செவ்வாய், 17 செப்டம்பர், 2019

COUNTRIES AND ITS PARLIAMENT- GK


Afghanistan — Shoora
Andorra — General Council
Albania — People’s Assembly
Azerbaijan — Melli Majlis
Algeria — National People’s Assembly
Angola — National People’s Assembly
Argentina — National Congress
Australia — Federal Parliament
Austria — National Assembly
Bahamas — General Assembly
Bahrain — Consultative Council
Bangladesh — Jatiya Sansad
Belize — National Assembly
Bhutan — Tshogdu
Bolivia — National Congress
Brazil — National Congress
Brunei — National Assembly
Botswana — National Assembly
Britain — Parliment (House of Common’s & House of Lords)
Bulgaria — Narodno Subranie.
Cambodia — National Assembly
Congo Democratic — Rep. of National Legislative Council
Colombia — Congress
Canada — Parliament
China — National People’s Congress
Chile — Chamber of Deputies and Senate
Comoros — Legislative Council and Senate
Costa Rice — Legislative Council and Senate
Crotia — Sabor
Cuba — National Assembly of People’s Power
Czech Republic — Chamber of Deputies and Senate
Denmark — Folketing
Ecuador — Natinal Congress
El Salvador — Legislative Assembly
East Timor — Constituent Assembly
Ethiopia — Federal Council and House of Representative
Egypt — People’s Assembly
Fiji Islands — Senate & House of Representative
France — National Assembly
Finland — Eduskusta (Parliament)
Germany — Bundestag(Lower House),Bundesrat(UpperHouse)
Guyana — National Assembly
Greece — Chamber of Deputies
Hungary — National Assembly
Iceland — Althing
India — Parliament
Indonesia — People’s Consultative Assembly
Iran — Majlis
Iraq — National Assembly
Israel — Knesset
Italy — Chamber of Deputies and Senate
Japan — Diet
Jordan — National Assembly
Korea(North) — Supreme People’s Assembly
Korea(South) — National Assembly
Kuwait — National Assembly
Kenya — National Assembly
Laos — People’s Supreme Assembly
Labanon — National Assembly
Lesotho — National Assembly and Senate
Lithuania — Seimas
Luxembourg — Chamber of Deputies
Liberia — National Assembly
Libya — General People’s Congress
Malaysia — Dewan Rakyat and Dewan Negara
Maldives — Majlis Madagascar — National People’s Assembly
Mongolia — Great People’s Khural
Montenegro — Federal Assembly
Mozambique — People’s Assembly
Myanmar — Pyithu Hluttaw
Nepal — National Panchayat
Netherlands — The State General
Norway — Storting
New Zealand — Parliament (House of Representative)
Oman — Monarchy
Pakistan — National Assembly & Senate
Paraguay — Senate & Chamber of Deputies
Philippines — The Congress
Papua New Guinea — National Parliament
Poland — Sejm
Romania — Great National Assembly
Russia — Duma & Federal Council
Serbia — Federal Assembly
Senegal — National Assembly
Seychelles — People’s Assembly
Somalia — People’s Assembly
South Africa — Rep. House of Assembly
Spain — Cortes
Sweden — Riksdag
Saudi Arabia — Majlis Al Shura
Sudan — National Assembly
Switzerland — Federal Assembly
Syria — People’s Council
Turkey — Grand National Assembly
Tunisia — National Assembly
USA — Congress
Vietnam — National Assembly
Venezuela — National Congress
Zaire — National Legislative Council
Zambia — National Assembly.

வியாழன், 12 செப்டம்பர், 2019

பலி..வினாடி கதைகள்...ஜானி சின்னப்பன்


அடர்ந்த இருளோடு இருளாக நன்கு திட்டமிட்டிருந்தபடியே கோயிலுக்குள் நுழைந்து புரனமைப்பு பொருட்கள் மத்தியில் ஒளிந்து கொண்டிருந்து தக்க சமயத்தில் வெளியேறி கோயில் காவலனைக் கொன்று விட்டு தடுக்க வந்த பூசாரியை தலையில் அடித்து வீழ்த்தி  கோவில் நகைகளைக் கொள்ளையிட்டுக் கொண்டு சுவரேறிக் குதித்தவனை நேர்கீழே புதுப்பித்து அன்றுதான் நடப்பட்டிருந்த சூலம் பளபளப்போடு மின்னியபடியே வரவேற்றது..

நிஜ முகமூடி..வினாடி கதைகள்...ஜானி சின்னப்பன்

செயினைப் பறித்துக் கொண்டு பறந்த இருவரில் ஒருவன் முகமூடி அணிந்திருந்தான் என்ற தகவலை வைத்து அவ்வழியே போன அத்தனை ஆசாமிகளையும் விரட்டிப் பிடித்தது போலீஸ்..அத்தனை பேரையும் தனித்தனியே விசாரணை செய்தனர்..ஒரேயொருவன் நான் யாரும் அறியாமல் யாருக்காவது உதவி தேவைப்பட்டால் செய்ய நினைத்து  கட்டிப் போனேன் என்றான்..உடனே கைதானான்..

ஆசிரியர் குறிப்பு: முகமூடி அணிந்து சாதனைகள் புரிந்து வலம் வரும் ஹீரோக்களை பற்றி வாசித்து இரசிக்கும் காமிக்ஸ் பட்டாளத்துக்கு இந்த கதை தெளிவாக புரியும்.. நிஜம் வேறு நிழல் வேறு என்பதை புரிய வைக்கும் முயற்சியே இக்கதை..

ஸ்கேன்..வினாடி கதைகள் வரிசை..ஜானி சின்னப்பன்


அந்த வீட்டுக்குள் ஆளில்லா சமயமாகப் பார்த்து உள்ளே புகுந்து விடு.. அந்த ரகசிய பைலை தேடி கண்டுபிடி.. முழுவதுமாக ஸ்கேன் செய்.. எடுத்த இடத்தில் வைத்துவிட்டு திரும்பி வந்துவிடு..  தகவலை பெற்றுக்கொண்ட மதிவாணன் சமயம் பார்த்து அந்த விஞ்ஞானியின் வீட்டுக்குள் சுவர் ஏறி குதித்தான். பைலை தேடி எடுத்தான்.. ஒவ்வொரு பக்கமாக பொறுமையாக ஸ்கேன் செய்யத் துவங்கினான் பத்து பக்கங்கள் தாண்டுவதற்குள்ளே ரசாயன வாயு தாக்கி இறந்து போனான். தனது இரகசியத்தைக் காக்க விஞ்ஞானி செய்திருந்த ரகசிய ஏற்பாடு அது. 

புதன், 11 செப்டம்பர், 2019

உதிர்ந்த மலரே..என்நண்பா..!


முன்குறிப்பு:வணக்கங்கள் வாசக உள்ளங்களே...இது என் நண்பனைக் குறித்த என் கவிதை. மது அரக்கனை அரவணைத்துப் பாழும் நரகத்தில் விழுந்துபோன ஒரு நட்பைக் குறித்த கவிதை..)

உதிர்ந்துபோன மலரே என் நண்பா..
மொட்டாக்கி மலர்க்காம்பில் உனையமர்த்த முயற்சித்த மூடன் நான்..

திரும்புமா மலராய் நீ பூத்துக் குலுங்கிய நற்காலம்..
போய்விட்ட வசந்தத்தை வடம்பிடித்து இழுத்திடல்தான் சாத்தியமோ?

வீசிச் சென்ற தென்றலை
மீண்டும் என்மீது வீசென்று
கட்டளை நீ இட்டுவிடத்தான் முடியுமோ?

இழந்த என்நட்பை புதுப்பித்துக் கொள்ளல் மட்டும் சாத்தியமானதேனோ?

என் பாசமழை  எத்தனையெத்தனைமுறை உனை
அன்போடு நனைத்ததென நீ மறந்துபோன மாயமென்ன?

திருந்துவாய்  மாறிடுவாய் என பறவைக் குஞ்சின் ஏக்கத்தோடு திறந்த வாயாய் என் இதயம் துடித்திருந்ததே..

வாழ்வின் வசந்தத்தை மீட்டுக்கொள்வாய் அமைதி
உன் நெஞ்சில் குடியமருமென நம்பித் தொலைத்திருந்தேனே...

உன்பால் நம்பிக்கையைக் கைவிட்ட கடைசி நண்பனின் அறிவுரையை காதில் வாங்கியும் கைவிடாதிருந்தேனே..

இனியும் வருவாய் மதுவென்னை வென்றதென புலம்புவாய்..அப்பாவி முகமூடி கொண்டு பாவமென நிற்பாய்..

எல்லாவற்றையும் முற்றிலும் மறந்து என் மனம் உன்னை வரவேற்றிடும்.. என் இல்லாளும் இல்லாத அதிசயமாய் பாவங்க அவரை விரட்டாதீங்க என்பாள்..

உன்னோடு பழகிப் புளித்துப் போன என் அன்புத் தம்பியோ திருந்தமாட்டான்  அவனை விட்டொழியேன்  என்பான்..

இதோ இன்னொரு முறை நீ வந்து நிற்பாய் என் வாசலில் அத்தனையும்
இன்னும் ஒருமுறை அரங்கேறும்..ஆனால்..ஆனால்..

நீ இழந்த மறைந்த உன் காதலும் மனைவி பிள்ளைகளுமாய் அந்த வாழ்வும் சந்தோஷமும்  திரும்பி அமையாதா ஒருமுறை..

ஒவ்வொரு நொடியும் என் முழு ஆன்மாவும் உனக்காக இறைவனிடம் தவிப்பதை நீ அறியமாட்டாய்தான்..
வா உன்னை தவிர்க்க முயற்சிக்கிறேன் இம்முறையாவது..

(முன் அனுமதியின்றி பிற தளங்களில் பகிர வேண்டாம் நண்பர்களே.. விரைவில் ஒரு பத்திரிக்கையில் பிரசுரமாகவிருக்கிறது. நன்றி..)

இந்த பதிவுக்கு
நண்பர் திரு.நீதிதாஸ், திருவண்ணாமலை அவர்களது கருத்தை இங்கே பதிவு செய்கிறேன்..
எனக்கும் ஒரு நண்பர் இருந்தார் காவலரே.புத்தகப்பிரியர்.செயல்வீரர்.அரசின் நற்பதவி.இத்தனை இருந்தும் போதையின் பாதையில் சென்றார்.உரமான உடலை மது ஒழித்தது.போதைப்பாக்கெனும் பொல்லாவழக்கத்தால் மரணமெனும் நாகம் அவர் வாயில் புற்றிட்டுக் குடியேறியது.என்புதோல் போர்த்த உடம்பாய் உயிரற்ற கூடாய்க் கிடத்திவைத்திருந்தனர்.வாய்விட்டு அழுதேன்.அடைக்க நினைத்தாலும் கண்ணீர் ஆறாக ஓடியது.ஓலமிட்ட என்னைப்பார்த்து அக்கம்பக்கத்தினர் பேசிக்கொண்டனர் யாரோ நண்பனாம் என்று.இரு சிறுமிகளை அணைத்தபடி அவர் மனைவி சுருண்டு அழுதுகொண்டிருந்தார்.அவர் தாயும் தந்தையும் தம்பியும் என்னைப் பார்த்து அழுதனர்.அவர்களின் முகம் பார்க்க முடியாமல் தலைகுனிந்தேன்.எத்தனையோ சொன்னேனே கேட்கவில்லையென்று எப்படிச்சொல்வேன்? கூடிக்குடித்தவர்களும் வாங்கிக்கொடுத்தவர்களும்கூட வந்திருந்தனர் சாவிற்கு.அடுத்த இருமாதங்கள் தனிமையில் அவர் குரல் கேட்டு எழுந்த இரவுகள் ஏராளம்.என்னைத் தேடிவந்தாரா? என்ன சொல்ல வந்தார்? இன்றுமுதல் தெரியவில்லை.அவரைப்போல யாரையேனும் பார்த்துவிட்டால் மனம் கலங்கும்.கண்கசியும்.
நன்றி சார்.. 

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

ஓ அமேசான் காடே..

பற்றி எரியுது அங்கொரு காடு..
ஆங்கே பறவைகளுக்கில்லை இனியொரு கூடு..
விலங்குகள் மறந்தன தம் சொந்த வீடு..
அமேசானியரை
அகதிகளாக்கியது
அவர்தம் நாடு...
அவர்க்கொரு தீர்வை
இறையே சீக்கிரமே கொடு...
😭😭😭

சனி, 17 ஆகஸ்ட், 2019

நிலையாமை..


ஒருவரையும் விடுவதில்லை விதி.. புரியாதவரே ஆட்டம் போடுகிறார்..புரிந்தவர் வாழ்வை கொண்டாட்டத்தோடு கடக்கிறார்..ஒரு தும்பியின் மரணமும் இழப்பே இந்த பிரபஞ்சத்தில்..#வாழ்வதிகாரம்..

அத்திவரதரைத் தவிரவும் வேறுண்டு காஞ்சியிலே..

வணக்கம் தோழமை உள்ளங்களே..
அத்திவரதர் பற்றி ஆயிரக்கணக்காக தகவல் வந்து குவிந்திருக்கும் உங்கள் இன்பாக்ஸில்.. காஞ்சிபுரம் கோவில் நகரம்..இங்கே பல்வேறு மன்னர்களில் பாதம்பட்டிருக்கிறது.. எத்தனையோ சம்வங்களைதத் தாங்கி நிற்கும் நகரம். இந்த நகரத்தின் இன்னொரு முகத்தைக் காட்டும் பதிவுதான் இது.
ஒற்றை சிலையை தண்ணீரில் வைத்து நாற்பதாண்டுகள் பாதுகாத்து தரிசனத்துக்கு வைக்கும் பாங்குள்ள மனிதர்கள் நிறைந்திருக்கும் காஞ்சியிலே இதுபோன்று அனாதரவாய் விடப்பட்டுள்ள வரலாறு பேசும் கல்வெட்டுகளை மீட்டெடுத்து அருங்காட்சியகங்களில் பாதுகாப்பாக வைத்து அல்லது இங்கேயே ஒரு அருங்காட்சியகம் அமைத்தால் எத்தனை நன்றாக இருக்கும்?!? சம்பந்தப்பட்ட மாநகருக்கான வருமானத்தையும் அது சம்பாதித்து தருமென்பதில் சந்தேகமேது?!
அந்த வருவாயை இழத்தல் தகுமோ?!?

கல்வெட்டு ஆய்வாளர்கள் எவரேனும் தங்கள் நண்பராக இருப்பின் தயவு செய்து இந்த கல்வெட்டின் அர்த்தத்தை கேட்டு சொல்லுங்கள்..



காஞ்சி புரம், மடம்தெருவில் உள்ள இது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகத்தானிருக்க வேண்டும். இத்தகைய அபூர்வங்களை நகர நாகரிகத்துக்கு பலியாக புதைபட விடுதல் தகுமா?! ஆய்வாளர்கள் தயவுசெய்து மீட்டெடுங்கள். ஒரு தமிழனாக எனது இந்தப் பதிவை செய்துள்ளேன். நீங்களும் இதனை உரியவர்கள், தகுந்தவர்கள் கண்ணில் தென்படும்வரை ஷேர் செய்யுங்கள்...
நன்றி..

சனி, 3 ஆகஸ்ட், 2019

புதுமைப்பித்தனின் கபாடபுரம் காமிக் வடிவில் http://aroo.space/2019/07/17/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%aa/
நன்றி ஒரிஜினல் அப்லோடருக்கே..

ஆசிரியர் என்பார்யார்?!?


நானெல்லாம் இன்றைக்கு ஒரு நிலைக்கு வந்து வாழ்க்கையை சிறப்புற வாழ்கிறேனென்றால் என் ஆசிரியப் பெருந்தகைகளே அதற்கு முழுமையான காரணம்.. ஹாஸ்டல் வார்டன்களாக அண்ணனாக செயல்பட்டும் பள்ளி ஆசானாக வாய்ப்புகளை தந்தும் என்னை இயக்கிய உயர வைத்த அந்த நல்ல உள்ளங்களை எப்போதும் நன்றியோடு நினைத்து பார்ப்பேன்.. திரு மற்றும் திருமதி சிம்சோன் தம்பதியினர் திரு.தேவாசீர்வாதம்,  திரு.சவரிமுத்து, திரு.அந்தோணிசாமி, திரு.ஏகாம்பரம், திரு.சம்பத், திரு.ஏழுமலை, திரு.தங்கவேலு இன்னும் எக்கச்சக்க ஆசிரியர்களின் வழிகாட்டுதலும் அன்பும் மட்டுமல்ல கண்டிப்பும் பிரம்படியும், காது திருகலும் அதிலும் ஒரு சார் தோள்பட்டை கை ஜாயிண்ட் தசையை பிடித்து இழுப்பார் தவளை போல ஒரு நரம்பு எழுந்து அடங்கும்... முட்டி போடுதல், சேர் இல்லாமலேயே அப்படியே அமரும் நிலையிலிருத்தல், ஏகப்பட்ட கொட்டுக்கள்... அவையெல்லாம்தான் இன்றைக்கு நான் வாழும் கவலையற்ற வாழ்வின் அடிப்படையை உறுதியாக கட்டமைத்தவை.. அன்பார்ந்த மாணவமணிகளே..ஆசிரியரை அவமதித்தென்ன லாபம்.. அவரது அறிவுரையே உங்களுக்கான நல்வேதம்..அலட்சியப்படுத்தாதீர்..ப்ளீஸ்..ஜானி சின்னப்பன்..

ஈகிள் கேர்ள்-உதித்து விட்டாள்-புதிய வரவு

  வணக்கங்கள் அன்பு இரசிகர்களே.. புதிதாக கோவையில் இருந்து எசென்ஷியல் பப்ளிகேஷன்ஸ் வாயிலாக அறிமுகமாகி இருக்கிறாள் புதிய நாயகி ஈகிள் கேர்ள். இர...