புதன், 17 செப்டம்பர், 2014

www.jw.org வழங்கும் சிறுவர்களுக்கான விவிலிய சித்திரக்கதைகள்!!!

பிரியமானவர்களே, இனிய வணக்கங்கள்!
நண்பர் ஸ்ரீராம் பெங்களூரில் குடியேறி விட்டார். நண்பரது தொடர்ச்சியான வெற்றிகளுக்கு என் நல்வாழ்த்துக்கள்! நண்பர் "தமிழ் காமிக்ஸ் டைம்ஸின்" ஒரு அட்மினாக தொடர்வது நீங்கள் அறிந்ததே. தொலை பேசியில் அங்கிருந்து யேகோவா விட்னஸ் சபையின் பிரத்யேக வலை தளத்தில் சிறுவர் இலக்கியத்தில் விவிலிய கதைகள் வெளியாகி வருகின்றன போய் பாருங்கள் என்று அவர் பரிந்துரைத்ததின் பேரில் அதில் சென்று பார்த்தால் சிறுவர்களுக்கு தனிபகுதி, இளைஞருக்கு தனிப் பகுதி, பெரியவர்களுக்குத் தனிப்பகுதி என பிரித்து வைத்துள்ளனர். அதில் ஆங்கிலப் பகுதியில் மட்டும் இந்த சித்திரக் கதை சில கதைகளுடன் இடம் பெற்றிருந்தது. மகிழ்ச்சியாக அள்ளிக் கொண்டேன். இதே தளத்தின் தமிழ் பகுதியில் காமிக்ஸ் காணப்படவில்லை. ஒரு வேளை அங்கே தமிழ் மொழி பெயர்ப்புக்கு ஆள் கிடைக்கவில்லையோ? நமது வாசகர்களில் ஒருவேளை யெகோவா சாட்சிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இருப்பின் தயவு செய்து தமிழ்ப்படுத்தப் பட்ட இந்த கதையை வெளியிட சொல்லலாமே? நன்றி நண்பர்களே! 
விவிலியம் கூறும் சரித்திரத்தில் பண்டைய இஸ்ரேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து மோசேயால் இறைவனது வழிகாட்டுதலின்படி மீட்கப்பட்டு வனாந்திரத்தில் சென்று கொண்டு இருந்தபோது சீனாய் மலையின் அருகில் கூடாரமிட்டுத் தங்கினார்கள்! அப்போது மோசே இறைவனது அழைப்பை ஏற்று சீனாய் மலைக்குத் தனியனாகப் புறப்பட்டு செல்கிறார். அவர் திரும்ப வெகு காலமாகிறது. மக்கள் தங்களது பொறுமையை இழந்து தங்களை வனாந்திரத்திலிருந்து வெளியே கொண்டு சேர்க்க இறைவனது வழிகாட்டுதலுக்குக் காத்திராமல் தங்களது சுய சிந்தனையின்படி ஒரு கன்றின் உருவை மோசேயின் சகோதரர் ஆரோனை மிரட்டி செய்து வாங்கி அதனை ஆராதிக்கின்றனர். அதனால் இறைவனது கோபத்துக்கு ஆளாகி நாற்பது வருடங்கள் வனாந்திரத்தில் அலைய நேர்கிறது. அந்த நிகழ்ச்சியை இந்த குறு சித்திரக்கதை விவரிக்கிறது.  


மீண்டும் சந்திக்கும்வரை விடை பெறுவது உங்கள் நண்பன் ஜானி!


திங்கள், 15 செப்டம்பர், 2014

விநாயக விஜயம்!

வணக்கம் நண்பர் படைகளே!
சென்னை மாரியம்மன் விழா, தீ மிதி என்று திமிலோகப் பட்டுக் கொண்டு இருக்கும் அதே நேரத்தில் விநாயகரும் தன் பங்குக்கு மக்களைக் கவர்ந்து சென்றார்! மொத்தத்தில் சென்னையில் இது திருவிழாக் காலம்!















நல்ல நட்பு கிடைத்த மகிழ்ச்சியில் எனது நாயை போட்டோ எடுத்து போடு தம்பி என ஒரு அக்கா அன்போடு கேட்டுக் கொண்டதற்கிணங்க....
பைரவர் பிரசன்னம்....




ஜெய் ஆஞ்சநேயா! பிள்ளையார் திருவிழாவில் சிறப்பு விருந்தினர்!



தேங்காய் பிள்ளையார்!

விற்பனை கொஞ்சம் சுமார்தான் இம்முறை. மீதிப் பிள்ளையார்கள் இங்கே கரைப்புக்குக் காத்திருக்கிறார்கள். 


என் காப்பில் இருந்த பிள்ளையார் கரைக்கப்பட வண்டி ஏறுகிறார்.

பட்டினப்பாக்கத்தில் ராட்சத கிரேன் காத்திருக்கிறது. தேவரைக் கரைக்க அரக்கன் காத்திருப்பது (?) இயல்புதானே!!!! ஆனால் அடுத்த வருடம் வரை அரக்கனுக்கு இங்கே வேலை இல்லை! 












டாட்டா பை!





இன்னொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன் நண்பர்களே!


வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...