வியாழன், 14 நவம்பர், 2019

மிதிலாபுரியின் மந்திரவாள்_முல்லை தங்கராசன்


*சிறுவர் இலக்கிய வரிசை*
*தமிழில் சிறுவர் இலக்கியத்திற்கு சிறப்பான சேவைகள் புரிந்த முல்லை தங்கராசனின்*
*மயிலா புரியின் மந்திரவாள்*
*ஒரு மாயாஜால உலகத்திற்குள் உங்களை அழைத்துச் செல்லப் போகும் மகா அற்புதமான நாவல்.* *இந்த குழந்தைகள் தினத்தன்று நீங்களும் சிறுவர்கள் ஆகுங்கள்.*
மாமன்னர் ஈசனின் நல்லாட்சியில் மகிழ்வுடன் இருக்கிறது மயிலாபுரி தேசம்.. கடம்பன் என்ற மந்திரவாதியின் உதவியுடன்  சூது செய்து ஆட்சியைக் கைப்பற்றுகிறான் ஈசனின் தம்பி நீசன்.. மனமுவந்து தனக்கு அரியணையை விட்டுக் கொடுத்த மாமன்னரையும் கொலை செய்ய அவன் தயங்கவில்லை.. மெய்க்காப்பாளர்களால் காப்பாற்றப்படும் இளவரசன் 10 வயது சிறுவன் ஜெயக்குமரன் செந்துருவர் என்ற வினோதமான உருவம் கொண்ட மனிதர்கள் வாழும் தீவில் அதன் மன்னரான சித்திராங்கதர் பொறுப்பில் விடப்படுகிறான். வாலிப வயது வந்தவுடன் நாடு திரும்ப நினைக்கும் ஜெயக்குமாருக்கு சவாலாக காத்திருக்கிறது ஒரு பிரம்மாண்டமான எலும்புக்கை பிடித்திருக்கும் மிகப்பெரிய மந்திர வாள். இரவிலும் ஒளிரும் அந்த வாளின் வெளிச்சம் பார்த்தாலே மனோவசியம். அதை உபயோகப்படுத்தும் நீசனை வெற்றிகொள்ள ஜெயக்குமரனுக்கு துணையாக வருகிறது ஒரு மிதக்கும் மண்டை ஓடு. தன் மக்களையே குள்ளர்கள் ஆக்கி விழுங்கும் மன்னன்.. பார்வை பட்டாலே மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் இளவரசி. இன்னும் பல ஆபத்துகள் என பல விதங்களில் பரபரப்பூட்டும் சம்பவங்களை சந்தித்த இளவரசன் ஜெயக்குமரன் இழந்த அரியணையை எப்படி மீண்டும் பெற்றான் என முல்லை தங்கராசன் தன்னுடைய பாணியில் விறுவிறுப்பாக எழுதியிருக்கிறார். இதுவரை இணையத்தில் வெளிவராத இந்த அட்டகாசமான மாயாஜால நாவல் இன்று குழந்தைகள் தினத்திற்கான குஷியான பிடிஎஃப் பகிர்வாக
*தமிழில் சிறுவர் இலக்கியத்திற்கு சிறப்பான சேவைகள் புரிந்த முல்லை தங்கராசனின்*
*மயிலா புரியின் மந்திரவாள்*
*ஒரு மாயாஜால உலகத்திற்குள் உங்களை அழைத்துச் செல்லப் போகும் மகா அற்புதமான நாவல்.* *இந்த குழந்தைகள் தினத்தன்று நீங்களும் சிறுவர்கள் ஆகுங்கள்.*


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வகம்தீபாவளி 2024 மலர் அறிவிப்பு

  வகம் காமிக்ஸ் நிறுவனர் திரு.கலீல்: தீபாவளி மலருக்கு முன்பதிவு செய்து வரும் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை முன்ப...