வணக்கங்கள் தோழமை உள்ளங்களே..
நீங்கள் இப்பகுதிக்குப் புதியவரா? சித்திரக்கதைகள் குறித்த ஆர்வமில்லாதவரா? இதற்கு முன் பதிவினை வாசித்து விட்டுக் கடந்து சென்று விடலாம். இது சித்திரக்கதைகள், காமிக்ஸ்கள் மீதான ஆர்வம், நேசம், வெறி கொண்டோருக்கு மட்டும் தனிப்பட்ட சில தகவல்களை உள்ளடக்கிய பதிவு. தங்கள் வரவுக்கு நன்றி..
வணக்கம் மீண்டும் கடந்து வந்த காமிக்ஸ் இரசிகப் பெருமக்களுக்கு..
சமீபத்தில் ஒரு முக நூல் பக்கத்தை ஒரு நண்பர் ஆர்வத்துடன் துவக்கி தனது அத்தனை புத்தகங்களையும் சிறிது சிறிதாக அட்டை, உள் பக்கங்கள், விவரங்கள், கதையின் துவக்கப்பகுதி, முடிவுப் பகுதி அனைத்தையும் புகைப்படங்களாக வெளியிட்டு மனமகிழ்ச்சி கொள்ள செய்தார்.. அவரைப் போன்று இன்னும் சிலர் இதனை ஒரு தவமாகவே கருதி செய்து வருகின்றனர். அவர்கள் வைத்திருப்பதைப் பெருமையாகக் காட்டிக் கொள்வதற்காகத்தான் இப்படி செய்கிறார்கள் என்று அவரை யாரோ இகழ்ச்சியாகப் பேசி இருக்கிறார். அவரோ மிகவும் எளிய மனம் கொண்டவர்.. மனமுடைந்து போய் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்து விட்டார் அவரது பக்கத்தில்..
சித்திரக்கதைகள் ஒரு கட்டத்தில் மக்களின் பெரிய பொழுது போக்கு அம்சமாக இருந்ததும் பின்னர் காலப்போக்கில் இன்றோ ஆயிரங்களில் மட்டுமே குறுகலான வாசகர் வட்டம் கொண்டதாகவும் சுருங்கிப் போய் எப்போதோ ஒரு புதிய பதிப்பகம் வருவதும் பின்னர் காணாமல் போவதும் என்கிற நிலை இன்றுவரை தொடரவே செய்கிறது. அந்த சித்திரக் கதைகளின் பொற்காலத்தில் வந்த புத்தகங்களை எங்கோ யாரோ ஸ்கான் செய்வதும் பின்னர் ஏதோ ஒரு விதத்தில் வாசிக்க வாசகர்களுக்குக் கிடைப்பதும், புது முயற்சிகளும், ஆன்லைன் வாசிப்புகளும் என்று அடுத்த கட்டத்தை நோக்கிய பயணங்களும் சாத்தியமாகிக் கொண்டே இருக்கும் இந்தக் காலக் கட்டத்தில் சேகரிப்பாளர்கள் கொடுத்த ஆதரவும், ஊக்கமும் மாத்திரமே இது போன்ற சாதனைகளை முன்னகர்த்திக் கொண்டு போனதை சராசரி வாசகர்கள் என்றைக்குமே மறந்து விடக்கூடாது. ஒரு புத்தகத்தைத் தேடி மாவட்டம், மாவட்டமாக, மாநிலம் மாநிலமாக அலைந்த நண்பர்களும் நம் மத்தியில் உண்டு. அனைவரது ஆதரவும், அன்பும் என்றைக்கும் தொடர வேண்டும் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக் கொண்டு அந்த நண்பர் தனது பணியினைத் தொடர வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்.
சோதனைகள் என்பது இன்று, நேற்றல்ல நண்பரே எத்தனையோ சோதனைகள், உறவுகளால் கூட நம்மைப் புரிந்து கொள்ளாத நிலை வரும்..
உதாரணமாக என் உறவு ஒன்று தன் கருத்தைப் பதிவு செய்த நாட்குறிப்பின் பக்கத்தை உங்களுடைய பார்வைக்குக் கொண்டு வருகிறேன்..

இந்த வெறுப்புக்கு நான் என்ன செய்ய முடியும்? நான் காமிக்ஸ் வாசிப்பதும், அது தொடர்பான ஆலோசனைகளும், அது தொடர்பான எதிர்காலத்தை யோசிப்பதுமாக என் வாழ்வின் ஒரு பகுதியை அதில் செலவிட்டிருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் அது என் ஹாபி.. தபால் தலை சேகரிப்புகளும்,
நாணய சேகரிப்புகளும் எப்படி பாராட்டப்படுகிறதோ அதே போன்று சித்திரக்கதை வாசிப்பும் பாராட்டப்படாமல் போகாது என்பதற்கு உதாரணமாக அடுத்து வருவது மறைந்த எனது அன்புத் தம்பியருள் ஒருவரான நீங்கள் நன்கறிந்த நண்பர் சங்கி ஓம் என்கிற செல்லப் பெயர் கொண்ட ஓம் சங்கர். தற்போது நம்மிடையே அவரில்லாமல் போனாலும் அவரது எழுத்துக்கள் கடித ரூபத்தில் என்னோடு அவர் இருப்பதான உணர்வையே தந்து வருகிறது. அந்தக் கடிதமும் உங்கள் பார்வைக்கு...
சன் டிவியில் ஒரு முறை காமிக்ஸ் வாசகர்களை அழைத்து பிரபலமான பவுன்சரின் இதழ் வெளியிடப்பட்டது. அந்த சமயத்தில் நான் அணிந்திருந்தது சங்கர் எனக்கு அனுப்பி வைத்திருந்த அன்பளிப்பான டி சர்ட் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.
இந்தியா டுடே தமிழ் பதிப்பில் ஒரு கட்டத்தில் நமது சித்திரக்கதை பற்றிய அலசலும் வலையில் வாழும் பாத்திரங்கள் என்கிற கட்டுரையும் எழுதியிருந்தனர்...
அது இதோ உங்கள் பார்வைக்கு...
அதில் மத்தியில் பார்த்தீர்களானால் நீங்கள் வாசிக்கும் இந்த வலைப்பூவினையும் ஒன்றாக சேர்த்திருந்தனர்.. இதுதான் நான் கடந்த பாதை.. இன்றைக்கும் பல்வேறு சோதனை முயற்சிகளும், பயிற்சிகளும் இருக்கும் இதழ்களை எந்த அளவுக்கு உயர்த்திப் பிடிக்க வேண்டுமோ அந்த அளவுக்கு உயர்த்திப் பிடித்தே வருகிறது இந்த வலைப்பூ...
நிற்க.. அவமானங்களையும், அலட்சியங்களையும் எண்ணாமல் எந்த நோக்கத்தைக் கையிலெடுத்தொமோ அந்த நோக்கத்துக்கு மரியாதையும், மதிப்பும் சேர்க்கும் வண்ணம் நமது பாதையை அமைத்துக் கொள்வது என்றைக்குமே தவறு கிடையாது. அது மற்றவர்களுக்குப் பிடிக்கிறது, இல்லை என்பது நம்மை எப்போதும் தடை செய்ய அனுமதிக்காதீர். இதனை அந்த நண்பருக்கு உணர்த்தவே இந்தப் பதிவு... சரி மற்றவர்களுக்கு?
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி சின்னப்பன்.
சரி சரி என்னடா பலத்த பீடிகையுடன் ஆரம்பிச்சானே.. புது மேட்டரா இருக்குமோ என்று இது வரை வந்த புது ஆசாமிகளா நீங்கள்?
அப்படியே ஒரு கட்டுரையைத் தருகிறேன் வாசித்து விட்டுத்தான் போங்களேன்? தப்பே இல்லைங்க..
அவ்ளோதான்.. போய் அப்புறமா வாங்க...