கார் காத்திருந்தது..
அந்த பிரபல வங்கியின் நேர்மையான மேனேஜர் மிருகபூபதி காரில் ஏற கார் சட்டென வேகமெடுத்தது..
ஊட்டி..
சந்து பொந்துகளில்புகுந்து மலைப்பாதையில் கீழிறங்கிக் கொண்டிருந்த கார் ஒரு திருப்பத்தில் வேகமிழந்து நிற்க..
ட்ரைவர் சிம்மானந்த் தன் இருக்கையிலிருந்து கீழிறங்கி பானட்டைத் திறந்து ஆராயத் தொடங்கினான்..
ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த மிருகபூபதி காரை விட்டிறங்கி ட்ரைவரை கடிந்து கொண்டே ஒரு போனை எடுத்துக்கொண்டு சரிவுப்பாதையில் இறங்கத் துவங்கினார்.. பத்து..இருபது.. முப்பது..நாற்பது..ஐம்பது..
சிம்மானந்த் சுற்றிலும் நோக்க ஆளரவமேயில்லை.. நழுவலாக பானட்டை மூடிவிட்டு காரைக் கிளப்பி சரிவின் வேகத்தோடு அசுரப்பாய்ச்சலாக பாய்ந்து கீழிறங்கிக் கொண்டிருந்த மிருகபூபதியை மலைச்சரிவில் மோதித்தள்ளினான்.. காற்றிலெழும்பி எங்கோ போய் முட்டி மோதி சிதறியது அவரது உடல்..
வங்கி பணத்தில் கையாடல் செய்திருந்தவனை ஆதாரத்தோடு பிடிக்க அவர் ஏற்பாடு செய்து கொண்டிருந்த தகவலை கேள்விப்பட்டிருந்தவன் அதற்குமுன் தானே முந்திக் கொண்டு விபத்தில் பலியாகியதுபோன்று சூழலை உருவாக்கிவிட்டிருந்தான்..
வங்கி மேனேஜரை காரை ஏற்றிக் கொன்ற அன்றிரவே சிம்மானந்த் போய்க்கொண்டிருந்த காரின் குறுக்கே திடுமென நடு ரோட்டில் தோன்றிய உருவத்தைக் கண்டு அஞ்சி ப்ரேக்கை மிதித்தான்.. அது அவனது மேனேஜர் மிருகபூபதி போலவே இருந்தது.. வெள்ளை அங்கியில் எங்கோ பார்த்துக்கொண்டு நின்ற உருவம் நெருங்கி வர.. கடைவாயில் தென்பட்ட இரத்தக் கோடு நான் ஆவியாக்கும் என்பதாய் கிலியூட்ட காரை விட்டிறங்கி ஓடியவனை ஹக்..ஹக்..ஹக்.. செவிக்கருகே துரத்திய கிசுகிசுப்பில் கலவரமடைந்து கண்தெரியாமல் அந்த இருட்டில் காலை வைக்க படுபாதாளம் அவனை அப்படியே உள்வாங்கிக் கொள்ள எங்கோ தட்....
சிம்மானந்தின் சேப்டர் ஓவர்..
இரத்த சகதியோடு பாறையொன்று பார்வைக்கு தென்பட சிம்மானந்தின் சிதறுண்ட உடலை நோக்கிக் கொண்டே கடைவாய் இரத்தத்தை துடைத்துக்கொண்டு என் அண்ணன் சாவுக்கு சீக்கிரமே பழிவாங்கிவிட்டேன் என மேனேஜரின் ட்வின் ப்ரதர் வராக செழியன் அங்கிருந்து நகர்ந்தார்... கேம் ஓவர்..👹
சூப்பர் சகோ....
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோ..
நீக்குராஜேஷ்குமார் சாயல் முழுவதுமாக வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை
பதிலளிநீக்குநன்றி ப்ரோ.. அவருடைய தீவிர இரசிகன் என்ற வகையில் தங்கள் கருத்து எனக்கு விருது கிடைத்த மகிழ்வை தருகிறது...
நீக்குஅட்டகாசம் தல
பதிலளிநீக்குபெயர்கள் எல்லாம் தமிழ்வாணன் நாவல் படித்தது போல் இருந்தது.
அருமை அருமை
- Suresh
ஆஹா.. இன்னொரு விருதா.. இதய பூர்வமான நன்றிகள்..
நீக்கு