வியாழன், 14 நவம்பர், 2019

குளிகைத் தீவு_கண்ணன் சிறுவர் இதழ்


*கண்ணன் சிறுவர் இதழில் 1960க்கு முன் வெளியான, பிரபல சிறுவர் கதை எழுத்தாளர் ஆர்.வி அவர்களின்*
*பிரம்மாண்டமான சாகசங்களை சித்தரிக்கும் தொடர்ப் படக்கதை*
*குளிகைத் தீவு*

*குழந்தைகள் தினத்தை சிறப்பிக்க ஒரு குதூகலமான காமிக்ஸ்*
மிக அழகானதும் ஆனால் ஆபத்தான ஒரு அரக்கியால் சோகமாகவும் இருக்கும் குளிகைத்தீவில் இருந்து பொதுமக்கள் சோழ நாட்டுக்குத் இடம் பெயர்கிறார்கள்.. அவர்களது துயரத்தை துடைக்க சபதம் ஏற்றுக்கொண்டு சாகசப் பயணத்தை துவக்கினார்கள் இளவரசன் நாகதீபனும் மந்திரி குமாரன் பிம்பரூபனும். செல்லும் வழி எங்கிலும் வினோதமான நிகழ்வுகள். பாதாள அறையில் ராட்சத சிலைகள் நிரம்பிய மந்திர தீவு, வினோதமான உருவமுடைய பறவைகள், நடப்பது என்ன என்றே ஊகிக்க முடியாத அளவு மாயாஜால சம்பவங்கள், விசித்திரமான மிருகங்கள், கொடூர அரக்கர்கள், மந்திரவாதிகள் என பலரை கடந்து குளிகைத்தீவை அடையும் நண்பர்கள் துணையாக வந்த சீராளன் உடன் இணைந்து எப்படி மந்திர தீவையும் குளிகை தீவையும் காப்பாற்றி அவற்றின் இளவரசிகளுடன் பூம்புகார் வந்தடைந்தார்கள் என்பதை வேகமான கதையமைப்பில் பிரம்மாண்ட உருவங்கள், மாயாஜால கட்சிகள், வீரதீர சாகசங்கள் எல்லாவற்றையும் தத்துரூபமாக சித்தரிக்கும் சித்திரங்களுடன் இன்று குழந்தைகள் தின சிறப்பு பிடிஎஃப் ஆக
*பிரம்மாண்டமான சாகசங்களை சித்தரிக்கும் தொடர்ப் படக்கதை*
*குளிகைத் தீவு*
*குழந்தைகள் தினத்தை சிறப்பிக்க ஒரு குதூகலமான காமிக்ஸ்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சேட்டை நான்சி_அறிமுகம்

 வணக்கம் தோழர்களே..  இன்றைய சிறு அறிமுகம் இந்த நான்சி.. அவளது சேட்டைகளை அட்டையிலேயே காண்பித்திருக்கிறார்கள்.. வாசித்து இரசியுங்கள்..  என்றும...