வெள்ளி, 24 டிசம்பர், 2021
027_எஸ்தர்_விவிலிய சித்திரக்கதை வரிசை_கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்-2021
அமெரிக்காவில் அது நிகழ்ந்த ஆண்டு.. அறிமுகம்
வியாழன், 16 டிசம்பர், 2021
கவிதையில் தொலைந்தவன்..ஜானி சின்னப்பன்
கவிதைக்குக் கண்ணின்றித் தொலைந்து போன சிறுபயலென்னைத் திரும்பியும் கவிஞனாக்கிச் சென்றது ஒரு பேருந்துப் பெண்ணின் துப்பட்டாவின் உரசல் என்று கதைவிட்டாலும் கவிதையென்பீர்களோ..?!கவிஞனென்பீர்களோ?! கவிஞனென்பவனின் கவிதைகளின் ஆணி வேரில் பொய்யும் சேரும்போதினில்தான் கொஞ்சம் கொத்துமல்லி மிதக்கும் ரசமென மணமணக்கும்.. இன்றைய கணங்கள் நாளைய நினைவுகளாகக் கடப்பதைத் தடுத்து இன்றை இனிமையாக்கிடக் கவிஞனின்
சிறு பொறிகள் கணங்களின் இனிமையை அள்ளித் தர இதயம் முழுதும் உயிர்ப்பு நிறைந்து ததும்பி அலைகிறது.. மழை நேரத்து தும்பியாய்...
-ஜானி சின்னப்பன்
திங்கள், 13 டிசம்பர், 2021
இது ஒரு வன்மேற்கின் கதை_ஜானி சின்னப்பன்
பூம்...
வெடித்ததொரு டைனமைட்..
அதிர்ந்ததந்த சுரங்கம்..
வெளிப்பட்டதோ வண்டி வண்டியாய்த் தங்கம்..
சுரங்கத்தை சுரண்டி இயற்கையைச் சுரண்டியவர்களைச் சுரண்டிப் போகவொரு கூட்டம்..தெரு முக்கிலேயே காத்திருக்கும்.. கௌபீனத்தில் கட்டி வைத்திருந்தாலும் கவர்ந்து விடுமந்தக் கர்வமிகு கூட்டம்.. தீயதை ஒழிக்கவென்றே ஆங்காங்கே செரீப்புகளும் மார்சல்களும் அவதாரமே எடூத்து வந்து
டுமீல் டுமீலெனச் சுட்டாலும் புற்றீசல் கூட்டத்தை யாரால் தடுத்திட முடியும்?
நாளொரு கொலையும் பொழுதொரு வதமுமாய் திமிலோகப்படுமந்த மதுபானக் கூடம்.. உடையும் பாட்டில்களும் ஓடிப் பதுங்கும் பேரழகுப் பதுமைகளும் பஞ்சமில்லாப் பாலை வெளிகளும் கரைதெரியாப் பாலைவனக் கடல்களும் பாய்ந்து வரும் புரவிக் கூட்டமும் வெட்டியான்களின் வாய் நிறைந்த இளிப்புகளும் லாடங்கள் தெறிக்கும் கொல்லர் கூடமும் விற்றுத் தீர்ந்தே சலித்துப் போகும் தோட்டாக் கடைகளும் தினம் தினம் மரணம் தின்னும் இரத்த பூமியும்.. கண்டேன் வன்மேற்கிலொரு வன்முறைக் காவியத்தை...ஜானி சின்னப்பன்
தூரத்திலே..ஜானி சின்னப்பன்
மங்கியும் மறைந்தும்
வெம்பியும் வேகமாயும்
மாய்ந்து போகுதென்
மனசு..
மங்கையவள்
மலர்ப்பாதங்களின்
கொலுசொலிகள்
கொஞ்சம்
தொலைவிலே
கேட்கும் அந்த
மனப் பறவையின் தாகம்_ஜானி சின்னப்பன்
அன்று ஒரு நாளில்
அற்புதமாய் துவங்கிப்பின்
அர்த்தம் அறுந்து
போனதொரு தினத்தின்
அர்த்தமற்ற தருணங்கள்
அர்த்தமற்றதாய்
மாறிப் போனதொரு
முழு நிலவின்
வெளிச்சப் புன்னகை
சிந்தியதொரு
அர்த்தமற்ற இரவுப் பொழுதின்
கடந்து போன வினாடிகளில்..
நீயென் மனதைக்
கிழித்துப் போனபின்னே
நடந்ததை நீயறிவாயோ?!?
உன் வார்த்தைகளற்ற
மௌன வாளின் வீச்சில்
அறுந்து போன அத்தனை
நரம்புகளும்
உன் நினைவுகள் இழையோடும்
பட்டுப் போனதொரு கல்
மரமாய் நின்றே
கால் மரத்துப் போனாலும்
நிச்சலனமாய் இலையுதிர்த்து
தவம் கலையா இமை கிழித்து
மூப்பு நையப் புடைக்கும்
அந்திப் பொழுதுகள்
அமைதியாகக் கடப்பதை
அர்த்தமின்றி உற்று நோக்கி
நிலாக்களை பிடித்துப் பிடித்து
விளையாடும் ஆட்டத்தில் வழிந்தோடிப் போகிறதென் பெரு மூச்சுக்கள்...
இக்கணமோ எக்கணமோ..
எப்போதும் உள்ளுக்குள்
சக்தியை சேகரித்துக்
காத்திருக்கும் எந்தன் இதயப் பறவை
கடந்திடும் என்றாவதொரு
பொல்லாத பொழுதில்
தசை கிழித்துப் பறந்து வந்துன்னைத் தேடியலைந்துன் இதயத்தில் சரணடைந்துன் ஆன்மாவில் ஐக்கியமாகிடத் தவிப்பதைத் தவிர்த்துக் கொள்ளுதல் என்னால்
இயலாதடிப் பெண்ணே..
ஜானி சின்னப்பன்
சனி, 11 டிசம்பர், 2021
காமிக்ஸ் வானொலி பாட் கேஸ்ட்..
ஒரு புதிய முயற்சியாக கிருஷ்ணா, சுரேஷ், கலீல் மற்றும் லக்கி லிமட் சேர்ந்து Tamil Comics Cast என்ற ஒரு காமிக்ஸ் podcast ஆரம்பித்துள்ளனர்.. அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்..
முதல் podcast ஆக இந்த மாதம் வெளிவந்த ஸ்டெர்ன் கதையை பற்றி பேசியுள்ளோம். இது ஸ்டெர்ன் கதையை பற்றிய ஒரு விரிவான audio கலந்துரையாடல். இதை கேட்டு உங்கள் கருத்தை தெரிவிக்குமாறு கேட்டுகொள்கிறோம். அடுத்தடுத்து பல முயற்சிகளை இதில் மேற்கொள்ள இருக்கிறோம். உதாரணமாக காமிக்ஸ் ரசிகர்கள் உடனான உரையாடல் ,அவர்களின் அனுபவங்கள் மற்றும் அவர்களின் சேகரிப்புகள் போன்ற பல ஐடியாக்கள் உண்டு.
இணைந்து கேட்டு மகிழ..
திங்கள், 6 டிசம்பர், 2021
வேதாளம் புதிது 2.0- வி.எம்.ராஜா சார்
ஞாயிறு, 5 டிசம்பர், 2021
ஒரு டெலிபோனின் ஓசை மற்றும் வந்ததே கா(த)ல் வந்ததே!_புதுமை சித்திரக்கதை
ஈகிள் கேர்ள்-உதித்து விட்டாள்-புதிய வரவு
வணக்கங்கள் அன்பு இரசிகர்களே.. புதிதாக கோவையில் இருந்து எசென்ஷியல் பப்ளிகேஷன்ஸ் வாயிலாக அறிமுகமாகி இருக்கிறாள் புதிய நாயகி ஈகிள் கேர்ள். இர...