வெள்ளி, 15 மே, 2020

FREW 1048 The ghost on flight 302- கதை சுருக்கம்

Add caption
FREW 1048 The ghost on flight 302-
கதை: நார்மன் வொர்க்கர்
ஓவியம்:ஜோஸ் கேஸனோவாஸ்
இதுவரை Phantom @ வேதாளரை@முகமூடி வீரர் மாயாவியை அறியாதவர்களுக்காக:
சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருகப்பல் சிங் கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்டது. உயிர்பிழைத்து கரையொதுங்கிய ஒருவனை பிக்மி குள்ளர்களான பண்டார் இனமக்கள் காப்பாற்றுகின்றனர்..அவனது தந்தையை கொன்ற கடற்கொள்ளையனின் மண்டை ஓட்டின்மேல் சபதமெடுக்கிறான்..அநீதி, தீமை, கொள்ளையை தானும் தன் வம்சாவழியினரும் தடுத்தே தீருவோம் என்பதே அது..
அவரே முதல் வேதாள மாயாத்மா..
தற்போது 21வது வேதாளரின் ஆட்சியின் கீழ் கதை துவங்குகிறது..
வேதாளர் வாட்ச் மென் எனப்படும் மூவரின் சிலைகளை மலைமீது காண்கிறார். 


பேராபத்துகளின்போது அம்மூவரும் பெங்காலியாவை கவனித்துக் கொள்வார்கள் என்கிறார் மோஸ்.. கிம்பர்லி எரிமலை வெடிக்கப் போகிறதாகவும் அதனை சென்று கவனித்து பொதுமக்களை எச்சரிக்கவிருப்பதாகவும் அப்படியே அம்மூவர் சிலைகளையும் பார்த்து விட்டு வருவதாகக் கூறி புறப்படுகிறார் வேதாளர். கடும் பிரயத்தனத்திற்கு மத்தியில் மலையேறி சிலைகளை காணும் வேதாளர் மேலே போன விமானம் ஒன்று விபத்துக்குள்ளாவதைக் கண்ணுறுகிறார். அந்த விமானம் ஏற்படுத்திய அதிர்வில் கைநழுவி கீழே விழுகிறார் வேதாளர்..
சில தினங்கள் கழித்து மயக்கம் தெளிந்து திரும்ப எழுந்து பார்த்தபோது சற்று தூரத்தில் விமானம் விழுந்து அந்த இடம் முழுவதுமே மரணத்தின் சாயல் படர்ந்திருப்பதையும் விமானத்தில் வந்த ஒரு விஞ்ஞானி மட்டும் தன்னருகே வருவதையும் காண்கிறார். தான் புரபஸர் ஐன்ஸ்டெல் என்கிறார்.. அவ்விஞ்ஞானியின் படுபயங்கரமான கிருமியொன்றின் கண்டுபிடிப்பால் பெங்காலியாவும் வனத்தின் அத்தனை உயிர்களும் செடி, கொடி வகைகளும்  மரணமெய்திவிட்டன என்கிறார். தான் 13ம்தேதி வெள்ளியன்று மோரிஸ் டவுனில் பெங்காலி ஏர்லைன்ஸில் ஏறியதாகவும் தன் ஆராய்ச்சிக் குறிப்புக்களையும் நாசகார கிருமியையும் தன்னுடன் கொண்டுவந்ததாகவும் விமானத்தை இருவர் கடத்தியதால் செக்யூரிட்டி சுட்டதில் விமானம் நொறுங்கி விழுந்து கிருமி வெளியேறி அந்த இடத்தையே நாசம் செய்து விட்டதாகவும் கூறுகிறார்..போதாக்குறைக்கு அவ்விடத்தின் நீராவியில் கலந்து
மேகமாக மாறி மோரிஸ் டவுனுக்குப் போய் மொத்த நகரையும் சுடுகாடாக்கிவிட்டது என்கிறார்..

அவர் மட்டும் தப்பியது எப்படி என்று கேட்பதற்குள் அவர் மாயமாகிறார் ..

தன் இருப்பிடத்திற்கு செல்muலும் வழியெல்லாம் மரண தாண்டவத்தைக் கண்ணுற்று இறுதியில் குரான் தன் மடிமீதே இறப்பதை கண்டு கலங்கும் மாயாவி அவனை அடக்கம் செய்தபின் தன் மனைவி டயானா இருக்கும் இராணுவ மருத்துவமனைக்கு விரைகிறார்..மயக்கமுறுகிறார்..


வேதாளர் மருத்துவமனையில் மயக்கம் தெளிந்து எழுந்ததும் டயானாவும் மருத்துவரும் அவர் எங்கோ மயங்கிக் கிடந்ததாக குரானும் அவரது ஆட்களும் கொண்டு வந்து சேர்த்ததாக கூறுகின்றனர்.. அதெப்படி சாத்தியம் என்று குழம்புகிறார்.  கூறுகின்றனர்.. அதெப்படி சாத்தியம் என்று குழம்புகிறார்.  13ம்தேதி வெள்ளியன்று பெங்காலியா பேரழிவை சந்தித்து விட்டதாக வருந்துகிறார். டயானாவோ அன்று 11ம்தேதி புதன் கிழமைதான்.. அனைத்தும் உங்கள் பிரமையே என்கிறாள்.
தன்னாலும் இதை நம்பமுடியவில்லைதான் என்றாலும் கண்டிப்பாக இதில் ஏதோ மர்மம் உள்ளது.. இது நடக்கத்தான் போகிறதா என முன்கூட்டியே விசாரித்தறியலாம்..அப்படியெனில் நடக்கப்போவதைத் தடுத்து விடலாம் என்று விரைவாக முடிவெடுத்து

மருத்துவமனையின் போனில் நேரடியாக கர்னல் வொரோபுவை தொடர்புகொள்கிறார்..
ஆச்சரியமடையும் கர்னலிடம் ப்ளைட் 302  வெள்ளிக்கிழமை மோரிஸ் டவுனிலிருந்து புறப்படுவது உறுதிதானா என்று விசாரித்தறிகிறார்.. புரபஸர் ஐன்ஸ்டல் என்பவர் பயணிப்பதை  விசாரிப்பதற்கு க்குள் மருத்துவமனை ஊழியரின் குறுக்கீட்டால் அங்கிருந்து வெளியேறுகிறார் வேதாளர். டயானாவும், ஆக்ஸலும் வந்து தாக்கப்பட்டு கட்டிப்போட்ட நிலையிலுள்ள மருத்துவ மனை ஊழியரை அவிழ்த்து விட்டதும் முகமூடியொருவர் தன்னை தாக்கியதாகவும் இது வாழ்வா சாவா பிரச்சினை என்று கூறியதாகவும் சொல்ல டயானா மோரிஸ் டவுனுக்குப் போக முடிவெடுக்கிறாள்.

மோரிஸ் டவுனிலுள்ள பெங்காலி ஏர்லைன்ஸ்க்கு டெவிலோடு சென்று பயணிகள் பட்டியலை கேட்ட வேதாளரை விசித்திரமாக பார்த்துவிட்டு கம்பெனி சட்டம் அதற்கு அனுமதிக்காதென்கிறாள் ரிசப்ஷனிஸ்ட்.  அவரின் தோற்றத்தில் சந்தேகமடைந்து போலீஸ்காரர்களுக்கு தகவல் அனுப்புகிறாள். அங்கிருந்து மாயமாகிறார் வேதாளர். சைனாடவுனிலுள்ள தனது பழைய நண்பர் வு ஃபானிடம் போகிறார்..
இதற்கிடையே டயானா பிரசிடெண்ட் லுவாகாவை சந்திக்க அவர் வேதாளரின் தோற்றத்தை விவரமாக கமிஷனருக்கு தெரிவித்து அவரை யாரும் பார்த்தால் கைது செய்யாமல் தனக்கு தகவல் தெரிவிக்குமாறு சொல்கிறார் அதிபர் லுவாகா.. 302 விமானம் கிளம்பவிருப்பது சரியான தகவல் என்றும் பயணிகள் பட்டியலை மாத்திரம் கொஞ்சம் நேர அவகாசத்தில் வாங்கித் தர கமிஷனர் ஒப்புக் கொள்கிறார்..
சோர்விலும் அயர்ச்சியிலும் வேதாளர் சற்றே கண்ணயர்ந்திருக்க அவரைக் கண்ட பெண்ணொருவர் வு ஃபானிடம் யாரோ அவரது இடத்தில் இருப்பதாக. கூற "டாங் கேங்"(பிரபல பாரம்பரிய போதைக் கடத்தல் கும்பல்..வாசிக்க:ரங்கூன் புலி) -கிடமிருந்து அவரை வேதாளர்தான் காப்பாற்றியவர் என்கிறார்.

மறுதினம்..

சைனா டவுனைச் சேர்ந்த வு ஃபான் பெங்காலியா விமான நிலைய லாண்டரி சர்வீஸில் இருப்பதால் உள்ளே இரகசியமாக வேதாளரை அழைத்துப் போகிறார். 

கமிஷனர் லாமண்டா மூலமாக அதிபர் லுவாகா 302 விமான விவரத்தை வேதாளர் வந்து தெரிந்து கொண்டு போனதை அறிகிறார்..


வேதாளர் ரிசப்ஷனையே கவனித்துக் கொண்டிருக்கிறார் கடைசி நேரத்தில்  விஞ்ஞானி ஐன்ஸ்டைல் சட்டென உள்ளே நுழைந்து விட அவரைத் தடுக்கும் முயற்சிக்கு குறுக்கே விமான நிலைய பாதுகாப்புப்படை குறுக்கே வருகிறது.. அவர்களைத் தாக்கிவிட்டு தப்புகிறார்..

இடையே விமான பயணிகளில்  சிஸ்டர்கள் போன்று வேடமிட்டு இருவர் 302 வில் ஏறியிருக்கும் சங்கதி போலீசார் மூலம் அதிபர் லுவாகாவுக்கு தெரியவருகிறது..


கன்ட்ரோல் டவரிலிருந்து யாரோ ஒருவன் 302 விமானத்தின் குறுக்கே தடை ஏற்படுத்த முயற்சிப்பது தெரிகிறது. ஆனால் 302 மேலேறிப் போய் விட்டது.. அது வேதாளரே..

சட்டென இராணுவ தளத்தை நோக்கி முன்னேறுகிறார் வேதாளர். அதிபர் லுவாகாவும் விமான நிலைய அதிகாரி பாக்ஸ்டரை தொடர்பு கொள்ள முயன்று கொண்டே இருக்கிறார்..பாக்ஸ்டருக்கோ வேறொரு தலைவலி..யாரோ ஒருவர் (நம்ம வேதாளர்தான்) மிலிட்டரி ஜெட்டை கிளப்பிக் கொண்டு போக முயற்சிப்பதை தடுக்கவியலாது திணறிக் கொண்டிருக்கிறார்..

வுவை யாரோ பைத்தியக்காரன் அச்சுறுத்தி அங்கே கொண்டு வந்ததாக தெரிவிக்குமாறு சொல்லி விமானத்தை கிளப்புகிறார் வேதாளர்.. ஜீப்பை குறுக்கில் பாயவிட்டு வேதாளரை வீழ்த்த முயற்சிக்கும் இராணுவ வீரர்களை ஏமாற்றிவிட்டு சர்ர்ர்ரென மேலேறிப் பாய்கிறது ஜெட்..பாக்ஸ்டருக்கு 302வை தடுத்து நிறுத்துமாறு அதிபர் சொல்லும் செய்தி தாமதமாகவே கிடைக்கிறது..ஜெட் திருடுபோனதையும் அதிபரிடம் சொல்ல அதிபர் அங்கே புறப்பட்டு வருகிறார்..

ஜெட்டிலிருந்து 302வை இடைமறிக்கும் வேதாளர் விமானிகளை கீழிறங்குமாறு சைகை செய்கிறார்..

கன்ட்ரோல் ரூமிலுள்ள பாக்ஸ்டரை அனுமதி வேண்டுகிறார்கள் விமானியர்.. அதேநேம் அதிபர் லுவாகாவும் உள்ளே வர சுமார் 300 மனித உயிர்கள் ஆபத்திலிருப்பதை அதிபரிடம் சொல்கிறார் பாக்ஸ்டர்.. மைக்ரோபோனில் அதிபரே தொடர்பு கொண்டு கடத்தல்காரர்கள் விமானத்திலிருப்பதால் உடனடியாக கீழிறங்குமாறு கட்டளையிடுகிறார்..

கடத்தலுக்குத் தயாராக இருந்தவர்களை கைது செய்கிறார்கள்..

அவர்களிடமிருந்து கையெறிகுண்டுகளும், ஆயுதங்களும் கைப்பற்றப்படுகிறது..

விமானத்திலிருந்த புரபஸர் ஐன்ஸ்டல் மாரடைப்பால் தன் சீட்டிலேயே மரணிக்கிறார்.. 

இராணுவ ஜெட்டினைதொடர்பு கொள்ளும் லுவாகா பத்திரிக்கையாளர்களை தவிர்த்துக் கொள்வதற்காக தனியே  ஜீப்பில் போய் வேதாளரை தனியே சந்தித்து பேசிவிட்டு விஞ்ஞானியின் பெட்டியைத் தருகிறார்.. அதனை பெற்றுக் கொண்ட வேதாளர் கால்மணிநேரத்தில் உயிர்ப்புடன் புகைந்து கொண்டிருக்கும் 

கிம்போர் எரிமலைக்குள்  நெருப்பு குழம்புக்குள் கிருமிகள் அடங்கிய பெட்டியை வீசி  அழிக்கிறார்.. ஜெட்டில் எரிபொருள் தீர்ந்துவிட அதனை கடலில்  அமிழ்த்தி விட்டு நீந்திப் போய்விடுகிறார் வேதாளர்.. 

மனித உயிர்களைக் காப்பாற்ற ஒரு விமானத்தினை பலியிடுவது தவறல்லவென அதிபர் திருப்தியடைகிறார்.. 

கேள்விகளால் துளைத்தெடுக்கக் காத்திருக்கும் பத்திரிக்கையாளர்களை எதிர்கொண்டு 302 விமானக்கடத்தல் தடுக்கப்பட்டது..300 உயிர்கள் காப்பாற்றப்பட்டு விட்டன.. கடத்தல்காரர்களும் கைது செய்யப்பட்டுவிட்டனர் என தெரிவிக்கும் லுவாகாவை அந்த ஜெட் பற்றி விளக்கம் கேட்கிறார்கள் நிருபர்கள்..

அடையாளம் தெரியாத விமானம் அந்த ஜெட் என்று சிம்பிளாக விளக்கமளித்து விட்டு நடையைக் கட்டுகிறார் லுவாகா..


சில தினங்களுக்குப் பின்னர் டயானாவோடு தான் கீழேவிழுந்து தலையில் அடிபட்ட இடத்தை சென்றடைகிறார் வேதாளர்..

அந்த விபத்து இதே நேரத்தில்தான் நடந்திருக்கிறது.. இன்னும் நடக்காத விபத்தில் இறந்துபோன ஒருவரின் ஆவியை வேதாளர் சந்தித்ததும் புதிரே..இதற்கு ஏதேனும் விளக்கம் இருக்கலாம் என்கிறாள் டயானா. 

முதியவர் மோஸ் இவை நடந்தது உண்மைதான். ஆனால் கற்சிலையாக காட்சிதரும் வாட்ச்மென் மூவரின் சித்து விளையாட்டே இது.. நேரத்தையும் காலத்தையும் அவர்களே மாற்றியமைத்துள்ளனர் என்கிறார் வேதாளர்.. 

நீங்கள் இதை நம்புகிறீரா எனும் டயானாவிடம்..வாட்ச்மென்களின் இரகசியத்தை அவர்களே பாதுகாத்துக் கொள்ள விட்டுவிடலாம் என்கிறார் வேதாளர்.. கதை நிறைவடைகிறது..




10 கருத்துகள்:

  1. பதிவு நல்லாத்கீது.
    படக்கதை செஞ்சி கொடுத்தா இன்னும் நல்லா இருக்குமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசித்து இரசிக்க ஆங்கிலமே முதலில் போதுமானது ஐயா.. பின்னர் நேரமிருப்பின் அதனை செயல்படுத்தலாமே..

      நீக்கு
  2. சரியாப் போச்சு...
    தமிழ் கதையோட லின்க்கை இந்த பதிவுக்குள்ள எலியை வெச்சு தடவி தடவி பார்த்து கை தேஞ்ச்துதான் கை மேல் பலன். இது மாதிரி ஐரோப்பா, ஃப்ராங்கோ பெல்ஜியன் காமிக்ஸ்களை பற்றியும் எழுதுங்க. மறக்காம அதோட லின்க்கையும் போட்டு வெய்யுங்க.
    சாமீ... கடுப்பேத்தறார். ;))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அச்சச்சோ.. பிடிஎப் பின்னால பண்ணிடலாம்.. கதைக்கருவை உள்வாங்கிட்டே கதை சொல்லிட்டிருக்கேன் இப்போ..சாரி..

      நீக்கு
  3. அற்புதமான
    அட்டகாசமான
    தெளிவான
    நடையில் தாங்கள் எழுதியுள்ளீர்கள்..
    பாராட்ட வார்த்தைகள் இல்லை என்றபோதிலும்....
    அற்புதமாக இருக்கிறது
    அட்டகாசமாக இருக்கிறது
    தெளிவான நடையில் இருக்கிறது
    என்பதை சொல்வதைத் தவிர வேறு வழியில்லை.

    அப்போ குறையே இல்லையா என்று நீங்கள் கேட்கலாம்.

    இருக்கிறது அது என்னவென்றால் இந்த எழுத்துருவின் வண்ணத்தை கருப்பு வண்ணத்தில் அளித்தால் நன்றாக இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேங்க்யூ தலீவா.. மொபைலில் அப்லோடினேன். பின்னர் கணினியில் வாய்ப்பிருப்பின் கரெக்ட் செய்கிறேன்..

      நீக்கு

சேட்டை நான்சி_அறிமுகம்

 வணக்கம் தோழர்களே..  இன்றைய சிறு அறிமுகம் இந்த நான்சி.. அவளது சேட்டைகளை அட்டையிலேயே காண்பித்திருக்கிறார்கள்.. வாசித்து இரசியுங்கள்..  என்றும...