப்பார்க்க இயலவில்லை. காமிக்ஸ் மீதான எனது காதலும், இன்றுவரை உங்களுடன் ஓடிக்கொண்டிருக்கும் எனது மகிழ்ச்சி நிறைந்த தருணங்களும் அன்று எனது தாய்வழிப் பாட்டனார், பாட்டி ஆகியோரின் ஆசீரால் அமைந்ததே. மட்டுமல்லாமல் என் கரம்பிடித்து காமிக்ஸ் மீது வைத்து தமிழ் பயில ஆர்வத்தைத் தூண்டியதும் இறைவன் எனக்குக் காட்டிய மிகப்பெரிய கருணையே! எங்கிருந்தாலும் வாழ்க!
என்றும் அதே அன்புடன் உங்கள் தோழன் ஜானி
கண்ணுக்குக் கீழே அடி தெரிகிறதல்லவா? காவல்துறையில் பயிற்சி நிறைவு விழாவுக்கு கராத்தே கலை நிகழ்ச்சிகள் செய்து காட்ட ரிகர்சல் செய்து கொண்டிருந்தபோது நண்பர் ஏடாகூடமாக என் மேல் கரணம் அடித்து வைக்க அப்போது பட்ட சின்ன காயம். ஆனால் கண்ணமங்கலம் துப்பாக்கி சுடும் போட்டியில் பத்துக்கு ஏழு குண்டுகள் புல் எனப்படும் சரியான மையத்தில் அடித்தும் மயிரிழையில் பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு பறிபோனது. இந்த புகைப்படப் பின்னணியில் தெரிவது கண்ணமங்கலம், விழுப்புரம் மாவட்டம் துப்பாக்கி சுடும் பயிற்சி நிலையம்.
பை!!!
ஞாயிறு, 21 டிசம்பர், 2014
பஞ்சவர்ணக் கிளி _திரை விமர்சனம்_கல்கி வார இதழ்!
வணக்கம் வாசக தோழமைகளே! மனம் போல் வாழ்க என்று பெரியவர்கள் ஆசீர்வதிக்கும்போது சொல்வார்கள். அதன் உண்மை காரணம் உங்கள் மனமும் வலமாக நலமாக செழுமையாக இருந்தால்தான் உங்கள் வாழ்வும் அதேவிதமான இனிமையுடன் நிறைவாக அமையும் என்பதே அதன் உட்கருத்து. இந்த சிந்தனைகளுடன் இனியதோர் வாரத்தினைத் துவக்குங்கள். உங்கள் வாழ்வு வசமாகட்டும்.
கல்கியின் அட்டகாசமான விமர்சன மழை அந்தக் கால ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட ஒன்றாகும். திரைப்படங்கள் மக்களின் கவனத்தினை ஈர்த்திட பெரிதும் துணை நின்றவை அன்றைய, இன்றைய, நாளைய திரை விமர்சனங்கள்.
தொலைக்காட்சியில் ஞாயிறு வந்தாலே சன் டிவி டாப் டென் ஸ்பெஷலை என் கண்கள் ஆர்வமுடன் நாடும். அதில்தான் ஹாலிவுட் ஸ்பெஷல் இடம்பெறும் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. திரைக்குப்பின்னால் எப்படி அந்தக் காட்சிகள் ஷூட் செய்யப்பட்டன என்பதும் அருமையாக விளக்கமாக காட்சிப்படுத்தப்பட்டு அதன் கணநேர காட்சிகள் அந்த நிகழ்ச்சியில்தான் காட்டப்படும்.
பஞ்சவர்ணக்கிளி. கதாநாயகன் ஜெய்சங்கர் அவர்கள் இரட்டை வேடம் தாங்கி சுவாரஸ்யப்படுத்திய திரைப்பட விமர்சனத்தை வாசியுங்கள். அடுத்தும் பல கல்கியின் விமர்சனங்கள் இடம்பெறப் போகின்றன. புகழ் அனைத்தும் கல்கிக்கே. நாம ஒரு இடைப்பட்ட ஆசாமி மட்டுமே! 

அப்புறம் நண்பர் ஆவுடையப்பன் சங்கரன் அவர்களது காமிக்ஸ் அன்பளிப்பு
சங்கர்லால் தோன்றும் அமித் காமிக்ஸின்
என்கிற அதிரடி சித்திரக்கதையை இந்த லிங்கில் தரவிறக்கி வாசித்து மகிழ வேண்டுகிறேன்!
லயன் குழும வெளியீடுகள் இந்த வருடம் எப்படி அமைந்திருந்தன என்பதனைக் குறித்து
லிங்கில் சென்று தங்கள் எண்ணங்களைத் தெரிவியுங்களேன்???

இவ்வருட இறுதி காமிக்ஸ் இந்த நித்தமும் குற்றம். குற்றவியல் நவீன சக்ரவர்த்தி அபாய மனிதன் டயபாலிக்கின் சாகசம் லயன் காமிக்ஸில் வெளியாகிறது. வாங்க மறவாதீர்கள்!
சனி, 20 டிசம்பர், 2014
Cbr_Comic Book Reader_How to Use?_காமிக்ஸ் புக் ரீடரைப் பயன்படுத்தி காமிக்ஸ் வாசிப்பது எப்படி?
இனிய வணக்கங்கள் இயந்திரத் தலை மனிதர்களே! இரும்புக்கை மாயாவிகளே! அஞ்சா
நெஞ்சன் ஆர்ச்சிகளே! வலை மன்னன் ஸ்பைடர்களே!
ஒரு வினா எழும்போதுதான் அதற்கான விடையும் உதிக்கின்றது.
விடை தேடும் வாழ்க்கைதான் இனிமையான அனுபவங்களைக் கொண்டு வருகிறது. விடை தெரியாத
கேள்விகளுக்கான விடையைக் கண்டறிய நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றியை
நமது காலடியில் கொண்டு வந்து சேர்த்திடும் படிக்கட்டுகளாக அமைந்திடுகின்றது. இன்று
ஒரு வினாவுடன் தொலைபேசினார் அன்பு நண்பர் மாயாவி சிவா! அதற்கான விடையை
யோசித்திடுகையில் அடடா இத்தனை நாள் இதற்கான விடையினை நண்பர்களுடன் பகிர்ந்து
கொள்ளாமல் போய்விட்டோமே என்கிற சிந்தனை என் மனப்பரப்பை ஆக்கிரமித்துக்கொண்டு
விட்டது. ஆக்கிரமிப்பு என்றாலே அதனை உடனடியாக அகற்றிடும் பணியில் என்னை
ஈடுபடுத்திக் கொண்டுள்ள என் துறைக்கான சிந்தனை வேகமெடுக்க அதற்கான விடைதான் இந்த
வலைப்பூவின் அடுத்த மலராக மணம் வீசி மலர்ந்துள்ளது.
இனி பதிவுக்குள் புகுந்திடுவோம்!
சித்திரக்கதை வாசிப்புக்கு இப்போது பரவலாக Pபிடிஎப் வகை
கோப்புகள் பயன்பட்டு வந்தாலும் சித்திரக்கதை வாசிப்பானது காமிக்ஸ் புக் ரீடர் என்கிற மென்பொருள் பயன்படுத்தி வாசிக்கும்
விதத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. வெளிநாடுகளின் காமிக்ஸ்கள் தரவிறக்கம் செய்து
வாசிப்பவராக நீங்கள் இருக்கும்பட்சத்தில் உங்களது தரவிறக்கப்பட்ட காமிக்ஸ் வாசிக்க
இயலாவண்ணம் சிபிஆர் பார்மட்டில் இருக்கும். அதனை வாசிக்க வேண்டுமானால் சிபிஆர்
ரீடர் http://www.cbrreader.com/ என்கிற மென்பொருளை நீங்கள் முதலில் உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ள
வேண்டும். இதன் மூலம் காமிக்ஸ் வாசிக்கையில் அது மிகவும் அருமையானதொரு அனுபவமாக இருக்கும்.
முதலில் இலவசமாக கிடைக்கும் மிக குறைந்த எம்பி கொள்ளளவு
கொண்ட சிபிஆர் ரீடரை http://www.cbrreader.com/இந்த லிங்கில் சென்று தரவிறக்கிக் கொள்ளவும்.
நண்பர் சிவக்குமாரின் அட்வைஸ் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் https://play.google.com/store/apps/details?id=jp.co.tokyo_ip.SideBooks&hl=en இல் கிடைக்கிறது அது பல்வேறு வகை காமிக்ஸ் பைல்களையும் வாசிக்க உதவும்.
நண்பர் சிவக்குமாரின் அட்வைஸ் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் https://play.google.com/store/apps/details?id=jp.co.tokyo_ip.SideBooks&hl=en இல் கிடைக்கிறது அது பல்வேறு வகை காமிக்ஸ் பைல்களையும் வாசிக்க உதவும்.
பின்னர் உங்கள் கணினியில் சில செயல்களை சரிபார்க்க
வேண்டும்.
முதலில் ஆர்கனைஸ் பட்டனை அழுத்துங்கள். அதில் உள்ள
டிராப்டவுன் மெனுவில் போல்டர் அண்ட் சர்ச் ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்.
மூன்று சுவிட்சுகள் பார்வைக்குக் கிடைக்கும். அதில் வியூ
பட்டனை க்ளிக் செய்யுங்கள். கிடைக்கும் மெனுவில் ஹைட் எக்ஸ்டென்ஷன் பார் நோன் பைல்
டைப் என்கிற உத்தரவானது டிக் பண்ணப்படாமல் உள்ளதா என்பதை உறுதி செய்திடுங்கள். இது
உங்கள் கணினியில் உள்ள கோப்புகளை அது எந்த வகையானது என்பதனைக் காட்டுகின்ற
விரிவாக்கப் பெயரை மறைக்கவோ அல்லது காட்டவோ உதவுகிறது. இதில் டிக் இருப்பின்
நீங்கள் ஒரு கோப்பினை நோக்கினால் அது அதற்கு நீங்கள் இட்ட பெயரை மட்டுமே காட்டும்.
உதாரணமாக ஜானி.பிடிஎப் என்கிற கோப்பை கவனியுங்கள். இதில் .பிடிஎப் என்பது பெயர்
நீட்சியாகும். இந்த நீட்சியை நீங்கள் பார்க்க வேண்டுமானால் ஹைட் எக்ஸ்டென்ஷன் பார்
நோன் பைல் டைப் என்கிற உத்தரவு டிக் பண்ணப்படாமல் இருக்க வேண்டும். அதற்காகத்தான்
முதலில் அதனை உறுதிப்படுத்திக் கொள்கிறோம்.
பின்னர் ஜே பெக் வகையில் உங்களது சித்திரக்கதை ஸ்கான்ஸ் ஒரு
போல்டரில் இருப்பதாகக் கொள்வோம். அதற்கு ப்ளாக் என்ற பெயர் இருப்பதாக எடுத்துக்
கொள்வோம். முதலில் உங்கள் போல்டரை திறந்து கொள்ளுங்கள். அதில் உள்ள அனைத்து படங்களையும்
கண்ட்ரோல் + A கொடுத்து செலக்ட் செய்து கொள்ளுங்கள்.
அதனை வலது கிளிக் செய்து ஆட் டு ப்ளாக்.ரார் என்கிற ஆப்ஷனை
கிளிக் செய்யுங்கள். ரார் வகையாக சுருக்கப்பட்ட பைல் தனியே கிடைக்கும். (இதற்கு
ரார் மென்பொருள் முன்கூட்டியே உங்கள் கணினியில் இருக்கவேண்டும். இல்லாவிட்டால்
லிங்கில் இருந்து நிறுவிக்கொள்ள வேண்டுகிறேன்.)
அந்த ப்ளாக்.ரார்
கோப்பினை செலக்ட் செய்யுங்கள். வலது க்ளிக் செய்திட்டால் கிடைக்கும் மெனுவில்
ரீநேம் என்கிற பெயர் மாற்றும் ஆணையை கிளிக் செய்யுங்கள். அவ்வாறு செய்யும்போது
ப்ளாக். மட்டுமே செலக்ட் ஆகும். அதை விடுத்து புள்ளிக்குப் பின்னர் வருகிற “ரார்” என்பதை மட்டும் தேர்வு செய்து அதற்கு மாற்றான
சிபிஆர் என்று பெயர் மாற்றம் செய்திடுங்கள். கணினி பெயர் மாற்றம் செய்யலாமா என்று கேட்கும்போது
எஸ் என்பதனை க்ளிக் செய்து விடுங்கள். இப்போது உங்கள் காமிக்ஸ் வசிக்கத் தயார்
நிலையில் உள்ளது. வாசியுங்கள் மகிழுங்கள். இந்தப் பதிவுக்கான வினாவினைத் தொடுத்த நண்பர் மாயாவி சிவா அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்றும் அதே அன்புடன்_உங்கள் நண்பன் ஜானி!
புதன், 17 டிசம்பர், 2014
திங்கள், 15 டிசம்பர், 2014
பெண்கள் நாட்டின் கண்கள்!
காவல் துறையில் மிகவும் அருமையாகப் பணியாற்றி ஒய்வு பெற்ற தமிழகக் காவல் துறையின் பெண் ஆய்வாளர் வசந்தி அவர்களைக் குறித்த சிறு கட்டுரை வெளியிட்டு அவரைப் பெருமைப்படுத்திய அவள் விகடன் இதழுக்கு எனது நன்றிகள்!
காவல் துறை ஒரு பொறுப்பு மிகுந்த துறை! அதில் பணியாற்றுபவர்கள் கடுமையானவர்கள் என்கிற தவறான எண்ணப்போக்குகள் மக்களிடையே சிறிது சிறிதாக மாறி காவல் துறை மீது நம்பிக்கை, நல்லெண்ணம், நன்மதிப்பு வளர்ந்து வருகின்ற இந்த காலக்கட்டத்தில் இந்த சிறு கட்டுரையை சுட்ட எனக்கு வாய்ப்பு கிடைத்தமைக்கு அனைவருக்கும் நன்றிகள்!
என்றும் அதே அன்புடன் ஜானி!
ஞாயிறு, 14 டிசம்பர், 2014
அரச குழந்தை இயேசு _ இது ஒரு BSI comics வெளியீடு....
வணக்கம் இனிமையான காமிக்ஸ் நேயர்களே! தோழமை உள்ளங்களே!
இம்முறை BSI நிறுவனத்தாரின் காமிக்ஸ் இதழுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்! நான் கிறிஸ்தவ சித்திரக்கதைகளில் புனிதர்கள் குறித்தும் ஆதி கிறிஸ்தவர்கள் பட்ட துயரங்களையும் அடைந்த துன்பங்களையும் குறித்து வெளியாகி முன்னொரு காலத்தில் தமிழில் வேளாங்கண்ணி போன்ற அதி முக்கிய திருத்தலங்களில் கிடைத்து இன்று காண்பதற்கு அரிதான வகை சித்திரக்கதைகளை தேடி அலைந்து கொண்டிருப்பது அறிந்த தமிழ் காமிக்ஸ் உலகம் பதிப்பக ஆசிரியர் நண்பர் திரு கிங் விஸ்வா அவர்களும் எங்கள் நண்பர் திரு ஸ்ரீராமனும் தங்கள் தேடலில் சிக்கிய சித்திரக்கதைகள் பலவற்றை சுமார் ஒரு வருடம் முன்னதாகவே கொடுத்துள்ளனர். அவர்களுக்கு முதற்கண் என் வணக்கமும் நன்றிகளும்! அவற்றில் சிலவற்றை மட்டும் ஆங்காங்கே உங்கள் பார்வைக்குப் பரிமாறுவதை ஒரு மகிழ்ச்சியான அனுபவமாகவே அனுபவித்து வருகிறேன்! அதில் ஒரு பகுதியாக இம்முறை கிடைத்துள்ள இந்த சித்திரக்கதை அன்பர் இயேசுவின் மழலைப் பருவத்தின் முக்கிய சம்பவங்களின் தொகுப்பாக வெளியாகியுள்ளது! இது கிறிஸ்துமஸ் மாதமாதலால் இதில் இந்த சம்பவங்களை பகிர்வது இயல்புதானே?
இனி கதை.....
முதல் பத்தியில் குறிப்பிட்டதுபோல் மதம் தாண்டிய காமிக்ஸ் நேசமுள்ள நண்பர்களது அன்பால் கிடைத்து உங்களை மகிழ்வித்த மேலும் இனியும் வரவிருக்கிற விவிலிய சித்திரக்கதைகள் கிடைத்ததே அந்த விஸ்வரூபி ஸ்ரீ ராமனின் அன்பால்தான் என்பதை நினைவு வைத்து மனதில் மதத்தின்பால் கொண்ட அன்புக்கும் சித்திரக்கதைகளின் பால் கொண்ட ஈர்ப்புக்கும் வித்தியாசத்தை உணர்ந்திட வேண்டிக்கொள்கிறேன். நண்பர் ஒருவரது சந்தேகத்துக்கு விளக்கமாகவும் இதனை எடுத்துக் கொள்ளலாம். இறைமகன் இயேசுவின் ஆசீர்கள்!
இந்தப் புத்தகத்தை தரவிறக்கம் செய்து படித்திட cbr வடிவில்....
ஆனந்தவிகடன் சித்திரக்கதைகளின்பால் கொண்டுள்ள அன்புக்கு எடுத்துக்காட்டான இந்த கட்டுரையை குறிப்பிட்டு சுட்டிய திரு சிவக்குமார் அவர்களுக்கு நன்றிகள்! தேங்க்யூ விகடன்!
என்றும் அதே ப்ரியமுடன் உங்கள் நண்பன் ஜானி!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
ஈகிள் கேர்ள்-உதித்து விட்டாள்-புதிய வரவு
வணக்கங்கள் அன்பு இரசிகர்களே.. புதிதாக கோவையில் இருந்து எசென்ஷியல் பப்ளிகேஷன்ஸ் வாயிலாக அறிமுகமாகி இருக்கிறாள் புதிய நாயகி ஈகிள் கேர்ள். இர...
-
வணக்கங்கள் தோழமை உள்ளங்களே... பல கைகள் கூடி இழுத்தால்தான் அது தேர்... அந்த வகையில் பலருடைய ஒட்டுமொத்த உத்வேகமான முயற்சியால் இன்று நண்பர் ...
-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
வணக்கங்கள் நட்பூக்களே... மனித மனங்களின் ஆழத்தையும் நீளத்தையும் உயரத்தையும் அளந்து அறிபவன் யார்? உதாரணமாக இந்த உயிரைத் தேடியையே எடுத்...





















































