ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

இவண், இன்னுமோர் இதயம் தொலைத்தவன்!

இயந்திர உலகில்
இதய  மிக்கோர்
இல்லையென
இடித்துரைப்போர்
இங்குண்டு!
இதே இயந்திர
உலகினில்
இதயம் தொலைத்து
இவரும் ஈண்டு
இருப்பதை மறந்து...

இனியோரையும்
இகழ்ந்துரைத்தல்
இதுவும் இன்னொரு
இன்பமே
இவர்தமக்கு
இதுவன்றோ
இந் நகர மாந்தரின்
இருதய எண்ணம்
இதுவன்றோ
இவர்தம் காட்சிப் பிழை
இவருமே இதில்
இரண்டறக் கலந்து
இயைந்திருப்பதை
இனியுமா  உணர்வார்

இவர்?

2 கருத்துகள்:

  1. நல்லா இருக்கு போலிஸ்கார்.... ஆனா பிரியலை..

    பதிலளிநீக்கு
  2. ha ha ha புரிந்து விட்டால்தான் நம்ம ஆளுங்க அதைக் கவிதை என்று ஏற்பதில்லையே? நகரத்து மாந்தர்களின் மனப்போக்கின் குறுக்கு வெட்டுத் தோற்றம்தான் இது (ஹீ ஹீ ஹீ இதுவும் பிரியாது)

    பதிலளிநீக்கு

Super Tex 56. I Demoni Del Lago -june issue

  வணக்கங்கள் வாசக வாசகியரே.  வரவிருக்கும் இத்தாலியன் வெர்ஷன் சூப்பர்  டெக்ஸ்: ஏரியின் பேய்கள்  விடுவிக்க ஒரு கைதி, கடக்க ஒரு சாபமிட்ட ஏரி: ட...