செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

லயன் காமிக்ஸ் 22-ஆவது ஆண்டுமலர் லக்கி லூக் சாகசம்


"Don't be afraid of the space between 
your dreams and reality. If you can 
dream it, you can make it so." 
- Belva Davis 



 

              அன்பான  நண்பர் கூட்டங்களே! லயனின் நியூ லுக் வெளிவந்து பரபரப்பாக விற்பனையாகி கொண்டிருக்கும் இந்த கலக்கலான  காலக் கட்டத்தில் பழைய ஆனால் என்றும் மனதில் மகிழ்வை கொண்டாட்ட மனோபாவத்தினை கொண்டு வரும் ஒரு காமிக்ஸ் உடன் வந்திருக்கிறேன். ஒரு காலத்தில் வீட்டுக்கு ஒரு புது புத்தகம் வந்து விட கூடாது. உடனே இது என் புக்கு என்று அடிதடி நடக்கும், என் வீட்டில். ம்ஹ்ம்! அது ஒரு நிலாக்  காலம்!

   
     நம்ம நகைச்சுவை கௌபாய் லக்கி லூக் கின் அதிரடியில் அட்டகாசமான சாகசம்தான், சூ! மந்திரக் காளி!   இந்த கதையின் ஹீரோ பட்டர் பிங்கர்ஸ் என்னும் திருட்டு விரல்களை உடைய அப்பாவி (அடப்பாவி எனும் சந்தர்ப்பங்களும் சில இடங்களில் அமைகின்றது) மனிதன். இவன் பார்க்க ஒரு நாகரிகம் மிக்க மனிதனாக தோன்றுவது அருமையாக சித்தரிக்கப்பட்டு உள்ளது! ஆனால் நம்ம டால்டன் பயல்களுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டி இருக்கிறதே. அதுதான் கதைக் களம். இந்த அப்பாவி மனிதனுக்கு ஆப்பு வைப்பதே அவனது விரல்கள்தான். அவை அவனுக்கு திருட்டு பட்டம் ஈட்டி தர, விளைவு? சிறைச்சாலைக்குள் தள்ளப்படுகிறான்!


உள்ளே போகும்போதும் ஷெரிப்பின் ஸ்டாரையே ஆட்டைய போட்டு விடுகின்றன அவனது தங்கமான விரல்கள்!  அவனுக்காக சிறைச்சாலை சாவியை கூட களவாண்டு விடுகின்ற தனித்திறமை படைத்த அவனுக்கும் சக தோழர்களாக டால்டன்கள். சும்மா விடுவார்களா? வலிய வந்த வாய்ப்பினை? வெறும் ஸ்பூன் துணை கொண்டு வெஞ்சிறையை தோண்டி தப்பிக்கும் தினவெடுத்த தோள்களோடு இருக்கும் அவர்களுக்கு, வழிய விதி செய்த உதவி சதியாக காஸ்டனை, அதாம்பா நம்ம மாஜிக் மாமன்னன் நிஜப் பேரு, கொண்டு வந்து சேர்க்கிறது. சாவியை வாங்கி சிறையைத் திறக்க முயற்சி மேற்கொள்ளாமல் அதனை கொண்டு சிறையை தோண்ட நம்மாளு ஆவ்ரேல் டால்டன் ஒரு ஐடியா கொடுத்தாலும் கொடுப்பான், பயங்கர சிரிப்பலைகளை தோற்றுவிக்கும்     காமெடி.


 இதுபோன்ற பல அதிரடி நகைச்சுவை காட்சிகளுடன் வெளியாகி பட்டையைக் கிளப்பிய புத்தகம் உங்களுக்கும் உரிமையாக வேண்டுமா? இன்னும் அதற்கொரு வாய்ப்பு இருக்கு நண்பர்களே!!!!


இந்த புத்தகம் இன்னும் நம்ம லயன் காமிக்ஸ் அலுவலகத்தில் இருக்குங்க! முழு வண்ணத்தில் வெறும் பத்து ரூபாய் விலையில! உடனே போனை போடுங்க சிவகாசிக்கு! நியூ லுக் ஸ்பெஷல் ருசித்திருப்பீர்கள். அதே ஆனந்தம் ரூபாய் பத்து விலையில் கண்டிப்பா கிடைக்கும்.
லயனின் இருபத்தெட்டாம் வருட பிறந்த நாளுக்கு நமது ரசிக வாசக நண்பர்கள் சார்பில் ஒரு பூங்கோத்தினை வாழ்த்துக்களுடன் இங்கே அளிக்கிறோம்! 

அப்புறம் நம்ம தோழர்கள் நிறைய பதிவிடுறாங்க! அவர்களின் கடுமையான பணிகளுக்கு மத்தியிலும் இவ்வாறு கலை சேவை! காமிக்ஸ் சேவை! செய்து வருகிறார்கள் அவர்கள் அனைவரும் என் வாழ்த்துக்கும் மரியாதைக்கும் உரியவர்கள்! அவர்களுக்கு என் நன்றிகள்! திரு.சௌந்தர் அவர்கள் அட்டகாசமான மாயாவியின் கதைகளை தேடி தேடி பதிவிடுறார்! சிறப்புற இன்னும் நிறைய கொண்டு வர என் வாழ்த்துக்கள்! அவரது அனைத்து முயற்சிக்கும் தோள் கொடுங்க நண்பர்களே! காமிக்ஸின் பெருமை இன்னும் விரிவடையட்டும்! காமிக்ஸின் அருமை பெருமைகளை இன்னும் உயிர் துடிப்புடன் வைத்து இருக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள்! இன்னும் உரக்க முழங்குவோம்! 
அப்புறம் சந்திக்கிறேன்!  
கொஞ்சம் விரிவாக அப்புறம் பதியறேன் ஜி! கோச்சுக்காதீங்க!
அதுவரை பிரிய மனமில்லாமல் பிளஸ் நேரமில்லாமல் .......ஜானி

கீழே நீங்க காண்பது சும்மாதான் சோதனை முயற்சி நண்பர்களே!
நீங்க கடுப்பானா அதற்கு அதற்கு நான் மட்டுமே காரணம் அல்ல! 
ஹி! ஹி! ஹி!     
 இதுக்கு பேருதான் கவிதை ---  

நட்டு கழண்ட நட்புக்கு!
"வெட்டியது ஒட்டாமல் போகுமெனில் அது உயிரும் அல்ல!
பழகியது பொய்யாகுமெனில் அது உண்மையான நட்பும் அல்ல!
நான் என்றும் உன் நண்பன்!


நீயே வெறுத்தாலும் .......நட்பே!!"




சேட்டை நான்சி_அறிமுகம்

 வணக்கம் தோழர்களே..  இன்றைய சிறு அறிமுகம் இந்த நான்சி.. அவளது சேட்டைகளை அட்டையிலேயே காண்பித்திருக்கிறார்கள்.. வாசித்து இரசியுங்கள்..  என்றும...