செவ்வாய், 24 மார்ச், 2020

*கொரோனா கோரங்கள்..*


மனப்பயம் 
அகற்றவே
முகத்திரை
தேடியலையும்
மாந்தரை
முகத்திரை
இல்லையென
தவித்தலைய
திண்டாடித்திரிய
அலைக்கழித்து
மறைத்திடும்
வியாபாரக்
கள்ளர்தம்
லாபநோக்கைக்
கண்டேன்..

கோர நோயின்
பிடியிலே
ஏழை
மாந்தர்தமை
மாண்டுபோக
கைவிட்டால்
நாளை 
நமக்கும்
வரும் கேடென
உணர்வீர்..
இன்றதை
பணமாய்
மாற்றத் துடிக்கும்
அறிவிலீர்...
-ஜானி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

XIII - சில பயணங்கள் முடிவதேயில்லை.. இன்று xiii பிறந்த நாள்..

 வணக்கங்கள் வாசகர்களே.. நமது அன்பு நாயகர் ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டு தன் இறந்த காலத்தைத் தேடிச் செல்லும் பயணத்தில் தொடர்ந்து பங்கேற்று வரு...